ஒரு பள்ளியை இடித்தவர் 90 பள்ளியை கட்டியுள்ளார்.
1992ல் பாபரி பள்ளியை உடைப்பதில் மும்முரமாக நின்றவர் பல்பீர் சிங். இவரது நண்பரான ரன்வீரும் இவரோடு சேர்ந்து பள்ளியை இடித்தார். செய்த தவறுக்கு மனம் வருந்திய இருவரும் அடுத்த வருடமே இஸலாத்தை ஏற்றுக் கொண்டனர். பல்பீர் தனது பெயரை முஹம்மது அமீர் என்று மாற்றிக் கொண்டார். இவரது தம்பி மற்றும் இவரது குடும்பமே இன்று இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளது.
பல்பீர் தனது பேட்டியில் கூறுகிறார் 'எந்த ஒரு தவறை செய்பவருக்கும் அதன் குற்றவுணர்ச்சி அவர் மனதில் இருந்து கொண்டிருக்கும். அது போல்தான் எனது மனத்தையும் அந்த பாவச் செயல் அரித்துக கொண்டிருந்தது. சில நேரம் பைத்தியம் பிடித்தவனைப் போல் மாறிக் கொண்டிருந்தேன். குற்றவுணர்ச்சியிலிருந்து மீள்வதற்காக இடித்த பள்ளியைப் போல பல கட்ட வேண்டும் என்று முடிவெடுத்தேன். இன்று வரை 90 பள்ளிவாசல்களுக்கு மேல் கட்டியுள்ளேன். இஸ்லாத்தையும் ஏற்றுக் கொண்டுள்ளேன். என்னோடு பாபரி பள்ளியை இடித்த ரன்வீரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். எனது குடும்பம் முழுமையும் இன்று இஸ்லாத்தில் உள்ளது. எல்லா புகழும் இறைவனுக்கே!' என்கிறார்.
பள்ளியை இடித்த பல்பீர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். பள்ளி இடிக்க காரணமான அத்வானியின் மனதிலும் இறைவன் மாற்றத்தை ஏற்படுத்துவானாக!
இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வர விருக்கிறது. மோடியின் ஆட்சியில் நீதி கிடைக்காது என்பது தெரிந்த விஷயம். எந்த வகை தீர்ப்பாக இருந்தாலும் அமைதி காப்போம். அநியாயக்காரர்களுக்கு எதிராக இறைவனிடம் முறையிடுவோம். பல்பீர் போல கோடிக்கணக்கான மக்கள் செய்த தவறை உணர்ந்து ஏக இறைவனை ஏற்றுக் கொள்ளும் காலம் வரும். அதுவரை பொருமை காப்போம்.
--------------------------------------------------------
நம்பிக்கைகொண்டோரே! பொருமையுடனும் தொழுகையுடனும் இறைவனிடம் உதவி தேடுங்கள்.
நிச்சயமாக அல்லாஹ் பொருமையாளர்களுடன் இருக்கிறான்.
- அல்குர்ஆன் 2:153
No comments:
Post a Comment