Followers

Tuesday, June 16, 2020

சுஹாஸினி ஹைதரின் மனம் திறந்த பேட்டி

பாரம்பரிய பிராமண குடும்பத்தில் பிறந்த நீங்கள் எப்படி இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் ஆதரிக்கிறீர்கள்? என நெறியாளர் கேட்டதற்கு சுப்பிரமணி சாமியின் மகள் சுகாசினி கொடுத்த பதில்கள்...,
"என் தந்தை உட்பட வீட்டில் உள்ளவர்களுக்கு பூஜை புணஸ்காரங்களில் அதிகம் ஈடுபாடு உண்டு. இருந்தாலும் எனக்கு இஸ்லாத்தின் மீது அதிகம் ஈர்ப்பு ஏற்பட்டதற்கு இறைவனே காரணம்.
"நீ நினைத்தவரை உம்மால் நேர்வழியில் செலுத்த இயலாது. தான் நாடியவரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவான்"
(28:56) என்ற வசனத்திற்கு ஏற்ப.,
உருவத்தாலோ, உயர் குலத்தாலோ, யாரும் உயர்ந்தவர் இல்லை யாருடைய உள்ளம் விசாலமாகி இருக்கின்றதோ அவரே உயர்ந்தவர் என்பதை என்னுடன் ஒப்பிட்டு பார்த்தேன்.
எனக்கு உருது மொழி மீது அதிகம் ஈடுபாடு உண்டு. அந்த அடிப்படையில் நான் அடிக்கடி முஷராக்களுக்கு (கவிதை அரங்கம்) செல்வேன் அங்கு பல முஸ்லீம்கள் வருவார்கள் அவர்களிடம் பழகும் போது அன்பு, பாசம், கணிவு, கலந்த பேச்சுகள் என்னை கவர்ந்தது.
இவர்களையா தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், இவர்களுடன் பேச கூடாது, பழக கூடாது என நம்மை தடுக்கின்றார்கள் என கவலை என்னை ஆட்கொண்டது.
குர்-ஆன் வசனத்தை கவிதையாக முஷராக்களில் பாடினார் ஒரு பெண் (ஹுதா) யாரை காப்பாற்ற நினைத்தாலும் சிலந்தி வலையை கேடயமாக கொண்டு காப்பாற்றுவான், யாரை உயர்த்த நினைக்கின்றானோ அவரை கடலை பிளந்து வழி கொடுப்பான், யாருடைய உயிரை எடுக்க நினைக்கின்றானோ கொசுவை கொண்டே உயிரை பறிப்பான்.
இஸ்லாத்தின் மீது தவறான கருத்துகள் திணிக்கப்படுகிறது, உலகம் முழுவதும் தவறான நம்பிக்கையை விதைத்து இருக்கிறார்கள். நான் அதை மாற்ற துடிக்கிறேன், உலகம் முழுவதும் மாற்ற முடியாது என்றாலும் என் வீதியிலிருந்து, என் சுற்றுப்புறத்திலிருந்து மாற்ற போராடுகிறேன்.
ஆரம்பத்தில் இஸ்லாமியர்களுடன் பழக வேண்டாம் என பல உறவினர்களும், தோழிகளும் கூறினார்கள், அவர்கள் கெட்டவர்கள், தீவிரவாதிகள் என கூறி பயந்தார்கள், அவர்கள் பயத்தை மாற்றினேன். தற்போது அவர்களே இஸ்லாத்தை விரும்பி படிக்கிறார்கள், புத்தகங்களை கேட்கிறார்கள், ஆலோசனை கேட்கிறார்கள். அவர்களுக்கும் இஸ்லாத்தின் மீது நம்பிக்கை பிறந்தது.
இஸ்லாம் மிக அமைதியான மார்க்கம், அன்பான மார்க்கம், அழகான மார்க்கம், தூய்மையான மார்க்கம் இதை படிக்க ஆரம்பித்தால் அதை படிப்பவர்கள் அதில் ஒன்றிப்போய், இஸ்லாம் இல்லாமல் இருக்க மாட்டார்கள்" என்றார் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமியின் மகள் சுஹாசினி.
(உமாராணி தமிழ்த்தேசம் அவர்கள் பதிவிலிருந்து 14.06.2018 அன்று நான்【 நன்றி: சகோ. Chitra Jayaraman】பதிவிட்டது)


1 comment:

Dr.Anburaj said...


இந்திய வெளியுறவத்துறை செயலராக இருந்த முஸ்லீம் ஒருவரின் மகனை காதலித்துதிருமணம் செய்து விட்டு இப்படியெல்லாம்் பீலா விடுவது சிலருக்கு வழக்கம்.

நானும்தான் குரானை படி ....படி என்று படித்து பார்த்தேன். என்னை கவரும் படி அதில் ஒன்றும் இல்லை. தவறான கருத்துக்கள் காலத்திற்கு பொருந்தாத கருத்துக்கள் நிறைய இருந்தது.