குரோம்பேட்டையின் நான் வசிக்கும் அபார்ட்மெண்ட்டில் எங்களைத் தவிர மற்ற குடும்பத்தினர் ப்ராமணர்கள். நேற்றைய தினம் அபார்ட்மெண்ட்டில் இரண்டு பேருக்கு நோய்த் தொற்று இருப்பதைக் குறித்து எழுதியிருந்தேன். அந்த இரண்டு பேரில் ஒருவருக்கு இன்று மூச்சுத்திணறல் ஏற்பட்ட பிறகே மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். இதற்கு நடுவே அவரின் மனைவி மகள் எண்பது வயதைக் கடந்த அவரின் அம்மா எல்லோருக்கும் கொரோனா பாசிடிவ். பரிசோதனை செய்து பாசிடிவ் என்று வந்ததுமே மருத்துவமனையில் சேர்ந்திருக்க வேண்டும், அல்லது வீட்டில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவர் கடைக்குச் சென்றிருக்கிறார். ஏ டி எம் சென்றிருக்கிறார். குப்பைக் கொட்டுவதற்காக வெளியே சென்றிருக்கிறார். இதெல்லாம் போதாதென அவர்கள் வீட்டிற்கு வழக்கமாக வேலைக்கு வரும் அக்காவிடம் விஷயத்தைச் சொல்லாமலேயே இரண்டு நாட்கள் வேலைக்கும் வரவைத்திருக்கிறார்கள். இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு வீட்டில் நோய்த்தொற்று உள்ளவரை விசாரிக்க நகராட்சியிலிருந்த ஆட்கள் வர, அவர்கள் வரும் நேரமாக வீட்டிலிருந்து கிளம்பிச் சென்றுவிட்டு பிற்பகலுக்குமேல் திரும்பியிருக்கிறார்கள்.
நோய்த்தொற்று பரவத்துவங்கியதிலிருந்து எதையெல்லாம் செய்யவேண்டும் செய்யக் கூடாதென நொடிக்கொருமுறை அரசாங்கமும் ஊடகங்களும் எச்சரித்தபடியே இருந்தும் இவர்களின் இந்த மனநிலையை என்னவென்று செய்வது? இங்கு கிராமங்களில் இருந்து வருகிற மக்கள் சரியான வழிமுறைகளைப் பின்பற்றுகிறார்கள், நோய்த்தொற்று சந்தேகமென்றால் தானாக முன்வந்து பரிசோதனை செய்துகொள்வதோடு மருத்துவமனையிலும் சேர்ந்துவிடுகிறார்கள். அவர்களுக்கு இருக்கும் காமன் சென்ஸ் படித்தவர்கள் நகரவாசிகளென சொல்லிக் கொள்கிறவர்களுக்கு ஏன் இருப்பதில்லை?
அந்த ஏ டி எம்மை எத்தனைபேர் அவருக்கு பிறகாக பயன்படுத்தி இருப்பார்கள்?
அந்த கடைக்கு எத்தனை பேர் வந்திருப்பார்கள் ?
இதையெல்லாம் விடுங்கள் அவர் உயிரோடு விளையாட அவருக்கு உரிமையுண்டு, வேலைக்கு வரும் அக்கா என்ன பாவம் செய்தார். அவருக்கு குடும்பமுண்டு. அவரது குடும்பத்தையும் சுற்றத்தாரையும் நினைத்துப் பார்த்திருக்க வேண்டாமா?
இந்த நோய் இத்தனை தீவிரமாய் பரவியதன் பின்னால் இவர்களைப் போன்றவர்களின் திமிர்த்தனமே அதிகமிருக்கிறது. இன்னும் முழுமையாக மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை, ஊரடங்கு நிலை தொடர்ந்தால் அதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை நினைக்கையில் மூச்சு முட்டுகிறது. இவர்களைப்போல் சென்னையில் சொந்த வீடும் பன்னாட்டு நிறுவனத்தில் நல்ல வருமானமும் உள்ளவர்கள் மற்றவர்களைப் பற்றிய கவலையில்லாமல் சுற்றினால் இன்னும் ஒரு வருடம் ஆனாலும் இந்த நோய்த்தொற்று குறையப்போவதில்லை.
Gargy Manoharan
1 comment:
படித்தவர்கள் இப்படி பொறுப்பற்று இருப்பது வேதனை தரும் செய்தியாகும்.
மேற்படி குடும்பம் இன்னும் மருத்துவமனைக்குச் செல்லவில்லையா ?
தாங்கள் ஏதோ மறைப்பதாகத் தெரிவின்றது.
தாங்களாவது காவல்துறைக்கு தகவல் அளித்திருக்க வேண்டுமே ? தாங்களும் சோற்றுப்பிண்டம்தானா ?
பிற பார்ப்பன குடும்பங்கள் சும்மாவா இருந்தார்கள்???ஃ
இந்த செய்தியை நான் நம்ப மாட்டேன்.
எப்படியோ பிறாமணர்களை திட்ட அவதூறு பரப்ப தஙகளுக்கு ஒரு வாய்ப்பு
கிடைத்து விட்டது.சந்தோசம்தான்.
முழுசா ஒரு கிடா வெட்டி ...அமா்களம் செய்து விடுலாமே!
Post a Comment