Followers

Tuesday, June 16, 2020

புத்தகம் தனது இடது கையில் கொடுக்கப்பட்டவன்

புத்தகம் தனது இடது கையில் கொடுக்கப்பட்டவன்

"எனது புத்தகம் கொடுக்கப்படாமல் இருக்கக் கூடாதா? எனது விசாரணை என்னவாகும் என்பது தெரியவில்லையே! (இறப்புடன்) கதை முடிந்திருக்கக் கூடாதா? எனது செல்வம் என்னைக் காப்பாற்றவில்லையே! எனது அதிகாரம் என்னை விட்டும் அழிந்து விட்டதே'' எனக் கூறுவான். அவனைப் பிடியுங்கள்! அவனுக்கு விலங்கு மாட்டுங்கள்! பின்னர் நரகில் கருகச் செய்யுங்கள்! பின்னர் எழுபது முழம் கொண்ட சங்கிலியால் அவனைப் பிணையுங்கள்! (எனக் கூறப்படும்.) அவன் மகத்தான அல்லாஹ்வை நம்பாதவனாக இருந்தான். ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டவுமில்லை. இன்று இங்கே அவனுக்கு உற்ற நண்பன் எவனும் இல்லை. சீழைத் தவிர வேறு உணவும் இல்லை. குற்றவாளிகள் தவிர மற்றவர்கள் அதை உண்ண மாட்டார்கள்.

அல் குர்ஆன் 69:25 -37


1 comment:

Dr.Anburaj said...

அவனைப் பிடியுங்கள்! அவனுக்கு விலங்கு மாட்டுங்கள்! பின்னர் நரகில் கருகச் செய்யுங்கள்! பின்னர் எழுபது முழம் கொண்ட சங்கிலியால் அவனைப் பிணையுங்கள்! (எனக் கூறப்படும்.) அவன் மகத்தான அல்லாஹ்வை நம்பாதவனாக இருந்தான். ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டவுமில்லை. இன்று இங்கே அவனுக்கு உற்ற நண்பன் எவனும் இல்லை. சீழைத் தவிர வேறு உணவும் இல்லை. குற்றவாளிகள் தவிர மற்றவர்கள் அதை உண்ண மாட்டார்கள்.
------------------------------------------------------------------------------------
ஒரு மனநோயாளியின் உளறல் என்பதைத் தவிர அதற்கு எந்த அர்த்தமும் இல்லை.
நரகம் சொர்க்கம் கிடையாது.
----------------------------------------------------------------------------------
இந்துமதத்திலும் சொர்க்கம் நரகம் இருப்பதாக சில இடங்களில் குறிப்புகள் உண்டு.ஆனால் பாவ புண்ணிய பலன் காரணமாக பிறவி எடுக்கும் உலகம்தான் அது.இந்த பேரண்டத்தில் மனிதனின் கா்ம பலன்களுக்கு தக்க பிறவி எடுக்கக் கூடிய இடங்கள் பல இருக்கலாம். காட்டறபிகள் குறிப்பிடுவது போல் ஆன்மாவின் இறுதி இடம் சொர்க்கம் நரகம் அல்ல.ஆன்மாவின் இறுதி இடம் இறைவன் திருவடிதான்.
---------------------------------------------------------------------------------
நியாய திர்ப்பு நாள் வராத நிலையில் சொர்க்கம் -நரகம்இரண்டும் காலியாகத்தானே இருக்க வேண்டும். பத்ரு போரில் பங்கேற்ற இளைஞன் சொர்க்கத்தில் இருக்கின்றான் என தாயிடம் பீலுா விட்டாரே அண்ணல் முஹம்மது.