Followers

Saturday, June 27, 2020

பெர்கே கான் (Berke Khan), மங்கோலிய பேரரசர்

பெர்கே கான் (Berke Khan), மங்கோலிய பேரரசர் செங்கிஸ்கானின் பேரனான இவருக்கு இஸ்லாமிய வரலாற்றில் ஒரு சிறப்பிடம் உண்டு. பதிமூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வாழ்ந்த இவர் தான், இஸ்லாமை தழுவிய முதல் மங்கோலிய பேரரசர் ஆவார்.
செங்கிஸ்கான், தான் ஆட்சி செய்த பரந்த நிலப்பரப்பை தன் மகன், பேரன்களுக்கு நான்கு பகுதிகளாக பிரித்து கொடுத்திருந்தார். இதில் கோல்டன் ஹோர்ட் (இன்றைய மத்திய ஆசியா மற்றும் ரஷ்யாவின் சில பகுதிகள்) பகுதியை ஆண்டார் பெர்கே.
புகாரா நகரில் ஒரு வணிக குழுவை சந்தித்த பெர்கே, அவர்களின் இஸ்லாமிய சொற்பொழிவால் கவரப்பட்டு இஸ்லாமை தழுவினார். இந்த தருணம் உலக அரசியலிலும் கூட ஒரு முக்கிய நிகழ்வாகும். காரணம், மிக வேகமாக முன்னேறிக்கொண்டிருந்த மங்கோலிய படைகள் பெர்கேவின் இஸ்லாமிய தழுவலால் தடுமாற்றத்தை சந்தித்தன.
மங்கோலிய படைகளால் பல அப்பாவி உயிர்கள் பறிபோவதாக குற்றம் சாட்டிய பெர்கே, மற்ற முஸ்லிம் மன்னர்களுடன் இணைந்து தன் உறவினர்களான மற்ற மங்கோலிய அரசர்களை எதிர்க்க ஆரம்பித்தார். தோல்வியையே சந்திக்காத படைகள் என்றழைக்கப்பட்ட மங்கோலிய படைகள் தொடர் தோல்விகளை சந்திக்க ஆரம்பித்தன.
தன் மற்ற உறவினர்களுக்கும் இஸ்லாமை எடுத்துரைத்தார் பெர்கே. ஒரு கட்டத்தில், செங்கிஸ்தான் பிரித்து கொடுத்த நான்கு பகுதிகளில், மூன்று பகுதிகள் முஸ்லிம் மங்கோலிய மன்னர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. அத்தோடு செங்கிஸ்தான் தோற்றுவித்த மங்கோலிய பேரரசும் காலப்போக்கில் முடிவுக்கு வந்தது.
பெர்கேவின் காலத்திற்கு பிறகு, செங்கிஸ்கானின் வழி தோன்றல்கள் பலரும் இஸ்லாமின்பால் வந்தனர். தைமூர், பாபர் என இந்த லிஸ்ட் பெரியது என்பதும், மிகப்பெரிய நிலப்பரப்புகளை அவர்கள் ஆண்டனர் என்பதும் நாம் எல்லாம் நன்கறிந்த வரலாறு.


1 comment:

Dr.Anburaj said...

இன்று பௌத்தம் மங்கோலிய மக்களை வழி நடத்தி வருகின்றது. அமைதியான நாடு. வீரமான நாடு.சீன வீரர்கள் மங்கோலிய வீரன் முகத்தில் விழிக்கக் கூட பயப்படுவான். கலாச்சாரம் மிக அற்புதமாக உள்ள நாடு. எனது ஊரில் சிலா் மங்கோலியாவில் பணியா்ற்றி வருகின்றனா்கள். மிக உயா்ந்த அபிப்ராயம் .பாதுகாப்பான நாடு. விசா கிடைத்தால் தாராளமாகச் செல்லவா்.
முஸ்லீம்கள் பரவலாக வாழ்கின்றார்கள். ஆனாலும் சேட்டைகள் பண்ண அனுமதிகிடையாது. சேட்டைகள் செய்தால் வால் நறுக்கப்பட்டு விடும்.