Followers

Wednesday, June 24, 2020

" CORONA VIRUS "

" CORONA VIRUS " தொற்றாமல் இருக்க 1441 வருடங்களுக்கு முன்பே அழகிய வழிகாட்டலை உலகிற்கு கற்றுத்தந்த இறைதூதர் முஹம்மத் நபி ( ஸல்) அவர்கள் !
1) தனிமைப்படுத்தல் :
நபிகளாரின் ஒரு அறிவுரையாகும்.
"சிங்கத்திடமிருந்து வெருண்டோடுவது போன்று தொற்று நோயாளிகளிடமிருந்தும் விலகி ஓடிவிடுங்கள்."
புகாரி - பாகம் 7, நூல் 71, எண் 608
2) சமூக விலகல் :
நபிகளாரின் அறிவுரையாகும்.
"தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரோக்கியமானவர்களிடமிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும்.
புகாரி 6771, முஸ்லிம் 2221
3) பயணத்தடை :
நபிகளாரின் அறிவுரையாகும்.
தொற்று நோய் பரவியிருக்கும் பகுதிக்குள் செல்லாதீர்கள். அவ்வாறே தொற்று நோய் பரவியுள்ள பகுதியிலிருந்து வெளியேறாதீர்கள்.
புகாரி 5739, முஸ்லிம் 2219
4) பிறருக்கு பாதிப்பை ஏற்படுத்தாதீர்கள் :
உங்களிடம் அறிகுறிகள் தென்பட்டால் .
நபி (ஸல்) கூறியுள்ளார்கள்..." பிறருக்கு தீங்கு விளைவிக்காதீர்கள்".
இப்னு மாஜா 2340
5) வீட்டில் இருத்தல் :
நபிகளாரின் அறிவுரையாகும்.
தங்களையும் பிறரையும் பாதுகாப்பதற்காக வீட்டிலேயே தங்கி இருந்தவர்கள் எல்லாம் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருப்பவர்களாவர்.
முஸ்னத் அஹமத், ஸஹீஹ்
6) வீடே பள்ளிவாசல் :
தேவையான. காலகட்டங்களில்.
நபி (ஸல்) கூறினார்கள்..."முழு உலகும் தொழும் இடமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது, கல்லறைகளையும் கழிவறைகளையும் தவிர."
திர்மிதி; அஸ்ஸலாஹ்..291
7) நிவாரணம் உண்டு
பொறுமை அவசியம்.
நப(ஸல்) கூறியுள்ளார்கள் - "நிவாரணத்தை ஏற்படுத்தாமல் அல்லாஹ் எந்த ஒரு நோயையும் அனுப்புவதில்லை."
புகாரி பாகம் 7, நூல் 71, எண் 582.
8) சிகிச்சை செய்வோம்.அல்லாஹ் குணமளிப்பான்
நபி(ஸல்) கூறினார்கள்: ஒவ்வொரு நோய்க்கும் நிவாரணம் இருக்கின்றது. ஒரு நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றது எனில் அது அல்லாஹ்வின் அனுமதி கொண்டே நீங்குகின்றது.
முஸ்லிம் # 2204
9) முகக் கவசம்
நபிகளாரின் அறிவுரையாகும்.
"நபியவர்கள் தும்மும் போது தம் கைகளைக் கொண்டோ அல்லது தனது ஆடையைக் கொண்டோ முகத்தை மூடிக் கொள்வார்கள்"
அபுதாவூத், திர்மிதி (பாகம் 43, எண் 269),
10) வீட்டிற்குள் நுழைந்ததும் கைகளைக் கழுவுங்கள்
நபி(ஸல்) கூறினார்கள் : தூய்மை ஈமானில் பாதியாகும்.
முஸ்லிம் 223.
11) வீட்டில் தனித்திருத்தல் :
நபிகளாரின் அறிவுரையாகும்
தொற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் தன் வீட்டிலேயே பொறுமையுடனும் கூலியை எதிர்பார்த்தும், அல்லாஹ் தனக்கு விதித்துள்ளதைத் தவிர வேறு எந்த ஒன்றும் தன்னை அணுகாது என்றும் காத்திருந்தால், ஒரு உயிர்தியாகியின்(ஷஹீத்) கூலியை அவர் அடைந்து கொள்வார்.
முஸ்னத் அஹமத், ஸஹீஹ், புகாரி 2829, முஸ்லிம் 1914...


2 comments:

vara vijay said...

Dr. ALLAH MUHAMMAD TOLD THAT HE CREATED CRONA VIRUS AND ITS REMEDY. WHY HE HAS CREATE BOTH, INSTEAD HE SHOULD HAVE NOTHING.

Dr.Anburaj said...

அரேபியன் குசி விட்டால் மணக்கும் என்பது போல் பதிவுகள் போட வேண்டாம்.

இந்திய கிராமங்களில் இதெல்லாம் நடைமுறையில் உள்ளது. சவுதியில் இருந்து பெட்டோல் டீஸல் பேரிச்சம் பழம் இறக்குமதி செய்யலாம். ஆனால் கல்வி கலாச்சாரம் மருத்துவம் சமயம் சம்பந்தமாக இறக்குமதி செய்ய தரமான சங்கதிகள் அங்கு இல்லை.இல்லவேயில்லை.

அரேபியர்களுக்கு பெட்டோல் எடுத்துக் கொடுப்பவர்கள் கூட வெளிநாட்டவர்கள்தாம்.