டாக்டர் ரிளா(Mohamed Rela) மருத்துவமனை
பெயரைக்கேட்டதையடுத்து அவரைப்பற்றி மருத்துவ நண்பர்களிடம் கேட்டபோது அவர்கள் தந்த தகவலும், இணையத்தில் அவரைப்பற்றி படித்த செய்திகளும் பிரமிப்பைத்தருகின்றன.
மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள கிளியனூர் என்ற கிராமத்தில் பிறந்த முஹம்மது ரிளா (Mohamed Rela), சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் பட்டமும் M.S பட்டமும் பெற்றுள்ளார்.
அதனைத்தொடர்ந்து இங்கிலாந்து சென்ற டாக்டர் ரேலா , எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் மேலும் ஒரு M.S பட்டமும் , FRCS பட்டமும் பெற்றவர்.
கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை நிபுணரான அவர் உலகப்புகழ்பெற்ற லண்டன் கிங்ஸ் மருத்துவக்கல்லூரியில் 1991 முதல் பேராசிரியராக பணியாற்றிவந்தார்.
1997 ம் ஆண்டு பிறந்து 5 நாட்களே ஆன குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக செய்த சாதனைக்காக , 2000ம் ஆண்டு டாக்டர் ரிளாவின் பெயர் கின்னஸ் சாதனையாளர் பட்டியலில் இடம் பெற்றது.
அந்த பெண் குழந்தை ஆரோக்யத்துடன் வளர்ந்து தற்போது லண்டன் டிரினிடி கல்லூரியில் படித்துவருகிறார் என்பது நவீன மருத்துவத்துறையின் சாதனைகளின் சான்றாக கருதப்படுகிறது.
தனது 30 ஆண்டுகால மருத்துவ பயணத்தில் சுமார் 5000 கல்லீரல் மற்றும் கணையம் சம்பந்தப்பட்ட அறுவைசிகிச்சைகள் செய்த சாதனையாளராக திகழ்கிறார்.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக 600க்கும் மேற்பட்ட scientific publications வெளியிட்டுள்ள உலகின் ஒரே மருத்துவர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர்.
உலகின் தலைசிறந்த 20 குழந்தைகளுக்கான அறுவைசிகிச்சை நிபுணர்கள் என்ற பட்டியலில் உலகம் முழுதும் உள்ள மருத்துவர்களால் வாக்களிக்கப்பட்டு இடம்பெடித்த பெருமையும் டாக்டர் முஹம்மது ரிளா அவர்களைச்சேரும்.
தமிழ்நாட்டில் ஒரு சிற்றூரில் பிறந்து உலகம் முழுதும் புகழ்பெற்ற மருத்துவ நிபுணராக டாக்டர் முஹம்மது ரிளா சாதனை படைத்துவருவது , மருத்துவ ரீதியாகவும் , நம் மண்ணின் மைந்தர் என்ற வகையிலும் நமக்கெல்லாம் பெருமிதம் தரக்கூடிய ஒரு விஷயமாகும்.
1 comment:
உலகம் போற்றும் சாதனை படைத்திருக்கின்றாா்.
படித்தேன்.வியந்தேன். நல்ல பதிவு. நல்ல செய்தியை பதிவு செய்தமைக்குப் பாராட்டுக்கள்.
இவா் இந்து கிறிஸ்தவ புத்த சீக்கிய
குடும்பத்தில் பிறந்திருந்தாலும் இந்த சாதனையை செய்திருப்பாா்.
ஒருவன் செய்யும் சாதனைகளுக்கு அவனது மதம் காரணமல்ல.
இறைவன் முஸ்லீம்களுக்கு என்று விசேச சலுகைகள் அளிக்கவில்லை. அனைத்து
மக்களையும் நேசிக்கின்றான்.
முதல்முதலில் கண்புரை ஆபரேசன் செய்தவா் சுஸ்ரூதா் ஒரு இந்தியா்.ஹிந்து.
உலகம் ஒப்புக் கொண்ட விசயம்.
Post a Comment