Followers

Tuesday, June 02, 2020

ஒரு மருத்துவர் வாயிலிருந்து எத்தனை விஷச் சொற்கள்?

ஒரு மருத்துவர் வாயிலிருந்து எத்தனை விஷச் சொற்கள்?
உபியின் கான்பூரில் ஜிஎஸ்வி மருத்துவமனையின் மருத்துவர் லால் சந்தானி சொல்வதைக் கேளுங்கள்.
'தப்லீக் ஜமாத்தினரை சிறையில் அடைக்க வேண்டும். அதற்கு பதிலாக மருத்துவ மனையில் அனுமதித்து உணவும் கொடுத்து சிகிச்சையும் அளித்து வருகிறோம்: ஊசி மூலம் அவர்களை கொன்று விடுவது நல்லது: அவர்கள் தீவிரவாதிகள். அவர்களுக்கு நமது பணத்தை செலவு செய்து வருகிறோம்'
ஆர்எஸ்எஸ் எதை நடைமுறைபடுத்த துடிக்கிறதோ அதனை இந்த பெண் மருத்துவர் வாக்கு மூலமாக தருகிறார். மீடியாக்களில் வந்து பிரபலமானவுடன் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதுகிறார். ஆனால் அவர் உள் மனதில் உள்ள இந்துத்வா விஷமானது அப்படியே தான் இருக்கும். இது போல் வெளியில் தெரியாமல் எத்தனை மருத்துவர்களோ?
தப்லீக் ஜமாத்தினர் எச்சில் கண்ட இடத்தில் துப்புகின்றனர்: பெண்களுக்கு முன்னால் ஆடைகளை களைகின்றனர்: மருந்து எடுக்க சம்மதிக்கவில்லை என்றெல்லாம் செய்திகளை மீடியாக்கள் முன்பு வெளியிட்டன. ஆனால் அவை அனைத்தும் பொய்யான செய்திகள் என்று தெளிவாக்கப்பட்ட பின்பும் இப்படி இந்த மாமி விஷத்தை கக்குகிறாள என்றால் இந்தியாவின் எதிர்காலம் என்னவாகும்?
இவரை போன்ற பாசிச எண்ணம் கொண்ட ஊடகவியளாலர் ஒருவர் 'தப்லீக் ஜமாஅத்தினரை நீங்க சொல்றது போல கொலை செய்வதை விட விஷ ஊசி போட்டு கொலை செய்யலாம்' என்று சொல்லும் போது அதை டாக்டர் ஆர்த்தி லால் மறுக்காமல் ஆ ..ஊ ... என மழுப்புகிறார்
இவர் சாதாரணமான டாக்டர் இல்லை இண்டியன் மெடிக்கல் அசோசியன் IMA முன்னாள் தலைவர் இவரின் கணவர் கூட டாக்டர் லால் சந் IMA யின் முன்னாள் தலைவர்..
இந்த டாக்டர் ஆர்த்தி லால் சந் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை ..
இந்த மருத்துவர் சொல்வது போல் கோடிக்கணக்கான தப்லீக் ஜமாத்தினரில் ஒருவர் கூட குற்ற வழக்குகளில் சம்பந்தப்படவில்லை: ஆனால் மாலேகானில் குண்டு வெடிப்பு நடத்தி பல உயிர்களை கொன்ற பிரக்யாசிங் கையும் களவுமாக பிடிபட்டு ஹேமந்த் கர்கரேயால் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் இந்த கிரிமினல் குற்றவாளியை மோடி வெளியில் கொண்டு வந்து இன்று அவரை எம்பியாக்கியுள்ளார். நமது வரிப்பணத்தில் இந்த பெண் சாமியார் மாதாமாதம் சம்பளம் பெற்று வருகிறார். இவளைப் போன்று கிரிமினல் குற்றவாளிகள் அரசு அதிகாரிகளாக நமது வரிப்பணத்தில் சுக போக வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். இவர்களைப் பார்த்து அல்லவா அந்த மருத்துவர் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும்,?
இந்த அழகில் மோடி நேற்று நாட்டை கட்டி எழுப்ப வேண்டும் என்று உரையாற்றுகிறார். இந்த பெண் மருத்துவரைப் பொன்ற விஷச் சேடிகள் நாடு முழுக்க பரவிக் கிடக்க இது சாத்தியப்படுமா? முதலில் இந்துத்வாவை ஓரம் கட்டினால்தான் நாடு கொஞ்சமாவது பிழைக்க வாய்ப்புள்ளது. அதற்கு ஆர்எஸ்எஸ் சம்மதிக்காது. ஆர்எஸ்எஸின் வார்த்தைகளை மோடியால் மீற முடியாது. எனவே எதிரிகளை இனம் கண்டு எதிர்த்து வாழ பழகிக் கொள்ள வேண்டியதுதான் நம் முன்னே உள்ள ஒரே வழி. வருங்காலம் ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கும் இந்துத்வாவால் சோதனை காலம். அது கிட்டத்தட்ட ஆரம்பித்து விட்டது.
இறைவன் நமது நாட்டை இந்த கழிசடைகளிடமிருந்து காப்பாற்றுவானாக!


2 comments:

Dr.Anburaj said...


வாழ்க்கையில் பட்ட அனுபவங்கள் காரணமாக சில தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு ஆளாகி கருத்துதெரிவித்து வருகின்றனா்.

ஆாஎஸஎஸ இயக்கம் மனித வளம் காண பாடுபடும் ஒரு சிறந்த இயக்கம்.
ஆாஎஸஎஸ இயக்கத்தோடு இந்த அம்மணிக்கு தொடா்பு இருந்திருக்க நியாயமில்லை.
இருந்திருந்தால் இவா் இப்படி தவறாக பேசியிருக்கின்றாா்.

Dr.Anburaj said...

ஒரு மருத்துவ கல்லூரி முதல்வா் இவ்வளவு மலினமாக பேசுவாரா? என்று முதலில் யோசிக்க வேண்டும்.குற்றம் சுமத்தியவரின் கரு்த்து பதிவிட வேண்டும். அரசின் கவனத்திற்கு பின் குற்றச்சாட்டுகள் கொண்டு செல்லப்பட வேண்டும்.

சதா ஹிந்து வெறுப்பில் வாழக் கூடாது. சு...ன் வாழ்கின்றாா்.

மருத்துவரின் பேட்டி தன்னிச்சையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்கிறா் மருத்துவா்.

Doctor sparks a row with ‘diatribe’ against Jamaat, says viral video morphed

June 1, 2020

A controversy has erupted after Kanpur Medical College principal Aarti Lalchandani, in a viral video, was purportedly heard referring to Tablighi Jamaat members who tested positive for Covid-19, saying the government should not waste its resources on them.

An event of the Islamic missionary movement in Delhi in late March had emerged as a Covid-19 cluster.

In the almost five-minute video, which is likely to be two months old, Lalchandani could be heard saying, “These people are terrorists, but instead are provided VIP treatment.” She went on to add that her hospital had to exhaust its resources for patients linked to the cluster, putting doctors at risk, while the patients’ hotel bills were paid.

Labelling the admission of “these people” to hospitals as appeasement, she said the government should handle them more strictly.

Lalchandani on Monday claimed the video was morphed by a local journalist in Kanpur who has been allegedly trying to use it to extort money and receive administrative favours.

Pointing out that she did not use words such as Tablighi or Muslims in the video, the medical college principal said she would get an FIR registered against the journalist for filming the video and blackmailing her.
வீடியோவை பதிவு செய்தவா் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Later, Lalchandani told The Indian Express that she was angry because a lot of Tablighis had been found positive in the district, and instead of an L-1 hospital they had been sent to the medical college, where they allegedly did not cooperate with the staff and doctors.இவரது மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பப்பட்ட தப்லீக் முஸ்லீம்கள் ஒத்துழைக்கவில்லை.

While the state officials could not be contacted, Lalchandani said Principal Secretary (Medical Education) Rajneesh Dube had talked to her on Saturday night about the video.

Kanpur Nagar District Magistrate Bhram Dev Tiwari said he came to know about the video only on Sunday evening through some journalists, and was not sure what he could do about the matter.

https://indianexpress.com/article/india/up-doctor-sparks-a-row-with-diatribe-against-jamaat-says-viral-video-morphed-6436672/

--------