Followers

Wednesday, June 24, 2020

கற்கை நன்றே! கற்கை நன்றே! பிச்சை புகினும் கற்கை நன்றே!

கற்கை நன்றே! கற்கை நன்றே! பிச்சை புகினும் கற்கை நன்றே!
'நான் ஒரு பொறியாளராக வர வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் கொரோனா தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டதால் வருத்தமுற்றேன். ஆனால் தற்போது ஒட்டகங்களின் உதவியால் எங்கள் கிராமத்துக்கு புத்தகங்கள் வருகின்றன. அவற்றைப் பெற்று எங்களின் படிப்பை தொடருகிறோம்' என்கிறார் 13 வயதான மெஹதியா. இவர் எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்தவர்.
ஒவ்வொரு முறையும் 200 புத்தகங்களை ஒட்டகங்கள் சுமந்து வருகின்றன. சுழற்சி முறையில் அவற்றை கிராம மாணவ மாணவிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர். வறுமையை காரணம் காட்டி இவர்கள் படிப்பை தூரமாக்கவில்லை. இவர்களைப் பார்த்தாவது நமது கிராமங்களில் ஏழை மாணவ மாணவிகள் படிக்க உதவிகள் புரிவோம். திட்டமிடலோடு அவர்களின் கல்விக் கண்ணை திறக்க முயற்சிப்போம்.
தகவல் உதவி
அல்ஜஜீரா
ஒருமுறை ஒரு பெண் நபி அவர்களிடம் வந்து எப்போதும் உங்களை சுற்றி ஆண்களே இருக்கிறார்கள் அதனால் எங்களால் உங்களை நெருங்கி வந்து மார்க்கத்தில் எங்களுக்கு தோன்ற கூடிய சந்தேகத்தை கேட்க முடிய வில்லை என சொன்னதும் நபி அவர்கள் அவர்களுக்கு என்று வாரத்தில் ஒரு நாளை ஒதுக்கினார்கள் என்று வரலாறுகளில் பார்க்கிறோம்.
அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோரெல்லாம் அறிவுடையோரே (அல்குர்ஆன் 39:9)
யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : முஸ்லிம் (5231)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதிலும் பொறாமை கொள்ளக் கூடாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது (ஆகியவையே அந்த இரண்டு விஷயங்கள்).
அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி),
நூல் : புகாரி (73)


2 comments:

Dr.Anburaj said...

சவுதியின் போா் விமானங்கள் சுன்னி முஸ்லீம்கள் வாழ்வதால் எத்தியோப்பியாவில் குண்டு போட வில்லை. நல்ல வேளை.

ஆனால் மேற்படி சவுதி அரேபியா குவைத் போன்ற பணம்மிகு நாடுகள் எத்தியோப்பியாவில் வாழும் சுன்னி முஸ்லீம்களுக்குச் செய்ததென்ன ?

பள்ளி வாசல் கட்டுவார்கள்.குரான் அச்சடித்துக் கொடுப்பார்கள். ரம்சான் வந்தால் நோன்பை விலக்கிக் கொள்வதற்கு பேரிச்சம் பழம் கொடுப்பார்கள்.

பசிக்கு தொழிலுக்கு கல்விக்கு மருத்துவத்திற்கு மன நலத்திற்கு -மனித வளத்திற்கு
சவுதி அரேபியா குவைத் போன்ற பணம்மிகு நாடுகளின் பங்களிப்பு மிகப்பெரிய 0 தானே!

முட்டாள்கள் கூட்டம்தானே வேண்டும் -

Dr.Anburaj said...

கல்வியின் சிறப்பைச் சொல்ல காட்டறபிகளில் புத்தகங்களை மேற்கோளாக காட்ட ஏதும்யில்லை.
தமிழ் இலக்கியத்தில் ஆயிரம் உள்ளது.