Followers

Tuesday, June 23, 2020

நான் கண்டு மெய்சிலிர்த்து நின்ற ஒரு நிகழ்வை இங்கு பகிர்கிறேன்.

பகரைனில் மே மாதம் 26 ம் தேதி நான் கண்டு மெய்சிலிர்த்து நின்ற ஒரு நிகழ்வை இங்கு பகிர்கிறேன்.
Covid -19 நோய் தொற்று ஏற்பட்டு மரணம் அடைந்த இரண்டு இந்தியரின் (ஹிந்துக்கள்) வீட்டாரும் கேட்டு கொண்டதற்கிணங்க பகரைன் அரசு இருவரின் பூத உடலை எரியூட்ட ஒப்புதல் தெரிவித்து , ஹிந்து மயானத்திற்கு உடல்களை அனுப்பிவைத்தது. ( அரபு நாட்டில் ஹிந்து மயானமா என்று கேட்பவர்களுக்கு. பகரைன் அரசு இங்கு பிழைப்புக்கு வந்து வாழும் ஹிந்து மக்களுக்கு அவர்கள் உடலை எரித்து கொள்வதற்காக மயானம் ஓன்றை இலவசமாக ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது . அதனை வட இந்திய பாட்டியா சமுதாய சங்கம் ஒன்று நிர்வகிக்கிறது. விறகால் எரிக்க படுகிறது. ஓரு உடலை எரிக்க சுமார் 50,000 ரூபாய் பாட்டியா சமூகம் நடத்தும் சங்கத்தினருக்கு கட்டவேண்டும்.)
உடல் வந்து சேரும் முன்பே சுடுகாட்டை அடைந்த நான் உட்பட நான்கு பேரும் அங்கிருந்த காவலாளியும் COVID உடலை எப்படி எரியூட்டுவது , யார் உடலை எடுத்து வைப்பது என்ற குழப்பத்திலும் பயத்திலும் நின்றிருந்தோம். COVID 19 நோய்த்தொற்று ஏற்பட்டு உயிரிழந்த உடலை எரிப்பது அன்றுதான் முதன் முறையாக நடக்க இருந்தது.
சற்று நேரத்தில் காவல்துறை மற்றும் civil defense எனப்படும் தீயணைப்பு துறை வண்டிகள் வரிசை கட்ட , ஒரு ஆம்புலன்சில் முறையாக plastic sheetல் சீலிடப்பட்ட இரண்டு உடல்கள் வந்தன. தீயணைப்பு துறை வீரர்கள் எங்களை யார் எவர் என்று கேட்ட பின் சுடுகாட்டில் இருந்து வெளியேற்றி சற்று தொலைவில் நிற்க வைத்து , சுடுகாட்டின் பெரிய கதவுகளை திறந்து வைத்து நடப்பதை நாங்கள் பார்க்கும்படி ஏற்பாடு செய்தனர்.
ஏழு வீரர்கள் முழு பாதுகாப்பு உடையுடனும், முதுகில் ஆக்சிஜன் சிலிண்டர் சுமந்து உள்ளே சென்று காவலாளியை அழைத்து சற்று நேரம் விவாதித்து விட்டு அவருக்கும் பாதுகாப்பு உடைகளை அணிவித்து சற்று தள்ளி நிற்க வைத்து விட்டு, ஏழு வீரர்கள் மட்டும் உடல்களை ஆம்புலன்சில் இருந்து இறக்கி ஏற்கனவே தயாராக இருந்த சிதையின் மேல் பூவை வைப்பது போல் மெல்ல வைத்துவிட்டு, உடம்பின் மீது விறகுகளை மிக மெதுவாக அடுக்கினார்கள். பின் காவலாளி (ஹிந்து ) கையில் சுமார் 10 அடி நீளம் இருந்த கம்பியில் தீ பந்தை கொடுத்து தீ வைக்க சொன்னார்கள்.
நடந்தவைகளை பிரமிப்புடன் பார்த்து கொண்டிருந்த எங்களை இந்நிகழ்வு உணர்ச்சிவயப்பட்டு மெய்சிலிர்கக வைத்தது, எரியூட்டபட்ட உடல்களை முழுவதுமாக தீ சூழும் வரை அந்த ஏழு வீரர்களும் சிதையில் இருந்து சற்று தூரத்தில் Attention Position ல் சுமார் 10 நிமிடம் வரை அமைதியாக நின்ற காட்சிதான்.
இப்பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் அனைவரும் அரேபிய முஸ்லிம்கள். உடலை எரிப்பது என்பது அவர்களுக்கு புதிது , ஹிந்துக்களின் எரியூட்டும் மத சடங்கை பார்த்திருக்கவும் வாயப்பில்லை. மனிதநேயம் தான் அங்கே விஞ்சி நின்றது. COVID19 உடல் என்பதற்காக பயப்படாமலும், மாற்றுமத சடங்கை நாம் செய்கிறோமே என்று சங்கடபடாமல் முழு மரியாதையுடனும் அவர்கள் தகனம் செய்த விதம் என் நாட்டில் மதங்களின் பெயராலும், COVID 19 பெயராலும் நடக்கும் அவலங்களை எனக்கு நினைவுபடுத்தி தலைகுனிய செய்தது.
எம்ஜிகே.முகம்மது ஹூசைன் மாலிம்,
நிறுவனர், ( நாகப்பட்டினம் மேநாள் சட்ட மன்ற உறுப்பினர் சகோதரர் M.G.K. நிஜாமுதீன் அவர்களின் அண்ணன்)
பாரதி தமிழ் சங்கம், பகரைன்.

1 comment:

Dr.Anburaj said...

நல்ல செய்தி. பதிவிட்டதற்கு நன்றி.

சவுதி போல் அல்லாது

அபுதாபி பஹரேன் போன்ற நாடுகளில் ஹிந்துக்களையும் மரியாதையுடன் நடத்த சட்டங்கள் உள்ளது.வாழ்க.
இந்துஆலயங்கள் கட்ட கூட அனுமதிக்கப்பட்டுள்ளது. நீடுழி வாழ்க.

நமது நாட்டில் கொரானா காரணமாக சில ஆயிரம் பேர்கள் இறந்து விட்டார்கள்.அனைவரையும் முறையாக அடக்கம் செய்து விட்டார்கள். ஒரு சில இடத்தில் ஊா் எல்லைக்குள் இடுகாடு இருந்ததால் மக்கள் பயந்து வேறு இடத்தில் தகனம் செய்ய அறிவுருத்தி தடுத்தார்கள். ஒரு இடத்தில குழிக்குள் பிணத்தை மரியாதையின்றி போட்டார்கள்.காரணம் பிணத்தை இறக்க கயிறு கொண்டு செல்லவில்லை. இது தொலைக்கா்ட்சியில் வந்து பிரச்சனை ஆனது. தவறு கண்டிக்கப்ட்டது.
------------------------------------------------------------------------------
சென்னையில் நடந்த உண்மை சம்பவம்.

இந்திய முஸ்லீம்கள் பரிபுரண யோக்கியர்கள்.

01. முஸ்லீம்கள் மயானத்தில் ஒரு முஸ்லீம் பெண்மணியின் சடலத்தை காலையில் அடக்கம் செய்தார்கள்.
02.மாலையில் அந்த முஸ்லீம் பெண்மணி அஹமதிய்யா ஜமாத்தைச் சோ்ந்தவா் என்ற தகவல் கிடைத்தது.
பிரச்சனை ஆரம்பமாகி விட்டது.அடக்கம் செய்த பெண்மணியின் உறவினா் வீட்டிற்கு தகவல் கொடுக்கப்பட்டது. பிணத்தை எடுத்துக் கொண்டு வெளியேற வேண்டும் என்ற கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அஹமதிய்யா ஜமாத் காரர்கள் வந்து பிணத்தை தோண்டி எடுத்து பின் வேறு இடத்தில் அடக்கம் செய்தார்கள்.

-------------------------------------------------------------------------------
அரேபியாக்காரனை புகழ்வது என்றால் சுவனப்பிரியனுக்கு கொணடாட்டமோ கொண்டாட்டம்.அரேபி அடிமைக்கு அதுதான் மகிழ்ச்சி.