Followers

Monday, June 15, 2020

வெளிநாட்டில் இருந்து வந்த தப்லீக் ஜமாத்தினர் விஷயத்தில் தீர்ப்பு வந்து விட்டது.

வெளிநாட்டில் இருந்து வந்த தப்லீக் ஜமாத்தினர் விஷயத்தில் தீர்ப்பு வந்து விட்டது...
அல்ஹம்துலில்லாஹ்...
பல்வேறு நாடுகளில் இருந்து வந்த தப்லீக் ஜமாத்தினர் மீது, "கொரோனா பரப்ப வந்தவர்கள்" என்றும் "மதப்பிரச்சாரம் செய்ய விசாவை தவறாகப் பயன்படுத்தியவர்கள்" என்றும் மதக்காழ்புணர்ச்சியால் கேஸ் போட்டு சிறையில் அடைத்து வைத்தார்கள். அதில் பெண்களும் அடக்கம்.
பின்னர் அதில் சிலருக்கு ஜாமின் கிடைத்தது. ஜாமின் கிடைத்த பின்னரும் அவர்க்ளை அகதிகள் முகாமில் அடைத்து வைத்து சித்திரவதை செய்து வந்தனர். சொந்த நாடு திரும்ப விடாமலும் தனது நாட்டின் எம்பசியுடனும் தம் குடும்பத்தினருடனும் தொடர்பு கொள்ள இயலாமலும் சொல்லொணாத் துயர் தந்து வந்தனர்.
இறைவன் நாட்டத்தால் இவர்கள் விஷயத்தில் உயர்நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது. தீர்ப்பு விவரங்கள் வருமாறு...
1. அவர்கள் எதையோ எதிர்பார்த்து வந்தார்கள். ஆனால் அதற்கு மாற்றமாக பல விஷயங்கள் நடந்து விட்டன. அவர்கள் எந்த தவறும் செய்யவில்லை. அப்படியே சிறு தவறு செய்திருந்ததாக வைத்துக் கொண்டாலும் 70 நாட்கள் அவர்கள் சிறையில் இருந்து விட்டார்கள். அந்த தண்டனையே அவர்களுக்கு அதிகம். அதனால் கோர்ட் அவர்களுக்கு சொந்த ஜாமின் வழங்குகிறது.
2. ஜாமின் பெற்ற பின்னர் அவர்களை அகதிகள் முகாமில் வைப்பது தவறானது. கொரோனா காலத்தில் இவ்வாறு வைத்திருந்து நோய்த்தொற்று ஏற்பட்டால் Article 21 படி அவர்கள் உயிர் வாழும் அடிப்படை உரிமையை அரசாங்கம் பறித்தது போல ஆகி விடும். அதனால் அவர்கள் தம் சொந்த நாடு திரும்பும் வரை வண்ணாரப்பேட்டை காஷிமி அரபிக் கல்லூரியில் தங்கி இருக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
3. தாம் விசா நிபந்தனைகள் மீறி விட்டோமென்று வருத்தம் தெரிவித்து அவர்கள் எழுதித் தந்த பின் அடுத்த பத்து வருடங்களுக்கு இந்தியாவுக்குள் வரக் கூடாது என்ற நிபந்தனையுடன் இந்த வழக்கு முடிவுக்குக் கொண்டு வரப்படும்.
4. ICCPR Article 12(4) என்ற சர்வதேச சட்டத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவர்களை நாடு திரும்ப விடாமல் இந்தியாவிலேயே தடுத்து வைத்திருப்பது பெருங்குற்றமாகும். அனைவரும் சொந்த செலவில் தமது நாட்டுக்குத் திரும்ப தயாராக உள்ளதால் உடனடியாக அவர்களின் எம்பசியுடன் தொடர்பு கொண்டு அவர்கள் தம் நாட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டிய ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்.
நேர்மையான முறையில் தீர்ப்பளித்த நீதியாளர் G.R. சுவாமிநாதன் அவர்களுக்கு இறைவன் ஹிதாயத்துடன் எல்லா வளங்களும் நலங்களும் தருவானாக...
கைது செய்தது குறித்து கொட்டை எழுத்தில் விஷப் பிரச்சாரம் செய்த எந்த செய்தி ஊடகமும் இந்த தீர்ப்பு குறித்து வெளியிடவில்லை என்பதே மதவாத ஊடகங்களின் விஷமத்தனத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது. இது குறித்த தீர்ப்பு நகலை கமெண்ட்டில் கொடுத்திருக்கும் லின்க்கில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.


1 comment:

Dr.Anburaj said...

70 நாட்கள் அவர்கள் சிறையில் இருந்து விட்டார்கள். அந்த தண்டனையே அவர்களுக்கு அதிகம்.................................
தாம் விசா நிபந்தனைகள் மீறி விட்டோமென்று வருத்தம் தெரிவித்து அவர்கள் எழுதித் தந்த பின் அடுத்த பத்து வருடங்களுக்கு இந்தியாவுக்குள் வரக் கூடாது என்ற நிபந்தனையுடன் இந்த வழக்கு முடிவுக்குக் கொண்டு வரப்படும்.
---------------------------------------------------------------
ஒரு நிலையில் கொரானாவை நன்கு பரவ இவர்களே காரணம்.

காயல்பட்டணம் அரசு மருத்துவமனை மருத்துவா் அவரது மனைவி ஆகிய இருவரும் தப்லீக் மாகாநாட்டில் கலந்து கொண்டு காயல்பட்டணத்தில் குரானாவை பரப்பினாா்கள். இவர்களால் அரசு மருத்துவமனை சில நாட்கள் அடைபட்டு கிடந்தது.