Followers

Sunday, June 14, 2020

நான் உழைத்துப்பெறும் ஒரு திர்ஹத்துக்கு ஈடாகாது- இறையச்சத்தின் வெளிப்பாடு

துபாயில் தூய்மை பணியில் பணி புரிந்த பாகிஸ்தானி தாஹிர் அலி மக்பூலுக்கு ஒரு பேக் கிடைக்கிறது. யாரும் உரிமை கோராததால் அதனை திறந்து பார்த்துள்ளார். அதனுள் 15 கிலோ தங்கம் இருந்துள்ளது. ஆச்சரியப்பட்டுப் போய் அதனை துபாய் காவல் துறையிடம் ஒப்படைத்தார். அரசும் அவரை அழைத்து கௌரவித்தது.
'நீ சம்பாதித்த பணம் இறைவன் அனுமதித்த வழியில் வருகிறதா என்று பார்?' என்று எனது தந்தை அடிக்கடி கூறுவார். அவரது அறிவுரை என்னை இன்று வரை நேர்மையாளனாக வாழ வைக்கிறது. எனவேதான் எனக்கு உரிமையில்லாத பொருளை நான் வைத்துக் கொள்ளவில்லை' என்கிறார்.
''15கிலோ தங்கமென்றாலும் நான் உழைத்துப்பெறும் ஒரு திர்ஹத்துக்கு ஈடாகாது'' - இறையச்சத்தின் வெளிப்பாடு
------------------------------------------------------
''அல்லாஹ்வின் தூதரே! பரிசுத்த மான தொழில் எது?'' என்று நபிகள் நாயகம் அவர்களிடம் கேட்கப்பட்டது. ''ஒரு மனிதன் தனது கையால் உழைப்பதும், மோசடியில்லாத நல்ல ஒவ்வொரு வியாபாரமும்'' என்று நபியவர்கள் கூறினார்கள். (நூல்: அஹ்மத்)
65:3. அத்தகையவருக்கு, அவர் எண்ணியிராத புறத்திலிருந்து, அவன் உணவு வசதிகளை அளிக்கிறான்; மேலும், எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன்; நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தை நிறைவாக்குபவன் - திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அளவை உண்டாக்கி வைத்திருக்கின்றான்.


1 comment:

Dr.Anburaj said...

'அல்லாஹ்வின் தூதரே! பரிசுத்த மான தொழில் எது?'' என்று நபிகள் நாயகம் அவர்களிடம் கேட்கப்பட்டது. ''ஒரு மனிதன் தனது கையால் உழைப்பதும், மோசடியில்லாத நல்ல ஒவ்வொரு வியாபாரமும்'' என்று நபியவர்கள் கூறினார்கள். (நூல்: அஹ்மத்)
--------------------------------------------------------------------------------
நான் படித்த அளவில் முஹம்மதுவின் வாழ்க்கைக்கும் இந்த உபதேசத்திற்கும் சம்பந்தம் இல்லை.போரில் தோற்றவர்களின் தன்னை இறை தூதராக ஏற்க மறுத்த மக்களின் உடைமைகளை கொள்ளையடித்தார். போரில் எதிா் அணியில் நின்றவர்களின் மனைவிகள் குழந்தைகள் அனைவரையும் குமுஸ் பெண்களாக்கி வைப்பாட்டியாக்கியும் அடிமைச சந்தையில் விற்றும் காசு சம்பாதித்தாா். படிக்கவே குமட்டும் பெண் கொடூமை காவியம் முஹம்மதுவின் திவ்ய சரித்திரம்.