தி.நகர் உஸ்மான் ரோடு பள்ளிவாசல் இன்று இருப்பதற்கு ஒரே காரணம் அண்ணன் ஜெ.அன்பழகன் அவர்களுடைய அப்பா பழக்கடை ஜெயராமன் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
அண்ணா அவர்களின் மறைவிற்கு பிறகு கலைஞர் அவர்கள் கழகத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சர் பொறுப்பில் அமர்ந்து மகத்தான மக்கள் பணிகளை தீட்டி மக்களாட்சி செய்து கொண்டிருந்த நேரம் அது. அப்போதெல்லாம் வெளியூர்களிலிருந்து (பள்ளப்பட்டி, காயல்பட்டினம், கீழக்கரை, இளையான்குடி, மேலப்பாளையம், நெல்லை போன்ற பல ஊர்களிலிருந்து) எண்ணற்ற முஸ்லிம்கள் சென்னையின் பல பகுதிகளில் வியாபாரம், பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வந்தனர்.
அதில் ஒன்று காயல் நகரை சார்ந்த LKS. தியாகராய நகர் பகுதி முஸ்லிம் சிறு & பெரு வியாபாரிகள் ஒன்று சேர்ந்து அப்பகுதியில் ஓர் இறைவனின் பள்ளியை நிர்மானிக்க முடிவெடுத்து ஓர் இடத்தையும் வாங்கி அந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடக்கவிருந்த நேரத்தில் இரவோடு இரவாக அந்த இடத்தில் அப்பகுதியில் வசிக்கும் சங்கட மடத்தை சார்ந்த பிராமணர்கள் ஒரு பிள்ளையார் சிலையை பூமிக்குள் புதைத்து வைத்து, அச்சிலை அதிகாலை 5 மணிக்கெல்லாம் வெளி கிளம்ப, சென்னை மாநகரகெங்கும் பரபரப்பு. பிராமண பத்திரிகைகாரன்களின் திடீர் supplement, எதையும் சிந்தித்து பார்க்காது நம்பி தொலையும் நம் மக்கள் சாரை சாரையாக திடீர் பிள்ளையாரை தரிசிக்க தி.நகர் நோக்கி படையெடுப்பு. சங்கட மட பார்ப்பனர்களின் பூஜை புனஸ்காரங்கள் (தியாகராயநகர் பல படித்த பிராமணர்களின் கோட்டை), நீண்ட வரிசையில் பக்தகோடிகள், உண்டியல்கள் என தியாகராய நகரே அல்லோலப்பட்டது.
அதிகாலை பொழுதில் ஒரு சில முஸ்லிம்கள் மாவீரன் ஜெயராமன் அவர்களின் வீட்டு கதவை தட்ட, வெளியில் வந்த அவரிடம் கண்ணீர் மல்க தகவல் சொல்லப்பட உடன் அவர் அந்த அதிகாலை பொழுதில் கோபாலபுரம் விரைந்து தலைவரிடம் செய்தியினை சொல்ல.... உடன் தலைவர் "சரி ஜெயராமா... இன்று மாலை தி.நகரில் நான் பேசுகிறேன்... கூட்டம் ஏற்பாடு செய்" என உத்தரவிட, ஆட்டோக்களில் தியாகராய நகரில் தலைவர் கலைஞர் பேசுகிறார்... அனைவரும் வாரீர் என கழக தோழர்கள் சென்னை முழுவதும் பிரச்சாரம் செய்ய... கூட்டம் தொடங்கியது.
மாலை கலைஞர் வந்தார். ஒலி பெருக்கி முன் நின்று ஒரு மணி நேர போர் முழக்கம். பள்ளிவாசல் கட்டவிருந்த இடத்தில் "பார்ப்பனர்களின் சதியால் திடீரென்று முளைத்த இத்திடீர் பிள்ளையாரை கடலில் கொண்டு போய் கரைத்து விடுங்கள். இஸ்லாமிய பெருமக்களின் இறைபள்ளியின் பணிகள் இங்கே இனிதே தொடங்கட்டும்" என முழக்கமிட அலைகடலென திரண்டிருந்த கூட்டம் ஆர்ப்பரித்தது. அந்த சதி வேலைகளை செய்து ஒரு பெரும் இனக்கலவரத்தை ஏற்படுத்தி கழக ஆட்சியை வீழ்த்த பார்ப்பனர்கள் (சங்கராச்சாரியார், ஆர்.வெங்கட்ராமன், சோ.ராமசாமி அய்யங்கார், இதயம் பேசுகிறது மணியன் (இந்த மணியன்தான் எம்.ஜி.ஆருக்கு அதிகமான மாமா வேலைகளை பார்த்து அவரை கழகத்திலிருந்து பிரிப்பதற்கும் ஒரு காரணமாக அமைந்தவன்) போட்ட சதியை முளையிலேயே கிள்ளி எறிந்தவர் தலைவர்.
கலைஞர் அவர்களின் மெய்காப்பாளனாக விளங்கிய மாவீரன் பழக்கடை ஜெயராமன் அவர்கள். அவர்தம் அன்பு செல்வன் தலைவர் கலைஞர் அவர்களின் செல்லபிள்ளை அண்ணன் ஜெ. அன்பழகன் அவர்கள் இன்று உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார். அன்பழகன் அவர்கள் விரைந்து நலம்பெற பிரார்த்திப்போம்........!
1 comment:
திரு.ஜெ.அன்பழகன் இறந்து விட்டாா். குரானா நோய் அவரை சாகடித்து விட்டது.ஏற்கனவே பல நோய்களின் பிடியில் இருந்துள்ளாா். எனவே தொற்று அவரை எளிதாக சாய்த்து விட்டது.
ஆனால் அவர் நடிகா் விசு அவர்கள் இறந்த போது
” பார்ப்பன நாய்”
”அநாதையாக செத்து விட்டது”
என்று அறிக்கையிட்டாா் என்று வாடஸ் அப்பில் வருகின்றது.
உண்மையா ? உ்ண்மையெனில் இவா் பண்பாடு மிகக் குறைந்தவா்.
Post a Comment