இது புதிசில்லை.....ஆனாப் புதுசு......
சென்னை செயற்க்கை பேரிடரின்போது ஒரு விசயம் பரவலாக வெளியே வந்திருக்கிறது அது இஸ்லாமிய சமூகத்தின் அர்பணிப்பு மிகுந்த (எத்தகைய பிரதிபலனும் எதிர்பாராத) மீட்பு பணி சேவை. இந்த விசயம் இஸ்லாமிய சமூகத்துக்கோ அல்லது நடுநிலை வரலாறு தெரிந்தவர்களுக்கோ ஒரு புதுமையான விசயமேக் கிடையாது.
உலக ஊடகங்களாலும், உள்ளூர் ஊடகங்களாலும் தீவிரவாதிகள் என்று இஸ்லாமிய சமூகம் பொத்தாம் பொதுவாக சித்தரிக்கப்பட்டுவந்ததை அறியாமையின் காரணமாக நம்பிவந்தவர்களுக்கே இது புதுமையான விசயமாக இருக்கிறது. அதிலும் இந்த அறியாமையில் மூழ்கிக் கிடந்தவர்கள் so-called படிப்பறிவுப் பெற்ற நடுத்தர மேல்தட்டு வர்கமே. ஏழைகளும் தமிழக கிராமப் புற மக்களும் ஒருப்போதும் இஸ்லாமிய சமூகத்தை தங்களிலிருந்து பிரித்துப் பார்த்ததுக் கிடையாது.
படிப்பறிவுப் பெற்றும் நடுநிலை வரலாற்றை அறிந்துக்கொள்ளாமல் அறியாமையில் கிடந்த மக்களுக்கே இன்றைய இஸ்லாமிய சமூகத்தின் அர்பணிப்பு மிகுந்த சேவை புதுமையாகப் படுகிறது. இப்போதாவது பட்டு நடுநிலை வரலாற்றை, உண்மையை தேட தொடங்கினால் சரிதான். சென்னை செயற்க்கை பேரிடரின்போது வெளியில் வந்த மற்றொரு விசயம் தமிழன் இலவச அரசியலுக்கு ஏமாந்தவன்தான் என்றாலும் பேரிடர் என்று வரும்போது தலையில் கைவைத்து சோர்ந்து உட்கார்ந்துவிடுபவன் இல்லை என்பதையும் நிருபித்திருக்கிறான்.
இயற்க்கைப் பேரிடர் என்றாலும் செயற்க்கை பேரிடர் என்றாலும் தமிழன் தன்னைத் தானே மீட்டுக்கொண்டு வெகு விரைவிலேயே எழுந்து நின்றுவிடக் கூடியவன் என்பதையும் இந்த செயற்க்கைப் பேரிடர் நிருபித்திருக்கிறது. ஒரே வருத்தம் பேரிடர் நேர்கையில் இவ்வளவு விரைவாக மீண்டெழ செயல்படும் தமிழ் சமூகம், அரசியல் சமூக மாற்றத்திலும் இத்தகைய விரைவையும் விழிப்புணர்வையும் காட்டினால் இனி வரும் தலைமுறையாவது இத்தகைய பேரிடர்களுக்கு பலியாகாமல் காப்பாற்றப்படுவார்கள்.
David J Praveen
No comments:
Post a Comment