Followers

Friday, December 25, 2015

முஸ்லிமாக நடித்து உளவு பார்த்த ஐபிஎஸ் அதிகாரி!

இந்துத்வாவாதி: சார்.... நீங்கள் 5 வருடம் பாகிஸ்தானில் முஸ்லிமாக நடித்து உளவு பார்த்துள்ளீர்கள். அது பற்றிய அனுபவங்களை ...

Posted by Nazeer Ahamed on Friday, December 25, 2015

சார்.... நீங்கள் 5 வருடம் பாகிஸ்தானில் முஸ்லிமாக நடித்து உளவு பார்த்துள்ளீர்கள். அது பற்றிய அனுபவங்களை பகிரலாமே?

அஜீத் தோவல் ஐபிஎஸ்:

ஐந்து வருடம் அல்ல ஏழு வருடம் உளவு பார்த்துள்ளேன். பாகிஸ்தானின் லாகூரில் ஒரு மிகப் பெரிய தர்ஹா உள்ளது. நிறைய ஆட்கள் அந்த தர்ஹாவுக்கு வருவதும் போவதுமாக இருந்தனர். நானும் ஒரு முஸ்லிமாக அந்த கூட்டத்தோடு கூட்டமாக வலம் வந்து கொண்டிருந்தேன். அந்த தர்ஹாவின் ஒரு மூலையில் நீண்ட வெள்ளை தாடியோடு ஒரு மகானைப் போல ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் என்னை சைகையால் அழைத்தார். அழைத்து அவர் என்னிடம் கேட்டார்..

'நீ இந்துவா?'

'இல்லை... நான் இந்து அல்ல' என்று மறுத்தேன்.

'என்னோடு வா...' என்று என்னை அழைத்துக் கொண்டு ஒடுக்கமான சந்துகளின் வழியாக என்னை அழைத்துச் சென்றார். மறு பேச்சு பேசாமல் அவரோடு சென்றேன். அவருடைய வீடு வந்தவுடன் என்னை உள்ளே அழைத்துச் சென்று கதவை தாளிட்டார். கதவை தாளிட்டவுடன் என்னிடம் அவர் திரும்பவும்

'நீ இந்துதானே' என்று கேட்டார். நான் குழம்பிப் போய்

'ஏன் என்னைப் பார்த்து இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறீர்கள்?' என்று கேட்டேன்.

'ஏனென்றால் உனக்கு காது குத்தியிருக்கிறது. முஸ்லிம்கள் காது குத்த மாட்டார்கள்' என்றார்.

'ஆம்... நான் முன்பு இந்து. இப்போது முஸ்லிமாக மதம் மாறியுள்ளேன்' என்று சொன்னேன்.

'இல்லை... பொய் சொல்கிறாய்... இப்போதும் நீ இந்துவாகத்தான் இருக்கிறாய். பயப்படாமல் சொல் நீ இந்துதானே'

'ஆம் நான் இந்துதான்'

'உடனே காதுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து ஓட்டையை அடைத்து விடு. பாகிஸ்தானில் உளவாளியாக இவ்வாறு திரிவது பெரிய ஆபத்தில் போய் முடியும்.'

'சரி நான் மறைத்துக் கொள்கிறேன்.'

'நீ இந்து மதத்தைச் சேர்ந்தவன் என்று எப்படி கண்டு பிடித்தேன் என்பது உனக்கு தெரியுமா?'

'தெரியாது நீங்களே சொல்லுங்கள்'

'ஏனென்றால் நானும் ஒரு இந்துதான்' (சபையில் கைத் தட்டல்) இந்த மக்கள் எனது முன்னோர்களை நிறைய கொன்றுள்ளார்கள். அதற்கு நான் இப்பொழுது பழிக்குப் பழி வாங்கிக் கொண்டுள்ளேன். உங்களைப் போன்ற உளவாளிகளைக் காணும் போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது.' என்று சொல்லிக் கொண்டே அந்த அறையின் அலமாரியை திறந்து எனக்கு காண்பித்தார்.

'இதோ பார் சிவனின் சிலை... அருகில் துர்காவின் சிலை.... நான் இதைத்தான் தினமும் வணங்கி வருகிறேன். வெளியே சென்றால் நான் ஒரு இஸ்லாமிய சூஃபி மகானாக மதிக்கப்படுகிறேன். தர்ஹாவில் எனக்கு மிகுந்த மரியாதையும் கிடைக்கிறது.' என்றார்.

அந்த பெரியவரை அதற்கு பிறகு நான் சந்திக்க முடியவில்லை. அவருக்கு அரசு தரப்பிலிருந்து உதவி ஏதாவது செய்யலாம் என்று நினைத்தேன். அது என்னால் முடியாமல் போய் விட்டது'

------------------------------------------------

ஒரு இந்திய ஐபிஎஸ் அதிகாரி தனது அனுபவங்களை பகிர்ந்ததைத்தான் காணொளியாக நாம் பார்தோம். ஹிந்தி தெரியாதவர்களுக்காக இதனை மொழி பெயர்த்தேன்.

பாகிஸ்தானில் தினமும் அரங்கேறி வரும் குண்டு வெடிப்புகளின் சூத்திதாரிகள் யார் என்பது இப்போது விளங்கியிருக்கும். ஷியா மசூதியில் குண்டு வெடிப்பதும் அடுத்த வெள்ளிக் கிழமை அதற்கு பதிலடியாக சன்னி முஸ்லிம்களின் பள்ளியில் குண்டு வெடிப்பதும் தொடர்கதையாக இருந்ததை படித்திருப்போம். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் 100, 150 என்று முஸ்லிம்கள் இறப்பதற்கு முக்கிய காரணம் யார் என்தை நாம் விளங்கியிருப்போம். 'ஒரு மனிதனைக் கொன்றவன் ஒட்டு மொத்த மனிதனையும் கொன்றவனாவான்' என்று குர்ஆன் கூறியிருக்க ஒரு உண்மையான இஸ்லாமியன் இவ்வாறான கொலை பாதக செயல்களில் ஈடுபடுவானா என்பதை நாம் சிந்திக்க கடமைபட்டுள்ளோம்.

மாறு வேஷத்திலிருக்கும் அந்த சூஃபி ஞானியைப் போல் எத்தனை பேர் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உலா வருகிறார்களோ அதனை அந்த இறைவனே அறிவான்.

இதை எல்லாம் படித்துப் பார்த்த போது எனக்கு ஒரு குர்ஆன் வசனம்தான் ஞாபகத்துக்கு வந்தது.

‘அவர்களும் சூழ்ச்சி செய்தார்கள். இறைவனும் சூழ்ச்சி செய்தான்; சூழ்ச்சி செய்பவர்களிலெல்லாம் சிறந்த சூழ்ச்சி செய்பவன் இறைவனேயாவான்’

(அல்-குர்ஆன் 3:54)

நமது இந்திய நாட்டின் மீது வெறுப்போடு செயல்படும் பாகிஸ்தானிய அரசும் அதன் ராணுவமும்தான் நமக்கு எதிரிகள். அந்த நாட்டு சாதாரண குடி மக்கள் நமக்கு எதிரிகள் அல்ல என்பதை நாம் பிரித்துப் பார்க்க தெரிந்திருக்க வேண்டும். நமது நாட்டில் இந்து பெருங்குடி மக்களையும் இந்துத்வாவாதிகளையும் எவ்வாறு நாம் தரம் பிரித்து பார்க்கிறோமோ அதே அடிப்படையையே இங்கும் நாம் கையாள வேண்டும்.

இஸ்லாமியர்களை கருவறுத்துக் கொண்டிருக்கும் சூழ்ச்சிக்கார்கள் என்றுமே வெற்றியடைய போவதில்லை. அதனை வருங்கால வரலாறு உணர்த்தும்.

#இந்தியா #இந்துத்வா #பாகிஸ்தான்

No comments: