Followers

Wednesday, December 09, 2015

மசூதியில்லா ஊரில் குடியிருக்கவேண்டாம்; இது புது மொழி!



நல்லது எப்படி நடந்தா என்ன? ப.ஜ.கவும் சேறாக அடித்து செல்ல உதவிய வெள்ளமும் நன்மைக்கே! கடவுளா தந்த பரிசு; ஒழிஞ்சுது ப.ஜ.க தமிழ்நாட்டில். இனி தமிழ்நாட்டில் இந்த ஒன்பது so-called தலைகள் தவிர [இவர்கள் கூட எங்கிருக்கிறார்கள் என்று எவனுக்கும் தெரியாது] ஒரு பய கிடையாது. சொத்தமூர்த்தி பவனிலாவது வேட்டி கிழிக்க நாலு போங்ரஸ்காரன் இருப்பான். இங்கே ப.ஜ.கவில் ஒரு பயலும் கிடையாது.

எந்த மதம் என்ன நினைத்தாலும் என் கொள்கையில் மாற்றம் இல்லை. கடவுளை, மதத்தை படைத்தவன் மனிதன் தான். இது இப்போ விவாதம் அல்ல... என் கேள்வி அப்படி நாம் படைத்த கோவில், நம்மை பாதுக்காக உபயோகப்படவில்லை என்றால், நமக்காக அந்த கோவில் கதவுகள் திறக்கவில்லை என்றால் அந்த கோவில்கள் இருந்தால் என்ன? போனால் என்ன?
எல்லாப் பொய்க்கும் ஒரு சப்பை கட்டு----அதன் பெயர் "ஆகம விதிகள்." ஏண்டா, அதை ஒரு தடவையாவது காட்டுங்க. புளுவரதுக்கு ஒரு அளவு வேணும்! நியூட்டன் விதிகள் மாதிரி ஆகம விதிகளையும் எல்லோரும் பார்க்கும்படியாக பிரிண்டில் போடுங்களேன்.

"ஆகம விதிகள் என்பது ஒரு பக்கா பிராடு விதிகள்" என்று என் வாழ்கையில் நடந்த சம்பவத்தை வைத்து ஒரு உதாரணத்துடன் நிரூபிக்க முடியும். என் காதலி, தற்போது என் மனைவி, கபாலீஸ்வரர் கோவிலில் தான் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று தான் ஆசைப்பட்டார்கள். கேட்டால், ஆகம விதிகள் படி அங்கு திருமணம் நடத்தக் கூடாது என்றார்கள். அப்ப எந்த திருமணமும் அங்கு ஆகம விதிகள் பிராகாரம் நடத்த அனுமதியில்லை. இது 1984--வரை. இப்ப திருமணம் நடக்கிறது! எப்படி? பச்சையப்பன் செய்யும் வேலால்!

கடவுள் போட்ட ஆகம விதிகளை பாப்பான் மாற்றுகிறான் என்றால் கடவுளை கும்பிடுவதற்கு பதிலாக அவனையே கும்பிடுவோமே!---அவன் தான் கடவுள் விதிகளை மாற்றும் அதிகாரம் உள்ளவன் என்றால் [சூத்திரப் பயல்களுக்கு---பிராமணர் அல்லாதார் எல்லோரும் சூத்திரரே!] எல்லா சைவ உயர் ஜாதியினரும் சூத்திரர்களே. இது உண்மை.

இப்போ கொடுக்குற பணத்தை கொடுத்தால் கடவுளின் ஆகம விதிகள் மாற்றப்படும். கடவுளின் ஆகம் விதிகளை மாற்றுயதில் ஒரு எம்.எல்.ஏ விற்கும், பிரபல ஹோட்டலுக்கும் சம்பந்தம் உண்டு. கல்யாணம் முடிந்து சோறு டோக்கன் மூலம் கூட்டுக் கொள்ளை அங்க தானே!

பின்குறிப்பு:
நம்ம கடவுள் போட்ட ஆகம விதிகளை ஒரு மனிதன் மாற்றமுடியும் என்றால்? கோவில்கள் கொள்ளையர்கள் கூடாரம் என்று சொன்னதை மாற்றி கோவில்கள், ஒரு குறிப்பிட்ட கும்பல், கொள்ளையடிக்கும் கூடாரம் என்று சொல்லாம்.

பின்குறிப்பிற்கு பின்குறிப்பு:
இப்படி உண்மை தெரிந்தும் சூத்திரர்கள் கோவிலில் கொட்டும் பணத்திற்கு என்ன அர்த்தம் (அங்கு கொட்டும் 99% பணம் சூத்திரப் பயல்களுதுதான்).

அப்ப இன்னொரு புது மொழி:
சூத்திரனுக்கு அறிவு மட்டல்ல--சூத்திரனுக்கு அறிவே இல்லை!

http://www.nambalki.com/2015/12/blog-post_20.html

No comments: