Followers

Tuesday, December 22, 2015

ஏர்வாடி கொலை - நடுநிலை சமுதாயம் என்பதை நிரூபிப்போம்!

ஏர்வாடியில் நேற்று சகோதரர் ஹாஜா மைதீன் சிலரால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். ஆட்டோ ஓட்டுனரான இவர் இயக்க பணிகளில் தீவிரமாக இருந்தவர் என்று தெரிகிறது. கொலை செய்த கயவர்களை கைது செய்யச் சொல்லி ஏர்வாடியில் மிகப் பெரும் ஆர்பாட்டம் நடைபெற்றது. குற்றவாளிகளை கைது செய்து விடுகிறோம் என்று சொன்னதன் பேரில் கூட்டத்தினர் கலைந்து சென்றுள்ளனர்.

பாவிகள் உடம்பை மிகக் குரூரமாக சிதைத்துள்ளனர். இத்தனை கொடூரமாக இந்த கொலையை செய்தவர்கள் கண்டிப்பாக மனிதர்கள் அல்ல... மிருகங்கள் என்றே சொல்வேன். வாழ வேண்டிய வயதில் இறந்த அந்த இளைஞனை பிரிந்து வாடும் அவரின் குடும்பத்தவருக்கு இறைவன் சாந்தியையும் சமாதானத்தையும் தந்தருள்வானாக!

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் - "நாங்கள் இறைவனுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பச் செல்பவர்கள்"

இந்த கொலை முன் பகை காரணமாக நடந்ததா? அல்லது இந்துத்வாவாதிகளின் வெறிச் செயலா என்பது விசாரணையில் இரண்டொரு நாளில் தெரிந்து விடும். அதுவரை இஸ்லாமியர்களாகிய நாம் பொறுமை காப்போம். குடும்ப பிரச்னை, கந்து வட்டி பிரச்னை, பெண் பிரச்னை போன்ற காரணங்களால் முன்பு கொல்லப்பட்ட பல இந்துத்வாவாதிகளை முஸ்லிம்கள் செய்தார்கள் என்று சொல்லி கடைகளை உடைப்பதும் பஸ்ஸை கொளுத்துவதுமாக முன்பு இந்துத்வாவாதியினர் கலவரம் செய்தனர். ஆடிட்டர் ரமேஷ் கொலை முதல் பல இந்துத்வாவினர் கொலைகளில் வெறியாட்டத்தைப் பார்தோம். முடிவில் கொலை செய்தது அவர்கள் ஆட்களே என்பது தெரிய வந்தது. எனவே உண்மை முழுவதுமாக தெரியும் வரை யாரும் உணர்ச்சி வசப்பட வேண்டாம்.

நம்மோடு அண்ணன் தம்பிகளாக பழகி வரும் இந்துக்கள் என்றுமே நம்முடைய சகோதரர்களாக தொடர்வர். அதற்கு எந்த பாதகமும் வந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முஸ்லிம்களின் மேல் கட்டவிழ்த்து விடப்பட்ட தீவிரவாத முத்திரை மழை வெள்ளத்தால் காணாமல் போனதில் இந்துத்வாவாதிகள் பைத்தியம் பிடித்து அலைகிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு ஆம்பூரில் தேவையில்லாமல் இஸ்லாமியர்களை வம்புக்கிழுத்ததை நாம் அறிவோம். அதே போல் தற்போது நடந்த கொலையும் இருக்கலாம். இறைவனே அறிவான். எனவே இந்துத்வாவினர் வலையில் நாம் விழுந்து விட வேண்டாம். காவல்துறை வசம் நம்மிடம் உள்ள ஆதாரங்களை சமர்பித்து உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் சிக்க வைக்க முயலுவோம். எக்காரணத்தை முன்னிட்டும் அப்பாவிகளை துன்புறுத்துவதோ, பேருந்துகளை உடைப்பதோ, கடைகளை அடைக்கச் சொல்லி வற்புறுத்துவதோ நிகழக் கூடாது. நமக்கும் இந்துத்வாவாதிகளுக்கும் உள்ள வித்தியாசத்தை இந்த நிகழ்விலும் நாம் மக்களுக்கு நிரூபிப்போம். நாம் ஒரு முன் மாதிரி சமுதாயம் என்பதை உலகுக்கு மீண்டும் காட்டுவோம்.

'நம்பிக்கை கொண்டோரே! இறைவனுக்குக் கட்டுப்பட்டு நீதிக்கு சாட்சிகளாக ஆகி விடுங்கள். ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள். அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள். இறைவன் நீங்கள் செய்வதை நன்கு அறிந்தவன்'
-குர்ஆன் 5:8

2 comments:

Dr.Anburaj said...பிரச்சனைகளை சட்ட வழிமுறைகள் படி தீா்த்துக் கொள்ள மக்களைப் பழக்க வேண்டும். ஆவேசங்கள் ஆா்ப்பாட்டங்கள் என்றும் நன்மையைத் தந்ததில்லை. கொலையில் கொடியாரை வேந்தொறுத்தல் பைங் கூழட களை கட்டதனோடு நோ் ” களைகள் நீக்கப்பட வேண்டும். ஏா்வாடியில் நடந்த கொலை முஸ்லீம் சமய சமூக பிரச்சனையாக்கக் கூடாது.பொது சட்ட ஒழுங்கு பிரச்சனையாகவேப் பாா்க்க வேண்டும். அதுதான் நல்லது.இறந்தவருக்கு நல்ல பரக்கத்தை பரமாத்மா அருளுவாராக! ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

Dr.Anburaj said...

ஏா்வாடி யில் நடைபெற்ற கொலை முஸ்லீம் சமூக பிரச்சனையாகப் பாா்ப்பது நல்லது அல்ல என்ற கருத்து ஏற்கப்படவில்லை.