
"நண்பரொருவர் சேவாபாரதியின் சேவையை பதிவிடுங்களென்றார். படம் அனுப்புங்க என்றேன். அனுப்பினார். கடலூரில் நடந்த சேவை என சொன்னார்.....
படத்தை நன்றாக கவனிங்க... மழை பெய்த அறிகுறியே இல்லை. உணவு வாங்குவோர் மலையாளிகள். ஏதோ கோவில் விழா போல் இருக்கேன்னு கேட்டதும் ப்ளாக் செய்துட்டாப்டி."
- Satheesh Kumar
--------------------------------------------------
நண்பர் சதீஸ் குமார் சென்னையிலும் கடலூரிலும் இஸ்லாமியர்கள் செய்த மீட்பு பணிகளை வரிசையாக பதிவிட்டுக் கொண்டு வந்தார். பெரும்பாலும் இஸ்லாமிய அமைப்புகளாகவே உள்ளதே... இந்து அமைப்புகளின் செய்தி வரவில்லையே என்று நினைத்த ஒரு இந்துத்வாவாதி நண்பர் சதீஸ்குமாரை தொடர்பு கொண்டுள்ளார். அவர்கள் இருவருக்கும் இடையில் நடந்த உரையாடல்தான நாம் மேலே பார்த்தது.
இந்துத்வாவாதிகளே! கொஞ்சம் சிந்தியுங்கள். கலவரத்தை தூண்டுவதற்கு மட்டும் அப்பாவி இந்து பிற்படுத்தப்பட்ட மக்களை பகடைக்காய்களாக பயன்படுத்துகிறீர்களே... அவர்கள் சிரமத்தில் மாட்டிக் கொண்டபோது உயிருக்கு பயந்து ஓடி ஒளிந்து கொண்டு போட்டிக்கு பொய்யான தகவலை ஏன் பகிருகிறீர்கள்?
உங்கள் தலைவன் மோடியின் சென்னை பயணத்திலும் போட்டோ ஷாப் வேலை செய்து பிபிசி முதற்கொண்டு கிழி கிழியென்று கிழித்து தொங்கவிடும் அளவுக்கு நடந்து கொள்கிறீர்கள். இது போன்ற பொய் செய்திகளால் நமது நாட்டுக்கு எவ்வளவு இழிச் சொற்கள். தலைவன் எவ்வழியோ அவவ்ழியே தொண்டனும் செல்கிறீர்கள்.
குன்றக்குடி அடிகளார், கிருபானந்த வாரியார், விவேகானந்தர், இராமலிங்க அடிகளார், திருவள்ளுவர், நம் நாட்டு சித்தர்கள் போன்ற மகான்கள் உண்மையான இறை விசுவாசிகளாக இருந்தனர். இந்து மதத்தின் பெருமையையும் உலகுக்கு எடுத்து சென்றனர்.
ஆனால் நீங்கள் பின் தொடரும் மோடிக்கோ, அமித்ஷாவுக்கோ, பிரவீன் தெகோடியாவுக்கோ, ராமகோபாலனுக்கோ உண்மையான இறை பக்தி கிஞ்சிற்றும் கிடையாது. தங்களின் இருப்பை நிலை நிறுத்திக் கொள்ள, வர்ணாசிரமத்தை கட்டிக் காத்துக்கொள்ள உங்களைப் போன்றவர்களை பகடைக்காய்களாக பயன்படுத்துகின்றனர். சில காலம் கழித்து இதனை நீங்களே உணருவீர்கள். அது வரை நாங்களும் எங்கள் பணிகளை தொய்வின்றி செய்து கொண்டிருக்கிறோம். வழி விடுங்கள்.
1 comment:
12.12.2015 நாளிட்ட தினமணியில் ஈஸ்வர அல்லா தேரே நாம் என்ற கட்டுரை உள்ளது.அதை வெளியிடும் யோக்கியதை தங்களுக்கு உண்டா ?
Post a Comment