Followers

Wednesday, December 16, 2015

கெஜ்ரிவாலின் அனல் பறக்கும் பேச்சால் கதி கலங்கிய மோடி!


கெஜ்ரிவாலின் அனல் பறக்கும் பேச்சால் கதி கலங்கிய மோடி!

'மோடி அவர்களே! உங்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். மற்றவர்களை பயம் காட்டி ஒடுக்கியது போல் என்னை ஒடுக்கி விடலாம் என்று கனவிலும் எண்ண வேண்டாம். உங்களுடைய சிபிஐ யை வைத்து என்னை பணிய வைக்க முயல்கிறீர்கள். எனது கடைசி மூச்சு உள்ள வரை இந்த நாட்டுக்காக உழைத்து உயிரை விடுவேனே ஒழிய உங்களிடம் அடி பணிய மாட்டேன். நான் எந்த மண்ணைச் சார்ந்தவன் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள். இது வரை இந்த நாட்டுக்கு நீங்கள் செய்த பாவ காரியங்களுக்காக நாட்டு மக்களிடம் நீங்கள் மன்னிப்பு கேளுங்கள்'

கெஜ்ரிவாலின் வீடியோவைக் காண...

https://www.facebook.com/suvanappiriyan/videos/952025231556325/

ஒரு முதலமைச்சர் இவ்வளவு காட்டமாக ஒரு பிரதமரை விளாசித் தள்ளியது இந்திய வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன். கரண் தாப்பரிடம் மோடி முன்பு எப்படி விக்கித்து நின்றாரோ அதே நிலைமையை இன்று பார்க்கிறேன்.

கெஜ்ரிவால் அவர்களே! நீங்கள் தைரியமாக இருங்கள் உங்கள் பின்னால் நாட்டு மக்கள் இருக்கின்றனர். உண்மை ஒரு நாள் வெல்லும். அன்று அமீத்ஷாவும் மோடியும் கண்டிப்பாக சட்டத்தின் பிடியில் சிக்குவார்கள். அதுவரை நீங்களும் பொறுமை காட்டுங்கள். நாங்களும் பிரார்த்திக்கிறோம்.

தன்னை தீவிரமாக எதிர்ப்பவர்களை மறைமுகமாக கொன்று விடுவது இந்துத்வாவின் வழக்கம். காந்தியிலிருந்து ஹரேன் பாண்டியாவிலிருந்து ஹேமந்த் கர்கரே வரை இதுதான் வரலாறு. அரவிந்த் கெஜ்ரிவால் மிக கவனமாக இருக்க வேண்டிய நேரமிது.

No comments: