Followers

Sunday, December 27, 2015

மோடியின் பாகிஸ்தான் விஜயம் குறித்து....





'நம்முடைய ஜவான்கள் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தால் கொல்லப்படுகிறார்கள். நமது பிரதமர் மன் மோகன்சிங் பாகிஸ்தான் பிரதமரோடு கோழிக் கறி சாப்பிட்டுக் கொண்டுள்ளார்'

தேர்தல் பிரசாரத்தில் சென்ற ஆண்டு மோடி...

தற்போது நிலைமை ஏதாவது மாறியுள்ளதா? அதை விட அதிக முறுகல் நிலைதானே உள்ளது? தற்போது நவாஸ் ஷெரீஃபோடு மோடி சிக்கன் பிரயாணி சாப்பிடுகிறாரே? நவாஸ் ஷெரீஃபின் பேத்தியின் கல்யாணத்துக்கும் சென்று வருகிறாரே? மன்மோகன் சிங்கை விட நெருக்கமாக உள்ள மோடியை யார் கேள்வி கேட்பது?

முன்பு கேட்டது எந்த வாய்? தற்போது சிக்கன் பிரியாணி சாப்பிடுவது எந்த வாய்?

---------------------------------------------

ஒரு கற்பனை கலந்துரையாடல்....

நவாஸ் ஷெரீஃப்: வாங்க மோடி ஜீ.... சாப்பாடெல்லாம் நல்லா இருந்ததா?

மோடி: ஓ.... பிரமாதம்.... அது கடவுள் இது கடவுள் என்று சொல்லி ஒன்னுத்தயும் சாப்பிட உட மாட்டேங்க்றாய்ங்க.. இப்போ தான் வயிறு நிரம்ப நிம்மதியா சாப்பிட்டேன்....

நவாஸ் ஷெரீஃப்: நல்லது... நாட்டின் பாதுகாப்பை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மோடி: எந்த குறையும் இல்லை. இந்தியாவில் பாதுகாப்போடு செல்லும் நானே இங்கு சர்வ சுதந்திரமாக வந்துள்ளேன். இதிலேயே தெரியவில்லையா?

நவாஸ் ஷெரீஃப்: உங்க கட்சி ஆட்கள் பாகிஸ்தானை ஏகத்துக்கும் கலாய்க்கிறாங்களே.. நீங்க கொஞ்சம் கண்டிக்கக் கூடாதா?

மோடி: அதை எல்லாம் கண்டுக்காதீங்க... நம்ம இந்துத்வா பசங்களுக்கு உங்க நாட்டை பத்தி ஏதாவது சொன்னாத்தான் உணர்ச்சியே வருது.... 'பாரத் மாதாகீ ஜே' என்று அப்பதான் கத்துராய்ங்க... எங்களுக்கு சில மாநிலங்களில் ஓட்டு விழுவதே உங்க நாட்டு புண்ணியத்துல தான். அதனால இதெல்லாம் சீரியஸா எடுத்துக்காதீங்க...

நவாஸ் ஷெரீஃப்: சரியாக சொன்னீர்கள். எனக்கும் பிரச்னை வரும் போதெல்லாம் காஷ்மீர் பகுதியில் ராணுவத்தை அனுப்புவேன். உடன் மக்களின் அனைத்து கவனமும் உங்க நாட்டின் மீதுதான் இருக்கும். நாம் ரெண்டு பேரும் சேர்ந்து மக்களை மடையர்களாக்கிக் கொண்டே இருப்போம்.

மோடி: ஆஹா இந்த விஷயத்திலும் நாம ஒத்து போறோம். பலே பலே...

-------------------------

தொலைக் காட்சியில் நவாஸ் ஷெரீஃபும் மோடியும் பீஃப் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நிகழ்வை பார்த்த சென்னி மலையும் ராம் நிவாஸூம் 'ஆஹா.. மோடிஜியின் என்ன ஒரு ராஜதந்திரம் பாரத்தாயா... போலோ... பாரத் மாதாகி ஜே' என்று புளங்காகிதம் அடைந்தனர் மோடி நிறையவே இவர்கள் காதில் பூ சுற்றியதை அறியாதவர்களாக!. :-)

1 comment:

Dr.Anburaj said...


பதவியில் இருப்பது முள் கிாிடம் சுமப்பது போல்.பதவியில் இல்லாத போது எதும் பேசலாம்

நம்முடைய ஜவான்கள் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தால் கொல்லப்படுகிறார்கள். நமது பிரதமர் மன் மோகன்சிங் பாகிஸ்தான் பிரதமரோடு கோழிக் கறி சாப்பிட்டுக் கொண்டுள்ளார்'

தேர்தல் பிரசாரத்தில் சென்ற ஆண்டு மோடி...

பேசியது நிச்சயம் உண்மையான கருத்துதான்.ஆனால் அரசியல் தூக்கலாக உள்ளது. பதவியில் இருப்பவா்கள் நிலை வேறுதான்.

பாக்கிஸ்தான் நாடும் நமது தாய்நாடும் பகை மறந்து பரஸ்பரம் நட்புாிமை பாராட்டினால் தொழில் வளா்ச்சிக்கும் பொருளாதார மேம்பாடுக்கும் நிறைய வாய்ப்பு உள்ளது. நிச்சயம் அது குறித்து செய்யப்படும் சிறு முயற்சிகளைக் கூட நிறைய பாராட்டி வரவேற்க வேண்டும்.

எப்படியும் மோடி அவர்களை குற்றம் சொல்லியே ஆக வேண்டும்.உமக்கு இல்லையேல் தின்ன சோறு ஜீரணிக்காது.

நன்றாக அழுது தொலையும்.