Followers

Wednesday, December 09, 2015

உயிரற்றதிலிருந்து உயிருள்ள படைப்பை உருவாக்குதல் - குர்ஆன்



'உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறாய்: உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறாய். நீ நாடியோருக்குக் கணக்கின்றி வழங்குகிறாய்' என்றும் நபியே கூறுவீராக!....

குர்ஆன் 3:27


எனது இளைய மகனுக்கு கோழி வளர்ப்பது: அது குஞ்சு பொரிக்க வைப்பது என்பதில் எல்லாம் அதிக ஆர்வம். அந்த வகையில் எட்டு முட்டையை அடை காக்க வைத்த போது அதனை நோட்டமிட்டேன். கோழி முட்டை என்பது தாயிடமிருந்து வெளியாகி விடுகிறது. கனமான ஓட்டினால் காற்று புகாதபடி அடைக்கப்பட்டுள்ளது. அதனுள் தண்ணீரோ உணவோ செல்லவும் வாய்ப்பில்லை. மனிதப் பிறப்பிலாவது தொப்புள் கொடி மூலமாக தாயிடமிருந்து குழந்தைக்கு உணவு கடத்தப்படுகிறது. ஆனால் கோழி முட்டையில் இவ்வாறான எந்த அமைப்பும் இல்லை. 23 நாட்கள் கொழி அடை காத்தவுடன் ஆச்சரியமாக உயிருடன் உள்ள கோழிக் குஞ்சுகள் முட்டையை உடைத்துக் கொண்டு வெளியேறுகின்றன. அறிவியல் ஆய்வுகள் இந்த இடத்தில் தோற்றுப் போகின்றன. பல மாதங்களாக உயிரற்று கிடந்த அந்த முட்டைக்கு உயிர்க் கொடுத்தவன் யார்?

அதே போல் செடி கொடிகளை விளைவிக்க விதைகளை மண்ணில் இடுகிறோம். அந்த விதையானது பல ஆண்டுகளாக பாட்டில்களில் அடைபட்டுக் கிடக்கிறது. நமக்கு தேவைப் படும் போது மண்ணில் விதைத்து சிறிது தண்ணீரையும் ஊற்றுகிறோம். என்ன ஆச்சரியம்? பூமியை பிளந்து கொண்டு செடி, கொடிகள் வெளியாகிறதே? இதனை என்றாவது சிந்தித்து பார்த்திருக்கிறோமா?

நாம் உயிரினங்கள் என்பது எண்ணற்ற செல்களால் ஆன ஒரு மூலக்கூறு என்பதைப் படித்திருக்கின்றோம். அதாவது ஒரே ஒரு செல்லிலிருந்து செல் டிவிசன் என்ற முறையில் பல்கிப் பெருகி கோடிக்கணக்கான செல்களால் உருவானதே உயிரினங்களின் உடல்கள். இந்த ஒவ்வொரு செல்லிலும் DNA என்ற சேர்மம் (Molecule) இருக்கிறது. இதுவே உயிரினங்களின் தோற்றத்திற்கு மூலக்காரணமாய் அமைந்த சேர்மம் ஆகும். DNA என்ற இந்த சேர்மத்தை தோற்றுவிக்கும் மூலப்பொருள் அமினோ அமிலம் (Amino Acid) என்ற மூலக்கூறு ஆகும். இந்த அமினோ அமிலம் எப்படி உருவாகின்றது எனில், அம்மோனியா, மீதேன், நீர், போன்ற மூலக்கூறுகளுடன் (Molecules) சேர்ந்து இவை அமினோ அமிலமாக மாறுகின்றது. இவைகள் அனைத்தும் உயிரற்றவை என்பதை நாம் அறிவோம். உயிரற்ற இவைகளிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்தும் இறைவன் உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்தும் ஆற்றல் உடையவன் ஆவான்.

1 comment:

Dr.Anburaj said...


குரான்எ னற அரேபியாவில் பிறந்த புத்தகத்தில் அறிவியல் இலலை.இல்லை.இல்லவேயில்லை. இலலவேயில்லை.