


ஆனந்த கண்ணீர் வர வைத்த மாணவர்களின் செயல்பாடு
கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பலதரப்பட்ட மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்காக TNTJ தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பல்வேறு நிவாரண உதவிகளை வீடு தேடி சென்று செய்து வருகின்றனர்.
இந்த நிவாரண வேலைகளுக்காக மாநிலத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து TNTJ தொண்டர்கள் கடலூர் மாவட்ட TNTJ மர்கஸ் களில் குவிந்தவண்ணம் உள்ளனர்.
இவர்கள் செய்யும் வேலைகளை தினம் தினம் பார்த்த சிதம்பரம் காமராஜ் பள்ளிகூட மாணவர்கள் "நாங்களும் உங்களோடு உழைக்கின்றோம் " என கூறி மூட்டைகளையும் மற்ற பொருட்களையும் லாரியிலிருந்து இறக்கி மர்கசில் வைத்தும் மற்ற வேலைகளையும் செய்தனர்.
இப்பணியில் (ஹிந்து முஸ்லிம் கிறிஸ்துவர்) அனைத்து சமுதாய மாணவர்களும் பங்கேற்று தங்கள் பங்கிற்கு கடுமையாக உழைத்தனர்
கடுமையாக வேலை செய்துவிட்டு பள்ளிக்கூட நேரம் வந்ததும் பள்ளிகூடத்திற்கு சென்றனர் .
இந்த இளம் வயதில் பொதுநலத்தோடு செயல்பட்ட மாணவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்திப்போம்
அனைத்து மாணவர்களும் பரங்கிபேட்டையை சேர்ந்தவர்கள்.
புகழனைத்தும் இறைவன் ஒருவனுக்கே
...........................முத்துராஜா .
சிறந்த வழி காட்டுதல்கள் இருந்தால் அனைத்து தரப்பு மக்களையும் மனித நேயப் பணியில் ஈடுபடுத்தலாம் என்பதற்கு இந்நிகழ்வு முக்கிய எடுத்துக்காட்டாக உள்ளது.
No comments:
Post a Comment