Followers

Friday, November 08, 2019

எய்வகைசார் மதங்களிலே பொய்வகைச்சா த்திரங்கள்

எய்வகைசார் மதங்களிலே பொய்வகைச்சா த்திரங்கள்
எடுத்துரைத்தே எமது தெய்வம் எமது தெய்வம் என்று
கைவகையே கதறுகின்றீர் தெய்வம் ஒன்றென் றறியீர்
அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில்புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படும்பரம்பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்தபே ரொளியே
அன்புருவாம் பர சிவமே!
--வள்ளலார்
ஓதம் ஒலிக்கும் உலகை வலம் வந்து பாதங்கள் நோவ நடந்தும் பயனில்லை
காதலில் அண்ணலைக் காண இனியவர் நாதன் இருந்த நகரறி வாரே
இறைவனைக் காணுதல் பொருட்டு கடல் சூழ்ந்த உலகம் முழுவதும் கால்கள் நோவ நோவ சுற்றி வரினும் பயன் கிட்டாது, மனித உயிர்களிடத்தின் பால் கொள்ளும் அன்பின் மூலம் கடவுள் வசிக்கும் இடத்தை அறியலாம் என்கிறார் திருமூலர். மனித இனத்தைப் பிரித்துப் பார்க்காமல், அணைத்து ஜீவ ராசிகளிடத்தும் அன்பு புரிதலின் அவசியத்தையும் கூறுகிறார் திருமூலர்.
திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப் புரையற் றிருந்தான் புரிசடை யோனே
இறைவனை அனுபவிக்க வேண்டுமென்றால் முதலில் சிந்தயைத் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். களங்கங்களை நீக்க வேண்டும். அசைவற்ற நீர் போல் சிந்தனை தெளிந்தார்க்கு மாசு மறு அற்றவன் வெளிபட்டு அருள் செய்வான்.
உன்னத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள் மெள்ளக் குடைந்துநின் றாடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பரந்து திரிவாரே கள்ள மனமுடைக் கல்வியி லோரே
மனத்தின் தன்மையை மாற்றுவதன் மூலமாகவே ஆன்மீக அனுபவத்தைப் பெற முடியும். உள்ளத்தினுள்ளேயே திருக்கோயில்களிலுள்ள இறைவனைச் சந்திக்கலாம். இந்த அனுபவத்தை உதறிவிட்டுப் பள்ளமும் மேடும் திரிந்து என்ன பயன்?
------------------------------------------------
இந்து மதம் இறைவனை காண இவ்வாறு பல வழிகளைச் சொல்லிக் கொண்டிருக்க பாபரி மசூதியை இடித்து விட்டு அங்கு தான் நான் கோவில் கட்டுவேன் என்று அடம் பிடித்து இந்திய முஸ்லிம்களின் ரத்தம் குடிக்க காத்திருக்கும் இந்துத்வாக்கள் இனியாவது திருந்துவார்களா?


8 comments:

Dr.Anburaj said...

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில்புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படும்பரம்பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்தபே ரொளியே
அன்புருவாம் பர சிவமே!
--வள்ளலார்
அன்பினால் இறைவனை அடையலாம்.
முஹம்மது எதனால் அடையலாம் எ ன்றாா் ?
முஹம்மது அரேபிய மக்களுக்கு எற்படுத்தி உற்சாகம் காரணமாக பெரும்”போர்” களைச் செய்யும் தகுதியைத்தானேஅரேபியர்கள் பெற்றார்கள். முஹம்மது 50-64 சிறிய பெரிய யுத்தங்களை நடத்தினாா்.அன்பின் மிகுதியினாலா ? ரெகானாவை ....... ஆக்கிக் கொண்டது அன்பின் மிகுதியிலா ?

இன்றும் பயங்கரவாத காடையர்களை உற்பத்தி செய்யும் அடிப்படை தத்துவ ஆதாரமாக இருப்பது குரானும் முஹம்மதுவும்தானே.

Dr.Anburaj said...

இதையும் வெளியிட வேண்டுகிறேன்.
------------------------------------------------
அயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது!
November 9, 2019

சுதந்திர இந்தியாவில் இதுவரை காணாத எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வழக்கு அயோத்தி வழக்கு. இந்த வழக்கு 2019, நவம்பர் 9ஆம் தேதி முற்றுப்பெற்றிருக்கிறது. இதன்மூலமாக, பலநூறு ஆண்டுகால ஹிந்துக்களின் கோயில் நில உரிமைப் போராட்டமும் வெற்றிகரமாக முடிவுக்கு வந்திருக்கிறது. தவிர, நாட்டில் அடாவடி மூலம் பீதியைக் கிளப்பி அரசியல் அதிகார வர்க்கத்தையும் நீதித்துறையையும் கட்டுக்குள் வைத்திருந்த நேரடி நடவடிக்கைப் பேர்வழிகளின் அத்துமீறல்களுக்கும் இத்தீர்ப்பு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

1950இல் கோபால் சிம்ல விஷாரத் தொடர்ந்த நில உரிமை வழக்கு 69 ஆண்டுகளை பலநிலைகளில் கடந்து இன்று ஹிந்துக்களுக்கு சாதகமான முடிவை அளித்திருக்கிறது. ஸ்ரீ ராமஜன்மபூமி நியாஸ் அமைப்பின் நிறுவனர் மஹந்த பரமஹம்ஸ ராமசந்திர தாஸின் தொடர் போராட்டங்கள், விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மறைந்த தலைவர் அசோக் சிங்கால், பாஜக தலைவர் லால் கிருஷ்ண அத்வானி உள்ளிட்டோரின் தியாகங்களுக்கு உரிய மரியாதை கிடைத்திருக்கிறது.உண்மையில் இத்தீர்ப்பு 2010 செப். 30லேயே அளிக்கப்பட்டிருக்க வேண்டும். நீதிபதிகள் சுதிர் அகர்வால், டி.வி.சர்மா, எஸ்.யு.கான் ஆகியோர் அடங்கிய அலகாபாத் உயர் நீதிமன்ற அமர்வு, வழக்கின் இறுதிக்கட்டத்தை அப்போது ஓரளவு எட்டியது. ஆனால், அன்றைய ஆளும் அரசின் தூண்டுதல், தவறான வழிகாட்டல் காரணமாகவே அப்போதைய நீதிபதிகள் தடுமாறினர். வழக்கில் தொடர்புடையை 2.77 ஏக்கர் சர்ச்சைக்குரிய நிலத்தை ராம் லல்லா, நிர்மோஹி அகாரா, சன்னி வக்ஃப் வாரியம் ஆகியோர் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளுமாறு ‘பஞ்சாயத்து’ செய்து தனது தீர்க்கமான கடமையிலிருந்து வழுவியது நீதிமன்றம். அதன் விளைவாக அயோத்தி வழக்கு மேலும் சிக்கலானது. யாருக்கும் திருப்தி அளிக்காத அந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடுகள் செய்யப்பட்டன. பலதரப்பினரும் அந்த வழக்கில் இணைய மனு செய்தனர். இறுதியில் பல தடைகளைக் கடந்து, இஸ்லாமியத் தரப்புக்கு சாதகமான காங்கிரஸ் வழக்கறிஞர் அணியின் தாமதத் தந்திரங்களைப் புறம் தள்ளி, ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இறுதித் தீர்ப்பை அளித்திருக்கிறது. ...2

Dr.Anburaj said...

2
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சரத் அரவிந்த் போப்டே, நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி அசோக்பூஷண், நீதிபதி அப்துல் நஸீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, ஒருமித்த குரலில், நாட்டின் இறையாண்மையை மேலும் வலுப்படுத்தும் விதமாகத் தீர்ப்பளித்திருக்கிறது. முந்தைய அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பு தவறானது என்று அறிவித்த நீதிபதிகள், ஸ்ரீ ராமனுக்கே அந்த இடம் என்பதை தெள்ளத் தெளிவாக உறுதிப்படுத்தி இருக்கின்றனர்.

அடிப்படையில் இந்த வழக்கு நில உரிமை தொடர்பானது. அயோத்தியில் சர்ச்சைக்குரியதாகக் குறிப்பிடப்படும் ராமஜன்மபூமி- பாபர் மசூதி நில விவகாரத்தில் தொடர்புடைய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பதே கேள்வி. அங்கு ஏற்கனவே ஹிந்துக்கள் கொண்டிருந்த வழிபாட்டு உரிமையும் வழக்கில் விசாரிக்கப்பட்டது. அந்த இடத்தில் முன்னர் கோயில் இருந்ததற்கான ஆதாரங்களை தொல்லியல் துறையும் அளித்திருந்தது. அந்த இடத்தில் இருந்த சர்ச்சைக்குரிய கட்டடம் 1992 டிசம்பர் 6இல் இடிக்கப்பட்டு தற்காலிகக் கோயில் அமைக்கப்பட்டு வழிபடப்படும் நிலையில் ‘தற்போதைய நிலையே தொடரும்’ (Status Quo) என்ற நீதிமன்றத் தீர்ப்பும் முக்கியமான காரணியாக இருந்தது. அந்தக் கட்டடம் இடிக்கப்பட்டதன் நியாயம் இப்போது உணரப்பட்டிருக்கும்.

ஆயினும் உச்ச நீதிமன்றம் சர்ச்சைக்குரிய கட்டடம் இடிக்கப்பட்டதைக் இந்தத் தீர்ப்பில் கண்டித்திருக்கிறது. சட்டத்தின் பார்வையில் அதுவும் சரியானதே.

அதேசமயம், வருங்காலத்தில் அயோத்தி விஷயத்தில் வேறு எந்த வகையிலும் த்டைகள் வந்துவிடக் கூடாது என்பதில் நீதிபதிகள் ஐவருமே மிகவும் கவனமாகத் தீர்ப்பளித்துள்ளனர்.

Dr.Anburaj said...

இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் நால்வர்: 1. ஸ்ரீ ராமஜன்மபூமி நியாஸ் (ராம் லல்லா தரப்பு), 2. கோயில் தங்களுக்கே பரம்பரையாகச் சொந்தம் என்று கூறும் நிர்மோஹி அகாரா, 3. பாபர் மசூதியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த சன்னி வக்ஃப் வாரியம், 4. அங்கு மசூதியைக் கட்டியதாகக் கூறப்படும் மீர்பாகி வழிவந்தவர்கள் தரப்பில் ஷியா வக்ஃப் வாரியம்.

இவர்களில், ஷியா தரப்பினரின் மனுவையும், நிர்மோஹி அகாரா தரப்பையும் நிராகரித்த நீதிபதிகள், சன்னி வக்ஃப் வாரியத்தின் வாதத்தையும் ஏற்கவில்லை. ஹிந்துக்களின் பலநூறு ஆண்டுகாலப் போராட்டம், ராமன் அங்கு பிறந்தார் என்ற ஹிந்துக்களின் நம்பிக்கை, அந்த இடத்தில் ஏற்கனவே ஒரு கட்டடம் கீழே உள்ளது என்ற தொல்லியல் ஆய்வறிக்கை, வெறும் கட்டுமானத்தை முஸ்லிம்கள் உரிமை கோர முடியாது என்ற வாதம் ஆகிய பல அம்சங்களின் அடிப்படையில், ஹிந்துக்களுக்கே அந்த நிலம் சொந்தம் என்று அறிவித்திருக்கிறது. இது ஒரு வரலாற்றுத் தருணம்.

1949இல் சர்ச்சைக்குரிய வளாகத்தில் ராம் லல்லா சிலைகள் வைக்கப்பட்டதையும் நீதிபதிகள் தீர்ப்பில் பதிவு செய்துள்ளனர். 1992 டிசம்பர் 6 நிகழ்வையும் கண்டித்துள்ளனர். அதாவது சட்டத்தின் கண்களில் மட்டுமே இவ்வழக்கு பரிசீலிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான், முஸ்லிம்களுக்கு 2.77 ஏக்கர் நிலத்துக்கு உரிமை கோர முடியாது என்று தீர்ப்பளித்த நீதிபதிகள், அவர்கள் சிலகாலம் அங்கு தொழுகை நடத்திய அனுபவ பாத்தியதைக்காக, டிசம்பர் 6 நிகழ்வுக்கு பிராயச்சித்தமாக, அவர்களுக்கு அரசே 5 ஏக்கர் நிலத்தை வேறொரு இடத்தில் வழங்குமாறு உத்தரவிட்டிருக்கிறது. இது நீதிபதிகளின் பாரபட்சமின்மையை வெளிப்படுத்துவதற்கான சான்று. சொல்லப்போனால், முஸ்லிம்களுக்கு சரயு நதிக்கரைக்கு மறுபுறம் பிரமாண்டமான மசூதியைக் கட்டித் தருவதாக ஏற்கனவே ஹிந்துக்கள் தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதையேதான் நீதித் துறை உத்தரவின்மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறது உச்ச நீதிமன்றம்.

Dr.Anburaj said...

நீதிபதிகளின் தீர்ப்பு மிகத் தெளிவானது: அந்த இடம் ஹிந்துக்களுக்கே சொந்தம். குறிப்பாக ராமஜன்மபூமி நியாஸ் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும். அங்கு ராம கோயில் கட்ட அனுமதி அளிக்கப்படுகிறது. அதேசமயம், மத்திய அரசு அந்த இடத்தின் கட்டுப்பாட்டாளராக இருக்க வேண்டும். அங்கு ராமருக்குக் கோயில் கட்ட 3 மாதங்களுக்குள் அறக்கட்டளையை நிறுவி அவர்கள் வசம் நிலத்தை அரசு ஒப்படைக்க வேண்டும். இந்த அறக்கட்டளையில் நிர்மோஹி அகாராவை அரசு விரும்பினால் சேர்க்கலாம். அதாவது ராமர் கோயில் கட்ட ஹிந்துக்கள் தரப்பிலேயே இடையூறாக இருந்த ஒரு வாதியும் தீர்ப்பால் இப்போது அகற்றப்பட்டுள்ளார்.

அடுத்ததாக, தொல்லியல் துறையின் ஆதாரங்கள் இவ்வழக்கில் மிகவும் முக்கியத்துவம் பெற்றிருந்தன. பாபர் மசூதி (இப்போது இல்லை) காலி இடத்தில் கட்டப்படவில்லை என்பதையும், அந்த இடத்தின் கீழே உள்ள கட்டுமானம் கோயிலாக இருக்கலாம் என்ற தொல்லியல் துறையின் ஆய்வறிக்கையும் உச்ச நீதிமன்றம் ஏற்றுள்ளது. 1857 வரை அங்கு ஹிந்துக்கள் தொடர்ந்து வழிபட்டதன் ஆதாரங்களும் ஏற்கப்பட்டுள்ளன. பூமிக்கு கீழுள்ள கட்டடம் கோயிலா என்ற சர்ச்சைக்குள் நீதிமன்றம் இறங்கவில்லை. பின்னாளில் கோயில் கட்டுமானப் பணிகளின்போது அதுவும் தெளிவாகும்.

Dr.Anburaj said...

நிலம் தொடர்பான தொல்லியல் துறையின் ஆய்வறிக்கையை நிராகரிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். ஆக, பலநூறு ஆண்டுகால ஹிந்துக்களின் தொடர் போராட்டம் நியாயமான முறையில், மிகச் சரியான பலனைப் பெற்றுள்ளது. இனி ராமருக்கு ஆலயம் அமையத் தடையில்லை. அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசும், உ.பி. அரசும் பார்த்துக்கொள்ளும். அதில் மதச்சார்பின்மை வியாதியால் பீடிக்கப்பட்ட பிற அரசியல் கட்சிகள் தலையிட முடியாது.

இவை அனைத்தையும் விட, மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம், இந்தத் தீர்ப்புக்காக நாடே ஒருநாள் முற்றிலும் முடக்கப்பட்ட சூழலில் வைக்கப்பட்டிருந்தது தான். உளவுத்தகவல்களின் அடிப்படையில் மத்திய அரசு நாடு முழுவதும் அனைத்து மாநில அரசுகளையும் எச்சரித்திருந்தது. தலைமை நீதிபதியே தீர்ப்புக்கு முதல்நாள் உ.பி. மாநில தலைமைச் செயலாளரையும் காவல் துறைத் தலைவரையும் நேரில் அழைத்து ஆலோசனை நடத்தினார். இது நமது அரசியல் அமைப்பில் இதுவரை காணாத நிலை. ஆயினும் நாட்டுநலனை உத்தேசித்து மத்திய, மாநில அரசுகள் நீதித்துறைக்கு முழுமையான ஒத்துழைப்பை நல்கின.

நாடுமுழுவதும் பாதுகாப்புப் படையினரும் காவல் துறையினரும் குவிக்கப்பட்டனர். ராணுவமும் விழிப்புடன் இருக்குமாறு பணிக்கப்பட்டது. அயோத்தித் தீர்ப்பை கொண்டாடவோ, கண்டிக்கவோ கூடாது என்று அரசுத் தரப்பிலும் பல்வேறு அமைப்புகளின் தரப்பிலும் அரசியல் கட்சிகள் சார்பிலும் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன. இவை அனைத்திற்கும், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் மீதான அச்சமே காரணம் என்பதையும், அந்த சமுதாயம் இஸ்லாமிய சமுதாயம் என்பதையும் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.

இத்தகைய அச்சமே தேசப் பிரிவினைக்கு 1947இல் வித்திட்டது. ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாருக்காக என்பதை சிறு குழந்தையும் அறியும் என்பதால்தான், அமைதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது. அச்சமூட்டும் கும்பல் மனோபாவத்தால் அரசையோ, மக்களையோ, நீதித் துறையையோ இனியும் கட்டுப்படுத்த முடியாது என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது.

இன்று மத்தியிலும், உத்தரப்பிரதேச மாநிலத்திலும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் பாஜக அரசுகள் இருப்பது, நீதித்துறைக்கும் துணிவைத் தந்திருக்கிறது. மக்களாட்சியில் மக்களே எஜமானர்கள் என்பதை நீதித்துறையும் உனர்ந்திருக்கிறது. நீதி நிலைக்க வேண்டுமானால், தீர்ப்பு மதிக்கப்பட வேண்டுமானால் அதை சாத்தியப்படுத்தும் வல்லமையுள்ள அரசு நிர்வாகமும், மக்களின் ஆதரவும் இருந்தாக வேண்டும்; தீர்ப்பளிக்கும் நீதிபதிகளின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் இருந்தாக வேண்டும். அந்த வகையில், அனைத்தும் கூடி வந்த நல்ல தருணத்தில், பொருத்தமான, நியாயமான, சமரசத்துக்கும் வாய்ப்பளிக்கும் நல்ல தீர்ப்பு வெளியாகி இருக்கிறது.

தர்மம் வென்றிருக்கிறது. தர்மத்தை நாம் காக்க தர்மம் நம்மைக் காக்கும்.

‘சத்தியமேவ ஜயதே’ என்ற நமது அரசின் முத்திரை வாக்கியமும் மெய்ப்பட்டிருக்கிறது.

ராம பக்தர்களது தியாக மயமான நீண்ட கால போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது.
நீதி வெல்க! ராமன் வெல்க! பாரதம் வெல்க!

Dr.Anburaj said...

Most perfect judgment, says former ASI director KK Muhammed

Read more at:மிகச்சிறந்த தீர்ப்பு என்கிறாா் கோழிக்கோட்டைச் சோ்ந்த கே.கே.முஹம்மது
For almost three decades, well-known archaeologist KK Muhammed’s claims have been contradicted and severely criticised. Muhammed is the only archaeologist who had said that Babri Masjid was built on the remains of the Ram Temple.
இந்திய தொல்லியில்துறை இயக்குநராக இருந்த போது அவர் மிகத் தெளிவாக ஆய்வு செய்து பாபரி மஸ்ஜித் ஒரு இந்து ஆலயத்தின் மீதுதான் கட்டப்பட்டது என்று அறிவித்து பலரின் கண்டனத்திற்கு ஆளாகியிருந்தாா்.

“I have been hounded by communist historians and their stories. They concocted and fabricated all kinds of things against me in these years. Today I feel vindicated. The Honourable Supreme Court had admitted that pieces of evidence produced by the ASI were correct,” Muhammed said.

In 1976-77, the first excavation of Ram Janmabhoomi in Ayodhya was carried out by a team of the Archaeological Survey of India (ASI), headed by Professor BB Lal. Twelve students of the Institute of Archaeology, Delhi were part of the team. Muhammed was one of them.
Muhammed, for the first time on December 15, 1990, claimed that during excavations he saw the remains of the temple.

“There were numerous shreds of evidence which showed that the Mosque was built not only over the temple, but some remains of the temple were used to construct a mosque,” Muhammed said.பள்ளிவாசல் ஒரு இந்து ஆலயத்தின் மீதுதான் கட்டப்பட்டது மட்டும் அல்ல.மேற்படி கோவிலின் இடிபாடுகள் பள்ளிவாசல் கட்ட பயன்படுத்தப்பட்டுள்ளது.உதாரணமாக மசுதியின் சுவர்கள் கோவிலின் 14 தூண்களால் கட்டப்பட்டுள்ளது.அந்த தூண்களின் அடியில் 11-12 நூற்றாண்டைச் சோ்ந்த கட்டடத்தின் கொண்டை பகுதிஉள்ளது என்ற உண்மையை கே.கே முஹம்மது அறிவித்தாா்.


“For instance, the walls of the mosque were constructed with the support of 14 pillars of Ram temples. And below these pillars, I saw the pinnacle of a temple of 11th-12th century,” Muhammed recollected.

He said that had the Supreme Court not upheld the ASI excavation report, his claim would always have been seen as a piece of lies and concocted stories.
உச்ச நீதி மன்றம் இந்த தீர்ப்பை அளிக்காவிட்டால் நான் பொய்யனாகி இருப்பேன் என்றாா்.

“It is a highly balanced and perfect judgment. It is a judgement you cannot improve upon. It is something which we all were dreaming of,” Muhammed said.
மிகச்சிறந்த மாற்றம் தேவைப்படாத அனைவரும் விரும்பி கனவு கண்ட தீர்ப்பு இதுஎன்று மகிழ்ச்சி அடைந்தாா்.

Dr.Anburaj said...

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை.
ஆணைகயிட்டே யாா் தடுத்தாலும் அலை கடல் ஒய்வதில்லை

தகவல்களை மறைக்க வேண்டாம்.
எனது பதிவுகளை வெளியிடுங்கள்.
அதுவே நியாயம்.தா்மம்.