'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Friday, December 04, 2015
சென்னை மழை நமக்கு ஒரு எச்சரிக்கை - ஃபிரான்ஸ்
சென்னை மழை வெள்ளம் பருவநிலை மாற்றம் குறித்து உலக நாடுகள் காலம் தாழ்த்தாமல் முடிவெடுக்க வேண்டியதை உணர்த்தியிருப்பதாக பிரான்ஸ் நாட்டு வெளியுறவு அமைச்சர் லாரண்ட் பேபியஸ் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை வெளியுறவு அமைச்சர் ஏற்று தலைமை தாங்கி வருகிறார்.
அவர் கூறும்போது, "சென்னையில் அண்மையில் பெய்துள்ள வரலாறு காணாத மழையும் அதனால் ஏற்பட்டுள்ள வெள்ளமும் பருவநிலை மாற்றம் குறித்து உலக நாடுகள் காலம் தாழ்த்தாமல் முடிவெடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதற்கு மிகப் பொருத்தமான உதாரணமாகும். சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரான்ஸ் துணை நிற்கிறது" எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, சென்னை மழையை பருவநிலை மாற்றத்துடன் தொடர்புபடுத்தக் கூடாது என மத்திய வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இது இயற்கைப் பேரழிவு எனவும் குறிப்பிட்டிருந்தார்.
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
04-12-2015
விளை நிலங்களை மனைகளாக்குவோரும் குளங்களை தூர்த்து கட்டிடம் கட்டுபவர்களும் காடுகளை அழித்து இயற்கையை கெடுப்பவர்களும் இந்த எச்சரிக்கைக்கு கொஞசமாவது மதிப்பு கொடுங்கள்.
வருங்கால நம் தலைமுறைகளை காப்பாற்றுங்கள்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment