Followers

Thursday, December 10, 2015

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்கின் அன்பான அழைப்பு!





” சமீபத்தில் நடைபெற்ற பாரீஸ் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்காவில் பல தலைவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக பேசி வருவது இங்கு உள்ள முஸ்லிம்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற உணர்வை தோற்றுவித்திருக்கிறது. அவர்கள் எங்கே தாங்கள் அச்சுருத்தப்படுகிறோமோ என்று என்னும் நிலையை உருவாக்கியிருக்கிருப்பதை என்னால் உணர முடிகிறது.

ஒரு நல்ல யூதக் குடும்பத்தவராக, என்னுடைய பெற்றோர் எனக்கு போதித்தது நாம் எந்த ஒரு சமூகத்திற்கெதிராக அநீதி நடைபெறும் போதும் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்பதுதான், இப்பொழுது நாம் பாதுகாப்பாக இருப்பதாக பட்டாலும் ஒரு கட்டத்தில் ஒரு பிரிவினரை தாக்கும் சுதந்திரம் பெற்றவர்கள் எந்த நேரத்திலும் மற்றவர்களையும் தாக்குவார்கள் .

ஃபேஸ்புக் நிறுவனத்தின் அதிபராக நான் சொல்லிக்கொள்வது , நீங்கள் ஒரு முஸ்லிமாக இருந்தால் உங்களுக்கு ஃபேஸ்புக் எப்பொழுதும் ஆதரவளிக்கும், அச்சமும் பயமுமற்ற ஒரு சமாதானமான சூழ்நிலையை உருவாக்குவதில் நாங்கள் என்றும் உறுதுணையாக இருப்போம்.

சமீபத்தில் எங்களுக்கு பிறந்திருக்கும் குழந்தை எங்களுக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அதிகப்படுத்தியிருக்கிறது. ஒருவர் நம்மீது காட்டும் வெறுப்பு நம்மையும் வெறுப்பு மனோ நிலைக்கு தள்ளிவிடும் வாய்ப்பிருக்கிறது. ஆனாலும் நாம் நம்பிக்கையிழக்கத் தேவையில்லை. நாம் ஒன்று பட்டு கைகோர்த்து ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிக்கொள்ளும் போது நம்மால் நிச்சயமாக ஒரு புதிய உலகை படைக்க முடியும்."

இவ்வாறு அவர் தெரிவித்தார். அவருடைய இந்த அறிவிப்பு பலதரப்பட்ட மக்களாலும் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

1 comment:

Dr.Anburaj said...


ஒரு பண்பட்ட யுத குடும்பத்தை சோ்ந்தவாின் அறிவிப்பு - பேஸ்புக் கில் உள்ள தனது பங்கில் 72 சதம் தா்ம காாியங்களுக்கு இந்த யுதா் கொடுத்துள்ளாா்.

ஒரு நல்ல யூதக் குடும்பத்தவராக, என்னுடைய பெற்றோர் எனக்கு போதித்தது நாம் எந்த ஒரு சமூகத்திற்கெதிராக அநீதி நடைபெறும் போதும் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்பதுதான், இப்பொழுது நாம் பாதுகாப்பாக இருப்பதாக பட்டாலும் ஒரு கட்டத்தில் ஒரு பிரிவினரை தாக்கும் சுதந்திரம் பெற்றவர்கள் எந்த நேரத்திலும் மற்றவர்களையும் தாக்குவார்கள் .

அரேபிய காடையா்கள் கூறுவதைப்படியுங்கள்

இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை யாரேனும் விரும்பினால் அவரிடமிருந்து அது ஏற்கப்படாது. அவர் மறுமையில் இழப்பை அடைந்தவராக இருப்பார்.
குர் ஆன் 3:85
நம்பிக்கை கொண்டோரே! யூதர்களையும், கிறித்தவர்களையும் உங்கள் பாதுகாவலர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! அவர்களில் ஒருவர் மற்றவருக்குப் பாது காவலர்கள். உங்களில் அவர்களைப் பொறுப்பாளராக்கிக் கொள்வோர் அவர்களைச் சேர்ந்தவரே.
குர் ஆன் 5:51
பண்பட்டவன் யாா் ? யுதனா அரேபியனா!

இக்கடிதத்தை வெளியிடும் யோக்கியதை தங்களுக்கு உண்டா?