Followers

Monday, December 14, 2015

நாகூர் தர்ஹா யானை கவலைக்கிடமாம்!




இஸ்லாமிய வணங்கத்துக்கும் யானைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா? ஒன்றும் இல்லை. நம்மை பொறுத்த வரை அது ஒரு மிருகம். ஆனால் இந்து மக்களுக்கு அது புனிதம். அவர்களின் நம்பிக்கை படி கோவில்களில் யானையை வளர்க்கின்றனர். அதில் போய் நாம் தலையிட முடியாது.

ஆனால் நம்ம சாயுபு மார்களும் மார்க்க அறிவின்றி யானையை கொண்டு வந்து தர்ஹாக்களில் கட்டி வைத்து காசு பார்க்கின்றனர். காட்டில் தனது குடும்பத்தோடு: சந்தோஷமாக உலவிக் கொண்டிருந்த அந்த ஜீவனை இப்படி கட்டிப் போட்டு சில நேரம் அதற்கு வெறி வரும்படி நடந்து கொள்வது இஸ்லாமிய நடைமுறைதானா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்க வேண்டும்.

இந்த யானை மண்டையை போட்டால் அதற்கு பதிலாக புதிதாக ஒன்றை கொண்டு வந்துவிட வேண்டாம். செய்த தவறு இதோடு முடியட்டும்.

1 comment:

Dr.Anburaj said...

அரண்மனைகளில் பட்டத்து யானை இருப்துபோல் யானையை வைத்திருப்பது இராஜ அம்சம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் யானை இந்து கோவில்களில் வளா்க்கப்படுகின்றது. இந்து ஆலயங்களில் யானையை சில சமயங்களில் சிறு சப்பரங்களைச் சுமக்கப் பயன்படுத்துவதுண்டு. யானை வைத்திருப்பதில் வேறு அா்த்தம் இல்லை.மக்காவில் குரேஷி அரேபியன் தனது மசுதியில் யானை வளா்க்கவில்லை என்ற காரணத்திற்காக நாகூா் தா்காவிலும் யானை வளா்க்கக் கூடாது என்று நினைப்பவன் அரேபிய அடிமைத்தனம் கொண்டவன். சுவனப்பிாியன் ஒரு சவுதிகாரனின் அடிமை.