'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Tuesday, May 31, 2016
ஆட்டுக் கறி மாட்டுக் கறியாக தற்போது மாறிய விநோதம்!
ஆட்டுக் கறி மாட்டுக் கறியாக தற்போது மாறிய விநோதம்!
உபியில் தாதிரியில் மாட்டுக் கறி வைத்திருந்ததாக புரளி கிளப்பி விட்டு முஹம்மது அஹ்லாக் என்ற முதியவரை அடித்தே கொன்றது ஒரு காட்டுமிராண்டி கூட்டம். தாத்ரியில் உள்ள மிருக டாக்டர் அந்த கறியை பரிசோதனை செய்து விட்டு அது மாட்டுக் கறி அல்ல ஆட்டுக் கறி என்ற உண்மையை அறிவித்தார்.
தற்போது அந்த கறியை மதுராவில் உள்ள அரசு பரிசோதனைக் கூடத்துக்கு ஆளும் வர்க்கம் அனுப்பி வைத்தது. அங்கிருந்து வந்த பரிசோதனை முடிவு அதனை மாட்டுக் கறி என்கிறது. ஆட்டுக் கறி மாட்டுக் கறியாக எப்படி மாறியது? ஏனெனில் இன்னும் சில மாதங்களில் உபியில் சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நேரத்தில் இதனை பரப்புரை செய்து வாக்குகளை அள்ள இந்துத்வா கையாண்ட தந்திரம் இது.
அப்படியே அவர் மாட்டுக் கறி வைத்திருந்தால் என்ன தவறு? எவனது வீட்டிலிருந்தும் திருடி கொண்டு வரவில்லையே! அந்த நாய்களுக்கு ஒரு மனித உயிரை மிருகத்துக்காக கொல்ல அதிகாரம் கொடுத்தது யார்?
வெட்கங் கெட்ட மானங்கெட்டவர்கள் அதிகாரத்தில் இருந்தால் இது போன்ற கூத்துக்களை இன்னும் காணலாம்!
தகவல் உதவி
என்டிடிவி
31-05-2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment