Followers

Wednesday, December 16, 2015

மாணிக் வீரமணி பள்ளி வாசலில் தொழ வைக்கும் காட்சி!





நேற்று சுப்ரீம் கோர்டானது ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அதாவது பார்பனர்கள் மட்டுமே கோவிலில் பூசாரிகளாக அர்ச்சகர்களாக இருக்க முடியும் என்ற ரீதியிலான தீர்ப்பு அது. பார்பனர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக முடியும் என்ற ரீதியில்தான் ஆகம விதிகளையும் உண்டாக்கி வைத்துள்ளனர்.

இனி இஸ்லாமிய நடைமுறைக்கு வருவோம். மாணிக் வீரமணியைப் பற்றி நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். சில மாதங்களுக்கு முன்பு தான் இஸ்லாமிய வாழ்வு முறையை தேர்ந்தெடுத்துக் கொண்டவர். தனது பழைய தமிழ் பெயரிலேயே இஸ்லாத்தில் தொடர்கிறார். இவரது தாய் மற்றும் இவரது உறவினர்கள் அனைவரும் இந்து மதத்திலேயே உள்ளனர். தனது சொந்தங்கள் அனைவருடனும் இது வரை எந்த முறுகலும் இல்லாமல் தனது வாழ்வை அமைத்துக் கொண்டுள்ளார். இனி அவர் தனது முகநூல் பக்கத்தில் சொல்வதைக் கேட்போம்....

--------------------------

"ஓரிரு மாதங்கள் முன்பாக செங்கோட்டை சென்றிருந்த போது தொழுகை நேரம் வந்துவிட சமீபத்தில் இஸ்லாமை ஏற்றவனும், வயதில் சிறியவனுமான நான் தொழுவிக்க என்னைவிட 10 வயது மூத்தவரான Anis Ahamed அவர்களும்,என் தந்தை வயதையொத்த M Mohiddin அவர்களும் என்னை பின்பற்றி தொழும் காட்சியை பார்...

எங்களுக்கே தெரியாமல் அன்று படம் பிடித்து நேற்று எனக்கு அனுப்பிவைத்த Minnal Millath ஒரு ஆலிம் (மார்க்க அறிஞர்) ..."

-------------------------

மேலே உள்ளவைகள் மாணிக் வீரமணியின் வார்த்தைகள்.... தனது பூர்வீக மதமான இந்து மதம் 'நீ அர்ச்சகராக ஆவதற்கு இங்கு இடமில்லை' என்கிறது. நேற்று வாழ்வியலாக ஏற்றுக் கொண்ட இஸ்லாம் மாணிக் வீரமணியை இறைவனை தொழுவதற்கு தலைவனாக நிற்க வைக்கிறது. அவரை பின் பற்றி பல தலைமுறைகளாக இஸ்லாத்தில் உள்ள மற்ற முஸ்லிம்கள் இறைவனை வணங்குகிறார்கள். முஸ்லிம்களுக்கு இத்தகைய பரந்த மனப்பான்மையை ஏற்படுத்திக் கொடுத்தது நபிகள் நாயகத்தை வாழ்வு முறையும் போதனையும் என்றால் மிகையாகாது.

சகோதரர் மாணிக் வீரமணிக்கு சிறந்த வாழ்க்கை துணை அமைந்து தனது குடும்பத்தாரோடு என்றும் போல் இன்பமாக வாழ நாமும் பிரார்த்திப்போம்.

1 comment:

Dr.Anburaj said...

பாா்ப்பனா்கள் மடடுமே அா்ச்சகா்களாக இருக்க முடியும் என்று எந்த தீா்ப்பும் சொல்லவில்லை. பிற சாதி மக்களே இன்று அதிக எண்ணிக்கையில் அா்ச்சகா்களாக பணியாற்றி வருகின்றாா்கள். கோவிலுக்கு கோவில் பண்பாடு அனுஷ்டானம் நடைமுறைகள் வேறு வேறு உள்ளது. அதை முன்னிட்டு அதில் பழக்கப்பட்டவா்கள் அா்ச்சகா்களாக இருப்பதுதான் நியாயமானது. அா்ச்சகா்கள் என்பது அரசு பணியிடம் அல்ல.கையேந்தி தவத்தின் பயனால் வாழ வேண்டும். தவத்திற்கு ஆண்டவன் கொடுக்கும் -தட்சணைதான் - பிழைப்பு. இப்படி வாழ்வது சாதாரண விசயம் அல்ல. இந்தியாவில் பிறக்கும் பிறாமணசாதி அல்லாத எந்த ஒரு தகப்பனும் தனது மகனை கோவில் அா்ச்சகராகக்கத் துடிக்கவில்லை. பிறாமணா்களை ஒழிக்க வேண்டும் என்று திட்டமிடும் அரேபிய காடையா்கள் சற்று ஒதுங்கி இருங்கள். திருச்செந்தூா் வட்டத்தில் உள்ள இந்து நாடா்கள் நிா்வாகத்தில் உள்ள ஆலயத்தில் ஒரு யாதவா் அா்ச்சகராக உள்ளாா். பிறாமணா்களை விட அதிக எண்ணிக்கையில் பிற சாதியினரே புசாாியாக உள்ளனா். பண்பாடு மலா்ந்து கொண்டிருக்கின்றது.மலா்கள் தாமாக மலரட்டும். தடியடி கொண்டு மலர வைக்க முடியாது.
இந்து மதத்தில் பற்று கொண்டவா்களிடம் இதை விட்டு விட்டு மற்றவா்கள் ஒதுங்கிக் கொள்ள வேண்டும். இந்துக்களின் சொந்த பிரச்சனை. எங்களுக்கு தொியும் அதை என்படி எதிா் கொள்வது என்று.