Followers

Friday, December 11, 2015

உலகில் மனிதம் இன்னும் செத்து விடவில்லை!

உலகில் மனிதம் இன்னும் செத்து விடவில்லை!

இதுவரை ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளிவராத தியாகம் அடுத்த நபருடையது. நண்பர் சொன்ன தகவல்.
சாலையை மூழ்கடித்த வெள்ளத்தில் காரில் அவர் போய்க்கொண்டி ருந்தபோது ஒரு முஸ்லீம் பெரியவர் நடுச் சாலையில் கையில் ஒரு செடியைப் பிடித்துக்கொண்டு நின்றிருக்கிறார். இறங்கி என்னவென்று விசாரித்த அந்த நண்பருக்குக் கண்கலங்கிவிட்டது.

சாலையின் அந்த இடத்தில் ஒரு குழி ஏற்பட்டுவிட்டது என்றும், யாரும் அதற்குள் விழுந்துவிடக் கூடாது என்பதால் அடையாளத் துக்காகச் செடியைப் பிடித்துக்கொண்டு நிற்கிறேன் என்றும் அந்த முஸ்லீம் பெரியவர் சொல்லியிருக்கிறார். ஊன்றிவிட்டு நீங்கள் போயிருக்கலாமே என்று நண்பர் கேட்டதற்கு, ஓடும் நீரில் செடி நிற்க மாட்டேன் என்கிறது, அதனால்தான் அதைப் பிடித்துக்கொண்டு நிற்கிறேன் என்று அந்த முஸ்லீம் பெரியவர் சொல்லியிருக்கிறார். அதுமட்டுமல்ல நண்பர்களே, அடுத்து வரும் விஷயம் தான் நம்மை மிக மிக அற்பர்களாகவும், அந்த முஸ்லீம் பெரியவரை மகாத்மாவாகவும் ஆக்குகிறது.

நண்பரிடம் அந்தப் பெரியவர் இப்படிச் சொல்லியிருக்கிறார், ‘கடந்த நான்கு மணி நேரமா நான் இப்படி நின்னுக்கிட்டிருக்கேன். யாராச்சும் பார்த்துக்குவாங்கனு அப்படியே விட்டுட்டுப் போவ மனசே வரல.”

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
12-12-2015

தேச பக்தி என்பது இதுதான்!

3 comments:

Dr.Anburaj said...

தேச பக்தி என்பது இதுதான்! .
இவரது காலில் விழுந்து ஆசிபெற வேண்டும்.
மனதால் அவரது காலில் விழுந்து ஆசி பெறுகின்றேன். நன்றி.
உயா்ந்த பண்பாடு.மனித நேயம். எனபது இதுதான்.
திருக்குறளை திருமந்திரம் படிப்பவராக இருக்கலாம்.
அதுவும் குறிப்பாக வள்ளலாாின் வாடிய பயிரைக் கண்டபோதல்லாம் வாடினேன் என்ற பாட்டை படித்தவரராக இவர் இருப்பாா்.இந்து முஸ்லீம்கள் இப்படித்தான் இருப்பாா்கள். அரேபிய காடைத்தனம் இவர்களிடம் இருக்காது.

VANJOOR said...

"க்ளிக்" செய்து >>>> நான்கு நடிகர்கள் குப்பை அள்ள 40 போலீஸ் பாதுகாவல்.40 கேமராக்கள். + நெஞ்சை நெகிழ வைத்த காணொளிகள். விடியோக்கள் காண்க.

Dr.Anburaj said...

தங்களுக்கு உருப்படியாக ஒன்றும் எழுதத்தொியவில்லை. சும்மா பிலடப் பண்ண வேண்டாம்