'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Friday, May 27, 2016
நேருவை புகழ்ந்ததால் கலெக்டருக்கு இந்துத்வா கல்தா!
அஜய் சிங் கங்க்வார் மத்திய பிரதேச மாநிலத்தின் சீனியர் ஐஏஎஸ் ஆபிஸர். அவர் தனது ஃபேஸ் புக்கில் ஜவஹர்லால் நேருவைப் பற்றி புகழ்ந்து எழுதினார். வந்தது வினை. பிஜேபி அரசு அவரை தற்போது ட்ரான்ஸ்ஃபர் செய்துள்ளது.
அப்படி அவர் என்னதான் எழுதி விட்டார்?
"1947 ல் இந்த நாடு தாலிபான்களையொத்த ஹிந்து ராஷ்ட்ராவாக மாறுவதை தடுத்தது நேரு செய்த தவறா?
ஐஐடி, இஸ்ரோ, பெல், ஐஐஎம் போன்ற நிறுவனங்களை தொடங்கி இந்திய முன்னேற்றத்துக்கு வித்திட்டாரே அது நேரு செய்த தவறா?
சாரா பாய் ஹோமி ஜஹாங்கீர் போன்றர்களை கௌரவித்தார். அது நேரு செய்த தவறா?
நேரு ஆசாராம், பாபா ராம்தேவ் போன்ற சன்னியாசிகளை ஊக்குவிக்கவிக்காதது நேரு செய்த தவறா?"
இதுதான் அவர் எழுதியது. உண்மையைத்தானே எழுதினார்? நாட்டு நலனில் அக்கறை உள்ள எவரும் இதனைத்தானே விரும்புவர்?
இந்துத்வாவுக்கு எதிர் குரல் கொடுப்பவர் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் அவர் கொல்லப்படுவார் அல்லது பழி வாங்கப்படுவார்.
போலே பாரத் மாதா கீ ஜே :-)
His Facebook post supported Mr Nehru's secularism and appeared to jab at the BJP. "Let me know the mistakes that Nehru should not have committed...Is it his mistake that he prevented all of us from becoming Hindu Talibani Rashtra in 1947? Is it his mistake to open IIT, ISRO, BARC, IISB, IIM, BHEL steel plant, dams, thermal power? Is it his mistake that he honoured Sarabhai, Homi Jehangir in place of intellectuals like Asaram and Ramdev?" the post read.
Sources say senior officials who found out about his Facebook post consulted ministers and an inquiry was ordered. After the post was verified, the sources say, the transfer was announced.
தகவல் உதவி
என்டிடிவி
27-05-2016
http://www.ndtv.com/india-news/officer-who-praised-nehru-in-facebook-post-transferred-in-madhya-pradesh-1412647?fb
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment