Followers

Friday, May 27, 2016

முன்னாள் ராணுவ அதிகாரி மதன் மோகன் கைது!



முன்னாள் ராணுவ அதிகாரி மதன் மோகன் கைது!

பாரக்பூர்: வெளிநாட்டு உளவுப் பிரிவுக்கு வேவு பார்த்ததாக இந்திய ராணுவத்தின் முன்னாள் அதிகாரி மதன் மோகன் பால் (53) என்பவரை மேற்கு வங்க போலீஸார் கைது செய்து காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக மேற்கு வங்க போலீஸ் துணை ஆணையர் தேபசிஷ் பைஜி செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

ராணுவத்தில் சுபேதார் பதவியில் இருந்து 2008ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற மதன் மோகன் வெளிநாட்டு உளவுப் பிரிவுகளுக்கு வேவு பார்ப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் அவரை கண்காணித்து வந்தோம்.

இதனைத் தொடர்ந்து கொல்கத்தா அருகே உள்ள பாரக்பூரில் புதன்கிழமை அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 13 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம்.

அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போனில் வெளிநாடுகளில் இருந்து வந்த அழைப்புகள் பதிவாகியுள்ளன. ராணுவத்தின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ராணுவ கேன்டின்களுக்குச் சென்று தகவல் சேகரித்து அவர் வேவு பார்த்துள்ளார். விசாரணையில் அவர் இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’வுக்கு பணியாற்றி வருவதாக கூறியுள்ளார். அவரது வாக்குமூலத்தின் உண்மைத் தன்மை குறித்து விசாரித்து வருகிறோம் என்று அவர் கூறினார்.

http://www.rediff.com/news/report/barrackpore-retired-army-subedar-arrested-for-spying/20131219.htm

செய்தி போன வருடத்தியதாக இருந்தாலும் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்படுபவர்கள் அதிகமாக மாற்று சமுதாய மக்களாக உள்ளனர். பாகிஸ்தான் காரனும் தனது உளவாளியாக முஸ்லிமை நியமிக்க தயங்குவான். ஏனெனில் முஸ்லிமை நியமித்தால் எளிதில் சந்தேகப்படுவார்கள் என்பதும் அவனுக்குத் தெரியும்.

2 comments:

Dr.Anburaj said...


இன்று சிாியாவிலிருந்து அரேபிய மதத்தைப்பின்பற்றும் அகதிகள் தப்பிச் சென்ற சிறு கப்பல் கவிழ்ந்து 100 போ்கள் பலியாகியுள்ளாா்கள். 570 பேரை இத்தாலிய கடற்படை மீட்டுள்ளது. பல அரேபிய மதத்தை பின்பற்றும் நாடுகளில் குண்டு வெடித்து 100 கணக்கில் உயா்பலியாகியுள்ளது. அது குறிதது எழுதுங்கள்.

பணம் பதவி பெண் என்று பித்து பிடித்தவா்கள் எங்கும் இருப்பாா்கள். பாககிஸ்தான் ராணுவ கடற்படை அதிகாாிகள் 5 பேருக்கு துரோகிகள் என்று குற்றம் சாட்டப்பட்டு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

Dr.Anburaj said...



இந்தியாவை மலினப்படுத்தும் செய்திகள் என்றால் சுவனபபிாியனுக்கு கொண்டாட்டம்.