Followers

Friday, May 13, 2016

கங்கை நதியை சுத்தப்படுத்த 20000 கோடியாம்!

கங்கை நதியை சுத்தப்படுத்த 20000 கோடியாம்!

கங்கை நதியை சுத்தப்படுத்தி, பாதுகாக்கும் திட்டமான 'நமாமி கங்கா' திட்டத்துக்கு ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், "கடந்த 30 ஆண்டுகளில் கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டத்துக்கு 4 மடங்கு அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 'நமாமி கங்கா' திட்டம் தொடர்பாக நரேந்திர மோடி தலைமையில் இன்று (புதன்கிழமை) காலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அக்கூட்டத்தில், கங்கை நதியை சுத்தப்படுத்த ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
14-05-2015

இன்னும் லட்சம் கோடிகளை செலவு செய்தாலும் கங்கை நதி சுத்தமாக போவதில்லை. ஏனெனில் மத நம்பிக்கை என்ற பேரில் தினமும் நூற்றுக்கணக்கான பிணங்கள் எரியூட்டப்படுகின்றன. பாதி எரிந்தும் எரியாமலும் பிணங்கள் கங்கையாற்றில் விடப்படுகின்றன. சிலர் எரிக்காமல் முழு உடலையும் கங்கை நதியில் இறக்கி விடுகின்றனர். நதியை சுற்றியுள்ள கிராமங்கள் அனைத்தும் நாற்றமெடுத்த புகை மூட்டத்தால் கருமை சூழ்ந்து காணப்படுகிறது. பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. நாய்களும் கழுகுகளும் குதறிய அழுகிய உடல்கள் கங்கை நதியில் சர்வ சாதாரணமாக மிதந்து வருகின்றன.

இது போதாதென்று 'அகோரிகள்' என்ற மனித கறி தின்னும் சாமியார்களின் கொட்டமோ சொல்லி மாளாது. கஞ்சா என்ற போதை மருந்தை ஏற்றிக் கொண்டு நிர்வாணமாக சுற்றித் திரியும் இவர்களின் சிறந்த உணவு மனித மாமிசம். கங்கையில் மிதந்து வரும் உடலை இழுத்து நெருப்பில் சுட்டு சாப்பிடுகிறார்கள். அதன் கழிவுகளை அங்கேயே போட்டு விடுகின்றனர்.

இந்த காட்சிகள் எல்லாம் நேரலையாக யூட்யூபில் காணக் கிடைக்கிறது. இதை எல்லாம் தடுக்காமல் எத்தனை கோடிகள் செலவழித்தாலும் கங்கை சுத்தமாக போவதில்லை. ஒரு குறிப்பிட் ஏரியாக்களில் மட்டும் அரசு செலவில் மின்சார மயானம் ஏற்படுத்த வேண்டும். புனிதத்துக்காக ஒரு சொம்பு தண்ணீரை பிணத்தில் ஊற்றி விட்டு அந்த உடலை மின்சார மயானத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். பிணம் தின்னி அகோரிகளை கங்கை நதி ஓரங்களிலிருந்து அப்புறப்படுத்தி மன நல காப்பகங்களில் அனுமதித்து தீவிர சிகிச்சைக்குப் பிறகு வெளியே விட வேண்டும். பிரார்த்தனை செய்யப்பட்ட பூக்கள் மற்றும் துணிகளை கங்கை நதியில் இறக்கி விடுபவர்களை தடுக்க வேண்டும். குளிப்பதற்காக அரசே ஒரு குறிப்பிட்ட இடத்தை தேர்வு செய்ய வேண்டும். கங்கை நீர் சுத்தமாக அதிக அளவில் மீன்களை வளர்க்கலாம். கங்கை கரையோரங்களில் தங்கி புரோகிதம் செய்து வரும் பார்பனர்களை அப்புறப்படுத்தி சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் அவர்களை அமர்த்தி பூஜை புனஸ்காரங்களை செய்ய வைக்கலாம்.

இவற்றை எல்லாம் செய்யாமல் 20000 கோடி மக்களின் வரி பணத்தை செலவிடுவதால் ஒரு பயனும் விளையப் போவதில்லை. மாறாக அரசு அதிகாரிகளும் பாஜக நிர்வாகிகளும் கோடிக் கணக்கில் கொள்ளையடிக்கவே இந்த பணம் பயன்படும்.

1 comment:

Dr.Anburaj said...

இன்னும் லட்சம் கோடிகளை செலவு செய்தாலும் கங்கை நதி சுத்தமாக போவதில்லை. ஏனெனில் மத நம்பிக்கை என்ற பேரில் தினமும் நூற்றுக்கணக்கான பிணங்கள் எரியூட்டப்படுகின்றன. பாதி எரிந்தும் எரியாமலும் பிணங்கள் கங்கையாற்றில் விடப்படுகின்றன. சிலர் எரிக்காமல் முழு உடலையும் கங்கை நதியில் இறக்கி விடுகின்றனர். நதியை சுற்றியுள்ள கிராமங்கள் அனைத்தும் நாற்றமெடுத்த புகை மூட்டத்தால் கருமை சூழ்ந்து காணப்படுகிறது. பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. நாய்களும் கழுகுகளும் குதறிய அழுகிய உடல்கள் கங்கை நதியில் சர்வ சாதாரணமாக மிதந்து வருகின்றன.

இது போதாதென்று 'அகோரிகள்' என்ற மனித கறி தின்னும் சாமியார்களின் கொட்டமோ சொல்லி மாளாது. கஞ்சா என்ற போதை மருந்தை ஏற்றிக் கொண்டு நிர்வாணமாக சுற்றித் திரியும் இவர்களின் சிறந்த உணவு மனித மாமிசம். கங்கையில் மிதந்து வரும் உடலை இழுத்து நெருப்பில் சுட்டு சாப்பிடுகிறார்கள். அதன் கழிவுகளை அங்கேயே போட்டு விடுகின்றனர்.

இந்த காட்சிகள் எல்லாம் நேரலையாக யூட்யூபில் காணக் கிடைக்கிறது. இதை எல்லாம் தடுக்காமல் எத்தனை கோடிகள் செலவழித்தாலும் கங்கை சுத்தமாக போவதில்லை. ஒரு குறிப்பிட் ஏரியாக்களில் மட்டும் அரசு செலவில் மின்சார மயானம் ஏற்படுத்த வேண்டும். புனிதத்துக்காக ஒரு சொம்பு தண்ணீரை பிணத்தில் ஊற்றி விட்டு அந்த உடலை மின்சார மயானத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். பிணம் தின்னி அகோரிகளை கங்கை நதி ஓரங்களிலிருந்து அப்புறப்படுத்தி மன நல காப்பகங்களில் அனுமதித்து தீவிர சிகிச்சைக்குப் பிறகு வெளியே விட வேண்டும். பிரார்த்தனை செய்யப்பட்ட பூக்கள் மற்றும் துணிகளை கங்கை நதியில் இறக்கி விடுபவர்களை தடுக்க வேண்டும். குளிப்பதற்காக அரசே ஒரு குறிப்பிட்ட இடத்தை தேர்வு செய்ய வேண்டும். கங்கை நீர் சுத்தமாக அதிக அளவில் மீன்களை வளர்க்கலாம். கங்கை கரையோரங்களில் தங்கி புரோகிதம் செய்து வரும் பார்பனர்களை அப்புறப்படுத்தி சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் அவர்களை அமர்த்தி பூஜை புனஸ்காரங்களை செய்ய வைக்கலாம்

எனக்கு முழுவதுமாக சம்மதம்.
எனக்கு ஏற்கனவே இக் கருத்து உண்டு.

நிா்வாணம் எந்த வகையிலும் நியாயமானது அல்ல. தடை செய்ய வேண்டும். நிா்வாணமாக வாழ்வேன் என்று பிடிவாதம் பிடிப்பவா்களை அந்தமான் பகுதியில் உள்ள ஒரு தீவில் அவர்களை கொண்டு விட்டு முறையான மருத்துவ சிசிட்சை செய்ய வேண்டும். சமய நம்பிக்கையின் அடிப்படையில் நிா்வாண வாழ்வை விரும்பினாலும் அந்தமான தீவில்தான் இருக்க வேண்டும்.பிற சமய அனுஷ்டதானங்களை தவறாது செய்கின்றாா்களா என்பதை கண்காணித்து அவர்களின் உணவு செலவை இந்து தேவஸ்தானங்கள் கூட்டாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இந்து பத்திாிகையில் புதுமடம் ஜாப்பா் எழுதிய கட்டுரையையும் வெளியிடலாமே.