Followers

Friday, May 13, 2016

கேரளாவில் பிஜேபியின் நிலைப்பாடு மத சார்பின்மையாம்!

கேரளாவில் பிஜேபியின் நிலைப்பாடு மத சார்பின்மையாம்!

கேரள பிஜேபி தலைவர் ராஜ சேகரனை என்டிடிவி பேட்டி எடுத்தது. அதன் முக்கிய பகுதிகளை பார்போம்.

என்டிடிவி:

எல்லா மதத்தவரும் ஓரளவு சமமாக உள்ள மாநிலம் கேரளா. மத சார்பின்மையை நீங்கள் ஆதரிப்பதில்லைதானே!

ராஜ சேகரன்:

இல்லையே நாங்கள் மத சார்பற்ற கட்சிதான். பல மதத்தவர்களும் எங்கள் கட்சியில் அங்கம் வகிக்கிறார்களே!

என்டிடிவி:

மாட்டுக் கறி தடையைப் பற்றி கேரளாவில் பிஜேபியின் நிலைப்பாடு?

ராஜசேகரன்:

அது ஒரு பிரச்னையே அல்ல. மாட்டுக் கறி கேரளாவில் ஒரு பிரச்னையாக ஆக்கப்படாது பிஜேபியால்.

என்டிடிவி
14-05-2016

கேரளாவிலும் கோவாவிலும் பெரும்பான்மையான மக்கள் மாட்டுக் கறி சாப்பிடுபவர்கள். கேரளாவில் இந்துக்களே பெரும்பாலும் மாட்டுக் கறி சாப்பிடுபவர். மத சார்பு மற்றும் மாட்டுக் கறி பிரச்னையை எடுத்தால் பழைய படி ஒரு எம்எல்ஏ சீட்டும் கிடைக்காது என்பதால் இரண்டையும் அம்போ என்று விட்டு விட்டனர்.

இதிலிருந்து நமக்கு தெரிவது கிடைக்கும் ஓட்டுக்காக பிஜேபியினர் எந்த கொள்கையும் விட்டுக் கொடுக்க தயங்க மாட்டார். அவர்களுக்கு வாக்குகள்தான் முக்கியமே யொழிய ராமனோ, பசு மாடுகளோ ஒரு முக்கிய பிரச்னையே அல்ல.

படிக்காத மக்கள் நிறைந்த உபி, பீஹாரில் மாட்டுக் கறி, ராமனை கையில் எடுத்து வாக்கு அறுவடை செய்ய முயற்சிப்பர்.

இரட்டை நாக்கு என்று கேள்விப்பட்டுள்ளோம். அதனை பிஜேபியிடம் நேரிடையாக காண்கிறோம்.

https://www.facebook.com/ndtv/photos/a.110271035797.94991.102527030797/10154214795875798/?type=3&theater

2 comments:

Dr.Anburaj said...

அரேபிய வல்லாதிக்க கைகூலி மற்றும் அடிமையான தாங்கள் இந்து கலாச்சாரம் மீது அன்பும் பாசமும் உள்ள பாரதிய ஜனதாக் கட்சியை எவ்வளவு குறை சொலல முடியுமோ அவ்வளவு சொல்லி தங்கள் வலைதளத்தை படிக்கும் முஸ்லீம்களை ஏமாற்றி வருகின்றீா்கள்.

பாரதிய ஜனதா வின் சட்ட மன்ற உறுப்பினா் கேரள மண்ணில் தோ்வு செய்யப்பட்டுள்ளாா் என்பது அனைவருக்கும் நல்ல செய்தி. வருங்காலத்தில் இந்த எண்ணிக்கை கணிசமாக உயரும். உயா்ந்தே தீரும்.