'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Sunday, May 29, 2016
தற்கொலை விகிதாச்சாரம் இஸ்லாமிய நாடுகளில் குறைவதேன்?
தற்கொலை விகிதாச்சாரம் இஸ்லாமிய நாடுகளில் குறைவதேன்?
உலகில் ஒவ்வொரு 40 வினாடிகளுக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார கழகம் தனது ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த ஆய்வு அறிக்கையின் வரை படத்தைத்தான் நாம் பார்க்கிறோம். ஆச்சரியமாக இந்த வரை படத்தில் இஸ்லாமிய நாடுகள் தற்கொலை விகிதத்தில் மிகவும் பின்தங்கியுள்ளன. பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் இந்த பட்டியலில் முற்றிலுமாக வரவில்லை.
கிறித்தவர்கள், நாத்திகர்கள், இந்துக்கள், யூதர்கள், சீனர்கள், கம்யூனிஸ்டுகள் என்று எவரையுமே இந்த தற்கொலையானது விட்டு வைக்கவில்லை. அந்த அளவு மக்களின் வாழ்வு முறை நிம்மதியற்று போய்க் கொண்டுள்ளது. மன அமைதி இழந்த மனிதன் உடன் தற்கொலையை நாடுகிறான்.
மனச்சிதைவு ஏற்பட்டு தற்கொலைகளை நாடுவோரின் புள்ளி விபரங்களை இனி பார்ப்போம்.
அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிபரம் ஒன்றை தேசிய குற்றப்பிரிவு அமைப்பு (என்சிஆர்பி) வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு மட்டும், ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பதுதான் அந்த அதிர்ச்சியளிக்கும் புள்ளி விபரம்.
குடும்பப் பிரச்னை காரணமாக 24.3, தீராத நோயால் 19.6, வறுமையால் 1.7, காதல் விவகாரத்தால் 3.4, போதை பழக்கவழக்கங்களால் 2.7, வரதட்சணையால் 2.4, கடன் தொல்லையால் 2.2… என்ற சதவிகிதத்தில் தங்கள் உயிரை மாய்த்துள்ளனர்.
மாநிலங்கள் அளவில் ஒப்பிடும்போது மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 16 ஆயிரத்து 492 பேரும், தமிழகத்தில் 15 ஆயிரத்து 963 பேரும், மகாராஷ்டிராவில் 15 ஆயிரத்து 947 பேரும், ஆந்திராவில் 15 ஆயிரத்து 77 பேரும், கர்நாடகாவில் 12 ஆயிரத்து 622 பேரும் கடந்த 2011ம் ஆண்டில் தற்கொலை செய்துள்ளனர். நாட்டின் மொத்த தற்கொலை எண்ணிக்கையில் இந்த ஐந்து மாநிலங்களின் சதவிகிதம் மட்டும் 56.2. இதர 43.8 சதவிகித தற்கொலைகள் மற்ற 23 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் நடந்துள்ளதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது.
மனிதனின் இந்த மன அழுத்தத்தைப் போக்க யோகா போன்ற எண்ணற்ற வழி முறைகளை மக்கள் கடை பிடித்தாலும் அது முழு பலனைத் தரவில்லை. இறை பக்தியோடு கூடிய தியான முறைதான் மனிதனின் மன அழுத்தத்தை முற்றாக குறைக்கிறது. எது நடந்தாலும் அது இறைவனின் சித்தப்படியே நடக்கிறது என்று இஸ்லாமியர்கள் நம்பி விடுவதாலும், ஒரு நாளைக்கு ஐந்து வேளை இறைவனை நினைத்து தொழுவதாலும் மன அழுத்தம் முஸ்லிம்களை அண்டுவதில்லை. இதன் காரணமாகவே இஸ்லாமிய நாடுகளில் தற்கொலை விகிதம் மிகக் குறைவாக இருக்கிறது.
நமது இந்தியாவிலும் தற்கொலை செய்து கொள்பவர்களை மத ரீதியாக கணக்கெடுத்துப் பாருங்கள். அதில் இந்துக்களும், கிருத்தவர்களும், நாத்திகர்களும் அதிகம் இருப்பர். முஸ்லிம்கள் மிக மிக சொற்பமாகவே தென் படுவர். இதற்கு காரணம் தொழுகை என்றால் மிகையாகாது.
'நம்பிக்கைக் கொண்டோரின் உள்ளங்கள் இறைவனின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! இறைவனின் நினைவால்தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன'
குர்ஆன் 13:28
-----------------------------------------------------
அல்லாஹ் கூறுகின்றான்:
“மனிதர்களே! உங்கள் இரட்சகனிடமிருந்து உங்களுக்கு நல்லுபதேசமும் உள்ளங்களில் உள்ளவற்றிற்கு நிவாரணியாகவும் நம்பிக்கையாளர்களுக்கு நேர்வழியும், கருணையும் நிச்சயமாக வந்துவிடும்” (அல்-குர்ஆன் 10:57)
நபித் தோழர் அனஸ் அறிவித்தார்: "நபி அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. நபி அவர்கள் 'அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன பெரும் பாவங்களாகும்" என்று கூறினார்கள். [நூல்;புஹாரி எண் 2653 ]
உங்கள் கைகளாலேயே நீங்கள் அழிவை தேடிக்கொள்ளதீர்கள் ! -அல் குர்ஆன்(2:195)
உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள் ! அல்லாஹ் உங்கள் மீது மிக கருணை உள்ளவனாக இருக்கிறான்!-அல் குர்ஆன் (4:29)
theguardian
04-09-2014
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
தினசாி பத்திாிகை படிப்பவா்கள் இப்படி எழுத மாட்டாா்கள்.குண்டு வெடிப்பு தற்கொலை படைதாக்குதல் அகதிகள் கடலில் முழ்குதல் என்று பத்திாிகைகள் நிறைய செய்திகள் உள்ளன. இந்நிலையில் இப்படி எழுததங்களுக்கு எப்படி மனம் வந்தது ????
அரேபிய மத சமூதாயங்களில் வன்முறை தலைவிாித்தாடுகின்றதே ஏன் ? இதுவும் ஒரு காரணம்.
தமிழ்நாட்டில் தங்கவேலு, சந்திரபாபு போல அந்தக் காலத்தில் புகழ் பெற்ற மேற்கத்திய நகைச்சுவை நடிகன் கிரிமால்டி. அவருடைய வாழ்வில் நடந்த சுவையான சம்பவம் இதோ:
நோயாளி: டாக்டர், எனக்கு எப்போதும் ஒரே கவலையாக இருக்கிறது. ஏனென்றே தெரியவில்லை.
டாக்டர், அந்த நோயாளியிடம் பேச்சு கொடுத்துவிட்டு சொன்னார்:
“இதோ பாருங்கள், உங்களுக்கு உடம்பில் ஒரு நோயும் இல்லை; மன நோயும் இல்லை. பேசாமல் பிரபல நகைச் சுவை நடிகர் கிரிமால்டியின் நாடகத்தைப் போய்ப் பாருங்கள்; வயிறு குலுங்கச் சிரிப்பீர்கள்; கவலைகள் எல்லாம் பறந்தோடிப் போகும்”.
நோயாளி: “டாக்டர், நான் தான் அந்த கிரிமால்டி!”
(பெரும்பாலான நகைச் சுவை நடிகர்களும், சர்க்கஸ் கோமாளிகளும் நமக்கு சிரிப்பு ஊட்டினாலும், அவர்கள் சொந்த வாழ்வு, சோகமயமாக இருக்கிறது!)
சங்கீதம் – நல்ல மருந்து!
ஸ்பெயின் நாட்டின் அரசர் பிலிப்புக்கு திடீரென்று உடல் நலம் குன்றி, மன நோய் ஏற்பட்டு சோகக் கடலில் மூழ்கினார். உண்ணுவதில்லை; உறங்குவதில்லை; உடம்பைப் பேணுவதில்லை. முகச் சவரம் கூட செய்துகொள்ளவில்லை; செய்யவும் பிறரை அனுமதிக்கவில்லை.
மஹாராணிக்கு ஒரே கவலை. “இசை ஒரு மருந்து; அது பல வியாதிகளைக் குணப்படுத்தும்; கவலைகளைக் போக்கும்” -- என்பதை அவர் அறிவார். ஆகையால் அக்காலத்தில் சிறந்த பாடகரான பாரிநெல்லி என்பவரை அழைத்து அரண்மனைக்குள் ஒரு கச்சேரி ஏற்பாடு செய்தார். அந்த இன்னிசை நிகழ்ச்சி, மன்னர் தங்கியிருந்த அறைக்கு அடுத்த அறையில் ஏற்பாடு செய்யப்பட்டது. மன்னர் காதிலும் அற்புதமான சங்கீதம், தேவ கானம் ஒலித்தது. மெல்ல மெல்ல, கச்சேரியில் வந்து அமர்ந்தார். பாரிநெல்லி அவரிடம் பேச்சு கொடுத்தார். மேலும் சில பாடல்களைக் கேட்க விரும்புவதாக மன்னர் தெரிவித்தார்.
உடனே பேரிநெல்லி சொன்னார்: மன்னர் அவர்களே, நீங்கள் கேட்கும் பாடல்கள் எல்லாவற்றையும் பாடுவேன். ஆனால் எனக்கும் ஒரு கோரிக்கை இருக்கிறது. அதை நிறைவேற்றுவீர்களா?
மன்னர் சொன்னார்: என்னால் நிறைவேற்றக் கூடிய கோரிக்கை என்றால் உடனே செய்கிறேன்.
பாரிநெல்லி சொன்னார்: மன்னரே, சின்ன வேண்டுதல்தான். தாங்கள் முக க்ஷவரம் செய்துகொண்டு ‘டிப்டாப்’பாக, மன்னர் போல அமர்ந்தால் நான் இன்னும் உற்சாகத்துடன் பாடமுடியும்.
உடனே பிலிப் முடிதிருத்தி, மணி முடி அணிந்து வந்து அமர்ந்தார்.
மன்னர் சங்கீதக் கடலில் மூழ்கினார்; மஹாராணி மகிழ்ச்சிக் கடலில் நீந்தினார்.
காசேதான் கடவுளடா! பணமே மருந்து!!
டாக்டர் கோல்ட்ஸ்மித் என்பவர் சிறந்த மேல்நாட்டு மருத்துவர். அவரிடம் ஒரு பெண்மணி வந்தார். என் கணவருக்கு மனதே சரியில்லை; பிரமை பிடித்தவர் போல இருக்கிறார். டாக்டர் வீட்டுக்கும் வர மறுக்கிறார். தயவு செய்து வீட்டுக்கு வந்து அவரைப் பார்த்து, ஏதேனும் மருந்து கொடுங்களேன் – என்று கெஞ்சினார்.
டாக்டர் கோல்ட்ஸ்மித்தும் அந்த வீட்டுக்குப் போய் ‘நோயாளியிடம்’ பேச்சுக் கொடுத்தார். அவருக்கு என்ன நோய் என்று பளிச்செனத் தெரிந்தது.
அந்தப் பெண்மணியிடம் சொன்னார்: கவலைப்படாதீர்கள். உங்கள் கணவரின் நோய்க்கு உடனே மருந்து கொடுத்து அனுப்புகிறேன்.
வீட்டிற்குப் போனவுடன் டாக்டர் கோல்ட்ஸ்மித், ஒரு ‘கவரில்’ (காகிதப் பை) பத்து பவுன் கரன்ஸி நோட்டை வைத்து நோயாளிக்கு அனுப்பிவைத்தார். அந்த நோயாளியும் விரைவில் குணம் அடைந்தார்.
(வறுமை என்பது மனத் தொய்வை ஏற்படுத்தும். உங்கள் நண்பரோ, உறவினரோ இப்படிப்பட்ட பசிப் பிணியால், ஏழ்மை நோயால், வருந்தினால், அவருக்கு உதவி செய்யுங்கள். மனக் கவலை, பயம் முதலியவற்றை இயற்கைக் காட்சிகள், நகைச் சுவைப் படங்கள், இன்னிசைக் கச்சேரிகள், பண உதவி மூலம் போக்குங்கள். பணத்தாசை கொண்ட மன நோய் மருத்துவரிடம் போனால், ‘லிதியம்’ மாத்திரைகளைக் கொடுத்து, வாயில் நுரை தள்ள வைத்துவிடுவார்கள்.)
ஹத யோகா, அமைதியான இசையும் கா்நாடக மற்றும் தமிழ் இசையும் நல்ல மருந்து
மாக கவி எழுதிய சிசுபாலவதமென்ற சம்ஸ்கிருத காவியத்தில் ஒரு அருமையான பொன்மொழி வருகிறது:
Great men, by nature, do not talk much (they limit their speech to the essentials only)
மஹீயாம்ச: ப்ரக்ருத்யா மிதபாஷிண:
பெரியோர்கள், இயற்கையிலேயே, குறைவாகப் பேசுவார்கள் – என்பது இதன் பொருள்.
வால்மீகியும் ராமனின் புகழ் பாடுகையில் மிதபாஷி (குறைவாகப் பேசுபவன்) என்று சொல்கிறார். அத்தோடு ஸ்ருதபாஷி (உண்மை விளம்பி), ஹித பாஷி (இனிமையாகப் பேசுபவன்), பூர்வபாஷி (தானாக வலிய வந்து பேசுபவன்) என்றும் பாராட்டுகிறார்.
இத்தனையையும் ஒரே வாக்கியத்தில் சொல்லும் தமிழில் உள்ள ஒரு பழமொழி: ‘நிறைகுடம் தழும்பாது, குறைகூடம் கூத்தாடும்’.
ஆசாரக் கோவை என்னும் நூல் அழகான ஒரு பட்டியலைக் கொடுக்கிறது:
விரைந்துரையார் மேன்மேலுரையார் பொய்யாய் புனைந்துரையார் பாரித்துரையார்
பொருள்:
விரைவாகச் சொல்லமாட்டார், சொன்னதையே திரும்பச் சொல்லார், பொய்யாக எட்டுக்கட்டிச் சொல்லமாட்டார், மிகைப்படுத்தி சொல்லமாட்டார்
பின்னர் எப்படிச் சொல்லுவார்?
சுருக்கமாகப் பொருள் முழுதும் விளங்கும்படி சொல்லுவார், காலத்திற்குப் பொருத்தமாக, விரும்பியதை மட்டும் சொல்லுவார்.
இதோ பாடல் முழுதும்:
விரைந்துரையார் மேன்மேலுரையார் பொய்யாய
பரந்துரையார் பாரித்துரையார் –ஒருங்கெனைத்தும்
சில்லெழுத்தினாலே பொருளடங்கக்காலத்தால்
சொல்லுக செவ்வியறிந்து.
---ஆசாரக்கோவை
திருவள்ளுவன் ‘சொல்வன்மை’ என்னும் அதிகாரத்தில் பத்து குறட்பாக்களில் சொன்ன பொன்மொழிகளை நாம் அறிவோம்.
இறுதியாக உலகின் முதல் சட்ட வல்லுனனான மனு, அவருடைய மனுஸ்மிருதியில் (4-138) சொல்லுவது என்ன என்று காண்போம்:
சத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயாத் ந ப்ரூயாத் சத்யம் அப்ரியம்
ப்ரியம் ச நான்ருதம் ப்ரூயாத் ஏஷ தர்ம: சநாதன:
--மனு ஸ்மிருதி 4-138
உண்மையே பேசு; இனிமையாகப் பேசு;
கசப்பான உண்மையைச் சொல்லாதே;
இனிமையான பொய்களைப் பேசாதே;
இதுதான் சநாதன தர்மம் (இந்து மதம்).
Post a Comment