Followers

Tuesday, May 24, 2016

இரண்டு கால்களை இழந்தும் சாதித்துக் காட்டிய ரோஷன் ஜஹான்!



இரண்டு கால்களை இழந்தும் சாதித்துக் காட்டிய ரோஷன் ஜஹான்!

'2008 ஆம் ஆண்டு மும்பையில் அந்தேரியிலிருந்து ஜோகேஸ்வருக்கு ரயிலில் பயணித்தேன். கல்லூரி பரீட்சை எழுதி விட்டு திரும்பும் வழியில் பாலன்ஸ் தவறி ரயிலின் சக்கரங்களுக்கு இடையில் சிக்கிக் கொண்டேன். எனது கால்களின் மேல் சக்கரம் ஏறுவதை எனது கண்களால் கண்டேன். எனது இரண்டு கால்களும் போனது. ஆர்தோபெடிக் சர்ஜன் டாக்டர் சஞ்சய் காந்தாரியா தனது மகளாக என்னை சுவீகரித்துக் கொண்டு எனக்கு மருத்துவம் பார்த்தார். விபத்துக்குப் பிறகு எனது படிப்பை விடவில்லை. வீட்டிலேயே எனது படிப்பை தொடர்ந்தேன்.

எனது தாயார் என் கால்கள் போனதற்குப் பிறகு சொன்னார் ' இது உனக்கு மறு வாழ்வு. இறைவன் உன் மூலம் சில சாதனைகளை நிறைவேற்ற எண்ணியிருக்கலாம். எனவே தான் இரண்டு கால்கள் போன பின்பும் நீ உயிருடன் உள்ளாய். எனவே மனம் தளர்ந்து விடாமல் உனது படிப்பை தொடர். இறைவன் உனக்கு வெற்றியைக் கொடுப்பான்' என்றார்.

எனது தாயார் மற்றும் உறவினர்களின் ஊக்கத்தால் கடுமையாக உழைத்தேன். மருத்துவத் துறையில் நுழைவு தேர்வு எழுதி தேர்வானேன். கல்லூரியின் மூலமாக ஜேஜே ஹாஸ்பிடலுக்கு அனுப்பப் பட்டேன். அங்கு சில காரணங்களால் அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பிறகு மூத்த வழக்கறிஞர் வி.பி.பாடீல் எனது வழக்கை இலவசமாக நடத்தித் தருவதாக வாக்களித்தார்.

உறவினர்களின் உதவியோடு நீதி மன்றத்துக்கு வந்தேன். எனது நிலையைப் பார்த்த நீதிபதி ஷா அவர்கள் எனக்கு உடன் அனுமதி அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன் பிறகு கல்லூரி மருத்துவ துறையில் என்னை அனுமதித்தது. தற்போது மருத்துவ துறையில் கடைசி வருடத்தையும் பூர்த்தியாக்கியுள்ளேன். எனது சாதனைகளுக்கு முதல் காரணம் இறைவன். அதற்கு அடுத்து எனது தாய். அவர் கொடுத்த உத்வேகமும் ஆறுதலும் என்னை உங்கள் முன் சாதனையாளராக நிறுத்தியுள்ளது'

என்கிறார் 23 வயதான ரோஷன் ஜஹான்.

யாரையும் குறை சொல்லிக் கொண்டு காலத்தைக் கழிக்கவில்லை. இரண்டு கால்களையும் இழந்தாலும் ஒரு வேகத்தோடு சாதிக்க வேண்டும் என்ற வெறியோடு முயற்சித்தார். வெற்றி கிட்டடியது. இவரைப் போன்றவர்கள்தான் இந்தியாவின் பாரத மாதாக்கள்!

தகவல் உதவி

http://ummid.com/
03-04-2015

http://ummid.com/news/2016/April/03.04.2016/roshan-jahan-feleicitated-by-people-of-malegaon.html

No comments: