Followers

Tuesday, May 03, 2016

மே 4 - திப்பு சுல்தான் நினைவு தினம்!



தலித்களுக்கு நில பகிர்வு செய்த திப்பு சுல்தான்!

'200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திப்பு சுல்தானின் வரலாற்றை நாம் படிக்க வேண்டும். ஆங்கிலேயரை எதிர்த்து தீரத்துடன் போரிட்டவன் அவன். ஆங்கிலேயருக்கு அடிமையாகி இருந்தால் தென்னகப் பகுதிகளுக்கே அவன் பெரிய மன்னராக ஆகியிருப்பான். 1782 - ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திப்பு சுல்தான் மன்னர்களிடமிருந்து தானமாக நிலங்களை பெற்று வைத்திருந்த ஜமீன்தார்களிடமிருந்து நிலங்களை மீட்டு அதை ஏழை தலித் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் அளித்து 200 ஆண்டுகளுக்கு முன்பே நிலச் சீர்திருத்தத்தை அமல்படுத்தியவன்.

அதனால்தான் பிராமணர்களும் ஆங்கிலேயர்களும் திப்பு சுல்தானை துரோகியைப் போன்று திரித்து தவறான வரலாற்றை எழுதியுள்ளனர். உண்மையான வரலாற்றை நாம்தான் வெளிக் கொணர வேண்டும்.

1782 முதல் 1799 வரை ஆட்சி புரிந்த திப்பு தான் அரசன் இல்லை: மக்கள் பிரதிநிதி என்று கூறிக் கொண்டவன்.

தவறு செய்பவர்களை சிறையில் அடைக்காமல் அவர்களுக்கு மாற்றுப் பணிகளை வழங்கி அதை வருமானமாக மாற்றியவன் திப்பு.

இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு பாடுபட்ட திப்பு மற்றவர்களைப் போல ஆடம்பரத்தை விரும்பாமல் மக்கள் நலனையும் ஆங்கிலேயரை விரட்டி அடிப்பதையும் தன் கடமையாகக் கொண்டிருந்தான்.

மேலும் கடைசி 6 மணி நேரத்துக்கு முன் எதிரிகள் படையெடுத்து வருவதையறிந்து அவர்களை எதிர் கொள்ள தன் படைகளை தயார் படுத்தினான் திப்பு. அந்த அளவுக்கு தகவல் தொடர்பு வசதிகளையும் அவன் வைத்திருந்தான்.

திப்பு சுல்தான் இறந்த பின் அரண்மனைக்குள் புகுந்த ஆங்கிலேயர்கள் முதலில் திப்புவின் நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த பாரசீக மற்றும் சமஸ்கிரத மொழி நூல்களை லண்டனுக்கு எடுத்துச் சென்றனர். பின் அந்த நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் பட்டன.

அதன் பின்னரே விலை உயர்ந்த நகைகள் ஆபரணங்களை அவர்கள் அள்ளிச் சென்றனர்.

திப்புவின் அறிவும் செல்வமுமே இங்கிலாந்தின் தொழிற்புரட்சிக்கு காரணம்.

ஆங்கிலேயர்களை எதிர்க்க ஹைதரபாத் நிஜாம், மராட்டிய மன்னர்களை ஒன்றிணைக்க திப்பு மேற்கொண்ட முயற்ச்சிக்கு இருவரும் ஒப்புக் கொள்ளவில்லை. இந்த இணைப்பு நடைபெற்றிருந்தால் 1799- ஆம் ஆண்டே நம் நாடு ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்றிருக்கும்.

நம்நாடு முன்னேற கணிணி, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி ஆகியவை மட்டும் துணை புரியாது. ஏழை ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேற வேண்டும்.

அமெரிக்கர்கள் நம் நாட்டில் விஞ்ஞானிகள் உருவாவதை விரும்பவில்லை. மென்பொருள் பொறியாளர்கள்தான் உருவாக வேண்டுமென விரும்புகின்றனர். நம் இளைஞர்கள் விஞ்ஞானிகளாக உருவாக அடிப்படை அறிவியலை நாம் கற்றுக் கொடுக்க வேண்டும்.

திப்புவின் அறிவுத் திறன், தொழில் நுட்பம், நிர்வாகத் திறன் ஆகியவற்றை நாம் இளைஞர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம்.'

-தலகாடு சிக்கே ரங்க கௌட
திப்பு சுல்தான் பிரசார சமிதி தலைவர்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில் தஞ்சையில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ் மக்கள் இசை விழாவில் பேசிய பேச்சைத்தான் நாம் மேலே படித்தது.

ஆதாரம்
தினமணி
25-2-2007

இது போன்ற தலைவர்களின் உண்மை வரலாற்றை மறைப்பதன் மூலம் நம் நாட்டுக்கு நாமே தீங்கிழைக்கிறோம். இவ்வளவு சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று நாயகனின் சரித்திரத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் போது 'இது ஒரு கற்பனைக் கதை. இதில் வரும் சம்பவங்கள் எவரையும் குறிப்பிடுபவை அல்ல' என்ற செய்தியோடு வெளியிட்டார்கள்.

அதே சமயம் ராமாயணமும் மகாபாரதமும் ஒளிபரப்பும் போது வரலாற்று காவியம் என்ற அடை மொழியோடு ஒளிபரப்புவார்கள். என்ன ஒரு நடுநிலைமை!

1 comment:

Dr.Anburaj said...

நான் வாழ்வில் முதல் முறையாக படித்த ஆங்கில புத்தகம் The Sword of Tippu sultan .B.Sc
படிக்கும் போது ஆங்கில அறிவை மேம்படுத்த இந்த புத்தகத்தை கல்லூாி நூலகத்தில் இருந்து படுத்து மிகவும் சிரமப்பட்டு முக்கால் பகுதி படித்தேன். ஆனால் முடிக்க முடியவில்லை. இன்று வரை கால் பகுதியை படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. மேற்படி புத்தகத்தை எழுதியவா் இந்து மகா சபையைச் சோ்ந்த ஒரு தலைவா் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அனைத்து மக்களிடமும் நீதமாக நடந்துள்ளாா். சிருங்கோி சங்கராச்சாாியா் மடம் தாக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தொிவித்துள்ளாா். சேதங்களை சாி செய்ய உதவியிருக்கின்றாா். அவரது வாழ்வில் சிறப்பான பக்கங்கள் நிறைய உள்ளனஎன அறிந்தேன்.