
மோடியின் இன்றைய பல்பு - #pomonemodi
'நுணலும் தன் வாயால் கெடும்' தவளை தன் வாயால் கெடுவது போல திருவனந்தபுரத்தில் பேசிய மோடி 'கேரளா சோமாலியாவைப் போல் மாறி வருகிறது' என்று பிரசாரத்தில் குறிப்பிட்டார். விடுவார்களா மலையாளிகள். மோடியை பிய்த்து மேய்ந்து விட்டார்கள்.
#pomonemodi என்ற ஹேஸ் டேக்கானது ட்விட்டரில் முதல் இடத்துக்கு வந்துள்ளது. மலையாள நடிகர் மோகன்லாலின் படத்தில் வரும் ஒரு வசனத்தை அப்படியே மோடிக்கு திருப்பி விட்டுள்ளார்கள் மலையாளிகள்.
பிஜேபிக்கு கேரளாவில் வாக்கு சதவீதம் 6. மற்ற 94 சதமான மலையாளிகளும் அறிவாளிகள் என்று மோடியை கிண்டலடித்து கேரளா முழுக்க பரபரப்பாக உள்ளது. அந்த பரபரப்பில் நாமும் கலந்து கொள்வோம்.
'போ மகனே மோடி' நாங்கள் மலையாளிகள் அறிவில் சிறந்தவர்கள். யாரை எங்கே வைக்க வேண்டும் என்று தெரிந்தவர்கள். உனது புராணத்தை குஜராத்தில் போய் சொல்லு. ஏமாந்தவன் கேட்டுக் கொண்டிருப்பான்.
No comments:
Post a Comment