Followers

Sunday, May 15, 2016

கோரம் - அகோரம் உண்மையான பொருள் என்ன?கோரம் - அகோரம் உண்மையான பொருள் என்ன?

(இது ஒரு மீள் பதிவு)

சென்னி மலை!

//சுத்தம் - அசுத்தம்
சாதாரணம் - அசாதாரணம்
பாக்கியம் - அபாக்கியம்
கோர வாழ்வு - அகோர வாழ்வு
அப்படியே வரிசையாக
அர்த்தம் சொல்லிட்டு வாங்க,
தாய்மொழியோ தகறாரு
இதுல எங்க அடுத்தவங்க
மதத்தை பற்றி புரிஞ்சிக்க போறீங்க???
ஒருவேளை உங்க தாய்மொழி
தமிழ் இல்லையா??????//

பிணந்தின்று தினமும் கஞ்சா அடித்து உருண்டு கிடக்கும் அகோரிகளை காப்பாற்றப் போய் தமிழ் மொழிக்கும் ஆப்பு வைக்க ஆரம்பித்தாகி விட்டதா?

முதலில் கோரம், அகோரம் என்ற இந்த வார்த்தைகள் தமிழ் வார்த்தைகளே அல்ல. இது வட மொழிச் சொல். இதற்கு தமிழின் முக்கிய தளங்கள் என்ன அர்த்தம் தருகின்றன என்று பார்போம்.

அகோரம், பெயர் சொல்.

1. அழகின்மை, கொடுமை, வெறுக்கத்தக்க, சரியில்லாதவை. [1]
2. உக்கிரம், ஞானம், உஷ்ணம். [2]

http://ta.wiktionary.org/wiki/அகோரம்

------------------------------------------------------------------------

அகோரம்:

மிக்க கொடுமை, வெப்பம், சிவனின் ஐந்து முகத்தில் ஒன்று, ஞானம்

http://www.valaitamil.com/அகோரம்--tamil-dictionary60742.html

-------------------------------------------------------------------------

அன்பிற்கினிய நண்பர் செம்மலுக்கு
வணக்கம்

கோரம், அகோரம் பற்றிய தங்கள் குறிப்பைக் கண்டேன்.
தாங்கள் குறிப்பிட்டது சரியே -

இவை இரண்டுமே வடமொழிச் சொற்கள்!

கோரம் = கொடுமையான, அஞ்சத்தக்க, அருவெறுப்பான ...

அகோரம் = அதிகக் கொடுமையான, மிகவும் அஞ்சத்தக்க, மிக அருவெறுப்பான ...

அகோரம் என்பதைப் பெயராகக் கொண்டவர்கள் உண்டு. இங்கே பிரான்சில் உள்ள கோயில் குருக்கள் ஒருவர் பெயர் அகோரமூர்த்தி. சதாசிவ உருவில் இருக்கும் சிவனுக்கு அகோரமூர்த்தி என்று பெயர்.

சிவனுக்கு ஐந்து தலைகள் (முகங்கள்) :தத்புருஷம், அகோரம், வாமம், சத்யோஜாதம், ஈசானம்.

பிரமனுக்கும் ஐந்து தலைகள் இருந்தனவாம்.

ஒருமுறை, பார்வதி தேவி, தன கணவன் என்று எண்ணித் தவறுதலாகப் பிரமன் பக்கத்தில் அமர்ந்துவிட்டாளாம். அதைக் கண்டு விளக்கம் கேட்ட சிவனுக்குப் பார்வதி, "பிரமனுக்கும் ஐந்து தலை ; உங்களுக்கும் ஐந்து தலை வேறுபாடு தெரியவில்லை" எனச் சமாளிக்கச் சிவன் சினந்து பிரமாவின் தலைகளில் ஒன்றைக் கொய்துவிட்டாராம். அன்று முதல் பிரமா, நான்முகராக வலம் வரத் தொடங்கினார்.

"அற்ற தலை போக அறாத தலை நான்கினையும்
பற்றித் திருகிப் பறியேனோ..." என வரும் ஒளவையாரின் பாடலில் இக்கதை பொதிந்துள்ளது.

பறித்த பிரமனின் தலை (மண்டையோடு?) சிவனின் கையிலேயே ஒட்டிக்கொண்டதாம். பிரமன் தலையைக் கொய்தலால் சிவனுக்கு பிரம அத்தி தோசம் பிடித்ததாம்.

இவை புராணக் கதைகள்.

https://groups.google.com/forum/#!topic/tamil_ulagam/0CLSOJ4azZ8

---------------------------------------------------------------

இப்போது அகோரிகளுக்கு உண்மையான அர்த்தம் என்ன என்பதை விளங்கிக் கொண்டீர்களா? இதில் எனக்கு வேறு அட்வைஸ் பண்ணுகிறீர்கள்? நீங்கள் தமிழனா என்று ஒரு கேள்வி வேறு கேட்கிறீர்கள்? smile emoticon

சென்னி மலை உண்மையில் தமிழனா என்ற சந்தேகம் எனக்கு வருகிறது. உங்களின் தாய் மொழி தெலுங்காகவோ, கன்னடமாகவோ இருக்க வாய்ப்புள்ளது. எதுவாக இருந்தாலும் இனி எதையும் யாரையும் விமரிசிக்கும் போது உண்மை என்ன என்பதை விளங்கி பதிவிடவும்.

நான் மொழியால் தமிழன், இனத்தால் திராவிடன், தேசத்தால் இந்தியன், மார்க்கத்தால் இஸ்லாமியன்.

உங்களின் தாய் மொழி தமிழ்தானா? சென்னி மலை? சீமான் வேறு இந்த தேர்தலோடு தெலுங்கர்களுக்கும் கன்னடர்களுகளுக்கும் ஒரு முடிவு கட்டுகிறேன் என்று ஒத்தைக் காலில் நிற்கிறார். பார்த்து சூதனமா நடந்துக்குங்க.... :-)

வர்ட்டா.......... smile emoticon

No comments: