
பெண் பாவம் பொல்லாதது மோடி அவர்களே!
சில ஆண்டுகளுக்கு முன் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென் வெளி நாட்டில் உள்ள தனது உறவினர்களை சந்திக்க விரும்பி பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் இவரது விண்ணப்பத்தில் திருமண சான்றிதழ் அல்லது கணவனின் அபிடவிட் என்ற இரண்டும் இணைக்கப்படவில்லை என்று குஜராத் பாஸ்போர்ட் அலுவலகம் அவருக்கு பாஸ்போர்டை வழங்கவில்லை.
யசோதாபென் தற்போது பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு கேள்வி எழுப்பியுள்ளார். 'பிரதமர் நரேந்திர மோடிக்கு இதே அலுவலகம் பாஸ்போர்ட் வழங்கியுள்ளது. அவரது திருமண சான்றிதழை இந்த அலுவலகம் சோதித்ததா? எதன் அடிப்படையில் அவருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது?' என்று கேள்வி எழுப்பியுள்ளார். நியாயமான கேள்வி.
குஜராத் பாஸ்போர்ட் அலுவலக உயரதிகாரி இஜட்.ஏ.கானிடம் இது பற்றி கேட்டபோது 'அவரது கேள்விகளுக்கு 30 நாளில் பதிலளிக்கிறோம்' என்று கூறுகிறார். பல 30 நாட்கள் சென்று விட்டது. பாவம் யசோதாபென்னுக்கு பதிலும் கிடைக்கவில்லை. பாஸ்போர்டும் கிடைக்கவில்லை.
பெண் பாவம் பொல்லாதது மோடி அவர்களே!
http://www.huffingtonpost.in/2016/02/11/modi-jashodaben-passport_n_9206314.html
No comments:
Post a Comment