Followers

Monday, May 30, 2016

இந்தியாவில் தனது கிளையை துவங்கும் இஸ்லாமிய வங்கி!



இந்தியாவில் தனது கிளையை துவங்கும் இஸ்லாமிய வங்கி!

ISLAMIC DEVELOPMENT BANK IDB ஐடிபி இன்னும் சில தினங்களில் குஜராத்தின் தலைநகர் அஹமதாபாத்தில் தனது கிளையை துவங்க உள்ளது. இந்திய பிரதமர் மோடியும் சவுதி மன்னர் சல்மானும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி இந்த கிளை துவக்கப்பட உள்ளது. இந்த வங்கியானது வட்டியை பிரதானமாக கைக் கொள்ளாது. வைப்பு நிதிகளுக்கு வட்டி கிடையாது. விவசாயிகள் வாங்கும் லோன்களுக்கும் வட்டி கிடையாது. வங்கி வருவாய்க்கு பெரும் தொழில்களில் முதலீடு செய்யும். இதனால் வட்டியினால் தற்கொலை செய்து கொள்ளும் பல ஆயிரம் விவசாயிகள் நிம்மதி பெரு மூச்சு விடுவர்.

ஜெத்தாவை தலைமையிடமாக் கொண்டு இயங்கும் இந்த வங்கி இன்னும் சில நாட்களில் இந்தியா முழுக்க தனது கிளையை தொடங்க உள்ளது. இந்த வங்கியானது 56 இஸ்லாமிய நாடுகளின் பங்களிப்பில் உருவாகியுள்ளது. இதில் கால் பங்கு ஷேர்களை சவுதி அரேபியா கொடுத்துள்ளது. அமீரகமும் இதில் முக்கிய ஷேர் ஹோல்டர்.

2010 ஆம் ஆண்டு கேரளாவில் இதே போன்ற வங்கியை தொடங்க முயற்சித்தனர். நம்ம சகுனி சுப்ரமணியம் சுவாமி வழக்கு தொடர்ந்து அதனை தடுத்தார். தற்போது ரிசர்வ் வங்கியின் ரகுராம் ராஜன் இஸ்லாமிக் பேங்குக்கு அனுமதி அளித்துள்ளது சுப்ரமணியம் சுவாமிக்கு எரிச்சலை உண்டு பண்ணியது. எனவே தான் அவரை மாற்ற வேண்டும் என்று பிரச்னை பண்ணிக் கொண்டுள்ளார். வட்டி தொழிலையே பிரதானமாக செய்து வரும் யூதர்களின் கைக் கூலி சுப்ரமணியம் சுவாமிக்கு வட்டி இல்லா வங்கி வந்தால் சும்மா இருப்பாரா?

குஜராத்தில் இஸ்லாமியரின் ரத்தத்தை ஓட்டியது ஒரு காலம்: இன்று அதே இஸ்லாமியரின் மூலதனத்தைக் கொண்டு ஏழை மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படுகிறது. ஐம்பத்தைந்து மில்லியன் டாலர்களை ஏழை மக்களின் வாழ்வாதாரம் உயர இந்த வங்கி உதவியாக தர முன் வந்துள்ளது. இதில் 350 மருத்துவத்துக்கு பயன்படும் வாகனங்கள் வாங்க பயன்படுத்தப்படும். அதில் 30 வேன்கள் இந்த வருடம் குஜராத்துக்கு நன்கொடையாக அளிக்கப்பட உள்ளது. வைப்பு நிதி பெரும்பாலும் இஸ்லாமியர்களுடையதாக இருந்தாலும் வங்கியின் உதவியானது அனைத்து மத மக்களுக்குமானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இத்தனை கொடுமைகள் இஸ்லாமியருக்கு மோடி அரசு கொடுத்தும் உதவ முன் வந்துள்ளனர் முஸ்லிம்கள். இதுதான் இஸ்லாம்.

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.

நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.

http://www.thenational.ae/world/south-asia/islamic-banking-set-to-launch-in-india-amid-controversy





No comments: