Followers

Friday, May 13, 2016

உஜ்ஜயின் கும்பமேளாவில் இந்துக்களுக்காக திறக்கப்பட்ட பள்ளிவாசல்கள்!



உஜ்ஜயின் கும்பமேளாவில் இந்துக்களுக்காக திறக்கப்பட்ட பள்ளிவாசல்கள்!

மத்திய பிரதேசம் உஜ்ஜயினியில் கும்பமேளா நடந்து வருவது நாம் அறிவோம். 20 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் ஒன்றாக குழுமும் இடம். தற்போது திடீரென்ற பெரு மழையும், பெரும் காற்றும் அடிக்கிறது. இது வரை 10 க்கு மேற்பட்டவர்கள் இறந்துள்ளார்கள். பலர் நதியில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இவ்வளவு பெரிய கூட்டத்தோடு இயற்கை சீற்றமு; சேர்ந்து கொண்டால் என்ன செய்வது?

இந்த பேரிடரிலிருந்து இந்துக்களை காப்பாற்ற உடன் முஜ்லிம்கள் தங்கள் மஸ்ஜிதுகளை திறந்து விட்டனர். ஹரி மஸ்ஜித், சாட்கிரண் மஸ்ஜித் போன்ற எண்ணற்ற பள்ளி வாசல்கள் இந்துக்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளன. சாப்பாடும் அவர்களுக்கு இஸ்லாமியர்கள் சமைத்துக் கொடுக்கின்றனர். குளிருக்காக போர்வைகளும் தந்து உதவுகின்றனர்.

ஷிர்ப்பா கட் பகுதியில் பல பக்தர்கள் நதியில் மூழ்கி இறந்துள்ளனர். அங்கும் சென்று பலரை இஸ்லாமியர்கள் காப்பாற்றியுள்ளனர்.

ராஜேஷ் கவுர் சொல்கிறார் 'எனது பெற்றோர் என்ன ஆனார்கள் என்று கலங்கி நின்றேன். தற்பொது அவர்கள் இஸ்லாமியர்களின் மஸ்ஜிதில் பத்திரமாக இருப்பதாக அறிந்து கொண்டேன். முஸ்லிம்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்கிறார்.

இந்துக்களும் முஸ்லிம்களும் சகோதர சகோதரிகளாகத்தான் எல்லா மாநிலத்திலும் பழகி வருகின்றனர். இந்த அன்பும் பிணைப்பும் இருக்கும் வரை எத்தனை அயோக்கியர்கள் முயன்றாலும் இந்து முஸ்லிம் ஒற்றுமையை சிதைத்து விட முடியாது.

மாட்டுக் கறி வைத்திருந்தார் என்ற பொய்யான காரணத்தைச் சொல்லி அக்லாக்கை கொன்றதும் இந்தியாதான்.

இந்துக்கள் இறக்கிறார்களே என்று ஓடி வந்து தனது வழிபாட்டு இடத்தை திறந்து விட்டு உணவும் சமைத்துக் கொடுத்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பல உயிர்களை காப்பாற்றியுள்ளார்கள் முஸ்லிம்கள். இதுவும் இந்தியாதான்.

ப்ன்முகத்தன்மை கொண்டது இந்தியா என்பது இதற்குத்தானோ!

தகவல் உதவி
இந்தியா . காம்
சியாஸத்
12-05-2016

http://www.india.com/news/india/hindu-muslim-unity-on-display-at-simhastha-kumbh-mela-mosques-provided-shelter-to-devotees-after-hailstorm-struck-ujjain-1180146/

1 comment:

Dr.Anburaj said...

திருச் செந்தூா் கோவிலுக்கு பாதயாத்திரையாக ஆயிரக்கணக்கில் பக்தா்கள் வருவாா்கள்.வீரபாண்டியன் பட்டனம் என்ற ஊாில் உள்ள கத் தோலிக்க தேவாலயங்களில் தங்கி உணவு பசமைத்து ஒய்வுஎடுத்துச் செல்லும் அருமையான காட்சியைக் காண கண் கோடி வேண்டும். நல்ல பதிவு நன்றி.இந்துக்களும் பரஸ்பரம் நல்ல உள்ளத்தோடு வாழ்ந்து வருகின்றா்கள். இந்துக்களைப் பற்றி நல்ல பதிவுகளை செய்திகளை வெளியிடுவதில்லையே ? சதாகுறை சொல்லும் மனநிலைதான் ஒங்கியிருக்கின்றது.