

கேரளாவில் தலித் பெண் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு மிகக் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பலியான பெண்ணின் வீட்டின் அருகே வசித்து வந்த நபரை சந்தேகத்தின் பேரில் போலீஸார் கைது செய்துள்ளனர்.
எர்ணாகுளம் சரக ஐ.ஜி. தலைமையிலான போலீஸ் குழுவினர் சந்தேக நபரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
எர்ணாகுளம் மாவட்டம் ராய மங்கலம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் உள்ளது இராவிச்சிரா. இந்த கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் எர்ணாகுளத் தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் படித்து வந்தார்.
கடந்த வியாழன் அன்று இரவு மாணவி வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பணி முடிந்து அன்று இரவு வீடு திரும்பிய மாணவியின் தாய், அவரை சடலமாக கண்டதும் அலறி துடித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் இளம் பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக் காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத அறிக்கையில் அந்த பெண் மிக கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்து அதிகாரிகள் கூறும்போது, "மிகக் கூர்மையான ஆயுதத்தால் அப் பெண்ணின் கருப்பையும், குடலும் சிதைக்கப்பட்டுள்ளது. பெண்ணின் நெஞ்சுப் பகுதியில் 13 செ.மீ. ஆழத்துக்கு காயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பெண்ணின் கல்லீரலும் சிதைக்கப்பட்டுள்ளது. இதுதவிர துணியால் பெண்ணின் வாய், மூக்கு பகுதியை பொத்தி மூச்சுத் திணறல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உடல் முழுவதும் 30 இடங்களில் படுகாயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன" என்றார்.
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
03-05-2016
இவர்கள் மனிதர்கள் அல்ல: கொடிய மிருகங்கள்!
No comments:
Post a Comment