Followers

Saturday, May 21, 2016

பசுவதை பற்றி ஒரு அன்பருக்கு விளக்கம்!பசுவதை பற்றி ஒரு அன்பருக்கு விளக்கம்!

திரு அரிசோனன்!

//நீங்களாகவே பசுவதை வேண்டாம் என்று சொல்லிப் பாருங்கள், ஒவ்வொரு இந்துவும் உங்களை உயர்வாகப் போற்றுவான்.//

எங்கள் வீடுகளில் பசு மாமிசம் சாப்பிடுவதில்லை. ஆடு, கோழி, மீன் போன்றவைகளே சமைக்கப்படுகின்றன. மாட்டுக் கறியை சமைப்பதை பலரும் தவிர்த்தே வந்துள்ளனர். எங்கள் வீடுகளில் 'மாட்டுக் கறி' என்று சொல்வதற்கு பதில் 'பெரிய ஆட்டுக் கறி' என்று அதனை மறைமுகமாக சொல்வார்கள். இந்துக்கள் மனம் புண்படக் கூடாது என்பதனால்தான் இந்த சொற்பிரயோகம். எங்கள் ஊரில் கறி மார்க்கெட்டில் ஆட்டுக் கறி மட்டுமே கிடைக்கும். மாட்டுக் கறி வேண்டுமென்றால் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் கிராமத்தை யொட்டிய மார்க்கெட்டுக்கு செல்ல வேண்டும். ஏனெனில் மாட்டுக் கறியை அவர்கள் தான் விரும்பி சாப்பிடுகின்றனர். விலையும் மலிவு. மேலும் பசு மாடும், அதன் சாணமும், அதன் மூத்திரமும் பார்பனர்களாகிய உங்களுக்குத்தான் புனிதம். 60 சதவீதத்துக்கு மேல் இருக்கும் இந்து பிறபடுத்தப்பட்ட மக்களுக்கோ, இஸ்லாமிய மற்றும் கிறித்தவர்களுக்கோ அது புனிதம் அல்ல. மற்ற உயிர்களைப் போல அதுவும் ஒரு உயிர். நான் புனிதமாக வணங்குகிறேன். எனவே அதற்கு புனிதத்தை நீயும் கொடு என்று இந்துத்வாவாதிகள் மிரட்டுவது சுத்த தாலிபானித்துவம் இல்லையா? ஹிட்லரிசம் இல்லையா? மோடியிசம் இல்லையா?

உங்கள் பார்வையில் மாடு மட்டும் தான் புனிதமா? ஆடு, மீன், கோழி போன்ற மற்ற ஜீவன்கள் அதிலும் குறிப்பாக நமது சகோதரர்களான தலித் மக்கள் என்று உலகில் பல கோடி ஜீவராசிகள் உண்டு. அவர்களிடம் இதே உங்களின் கருணையை எப்போது காட்டப் போகிறீர்கள். அந்த மக்களை அக்ரஹாரத்துக்குள் எப்போது அனுமதிக்கப் போகிறீர்கள்? உங்கள் கோவில்களுக்கும் அந்த மக்களை வழிபடும் உரிமையை எப்போது பெற்றுத் தரப் பொகிறீர்கள்?

அடுத்து மாடு பாலும் தரவில்லை. இனி கன்றும் ஈனாது. கிழடாகி விட்டது. இந்த நேரத்தில் அதனை பராமரிக்கும் ஒரு ஏழை என்ன செய்வான். அது தானாக இறக்கும் வரை அதற்கு தீனி போட ஒரு ஏழை விவசாயியால் முடியுமா? எனவே அதனை கசாப்பு காரனிடம் விற்று விட்டு மேற்கொண்டு பணம் போட்டு புதிய மாட்டை வாங்குகிறான். இதைத் தவிர வேறு வழியும் அவனுக்கு இல்லை இவ்வாறு விற்பதை தடை செய்ய வேண்டு மென்றால் அந்த அடி மாடுகளுக்கான தீர்வை சொல்லுங்கள். மோடி அரசு பசுக்களை வெட்ட தடை போட்டதால் மஹாராஷ்ட்ரா, கர்நாடகாவில் விவசாயிகள் தங்கள் பெண் பிள்ளைகளை வறுமையினால் கோவிலுக்கு பொட்டு கட்டி விடுகிறார்கள். இவ்வாறு விபசாரத்தில் தள்ளுவது பெண் இனத்திற்கே கேவலம் இல்லையா?

//ஏசு கிறிஸ்து, “Give unto Romans what is due unto them!” என்றுதான் சொல்லி இருப்பதாக விவிலிய நூல் கூறுகிறது. மேலும் நாட்டின் சட்டதிட்டங்களைப் பின்பற்றுமாறு அவர் வலியுறுத்தியதாக்கவும்தான் நான் படித்திருக்கிறேன்.//

ஒரு முறை புசைலா என்ற பெண்மணி நபி அவர்களிடம் வந்து “இறைத்தூதரே நான் என் சமூகத்தை நேசிப்பது இன வெறியா” என்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள் “தன் சமூகத்தை ஒருவன் நேசிப்பது இனவெறி அல்ல. மாறாக தன் சமூகத்தைச் சார்ந்தவன் வரம்பு மீறி அநீதியை செய்யும்போது அவன் செய்வது தவறு என்று தெரிந்தும் அவன் தன் சமூகத்தைச் சார்ந்தவன் என்பதற்காக அவனுக்கு உதவினால் அதுவே இனவெறி” என்றார்கள்.
ஆதாரநூல்: அஹ்மத்

இந்த நபி மொழியானது இனத்தின் பெயரால், குலத்தின் பெயரால், நாட்டின் பெயரால் தான் சார்ந்திருக்கும் நாட்டையும் சமூகத்தையும் நேசிக்கச் சொல்கிறது. அநீதிக்கு துணை போனால் அதுதான் இனவெறி என்பதை விளங்குகிறோம். எனவே எந்த முஸ்லிமாவது தனது தாய் நாட்டுக்கு துரோகம் இழைத்தால் அவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவனாகிறான்.

“இறைவனை பயந்து கொள்ளுங்கள்! உங்களுடைய தலைவருக்கு கட்டுப்படுங்கள்! அவர் அபிஷீனிய அடிமையாக இருப்பினும் சரியே!”
அறிவிப்பவர் இர்பால் (ரலி) அவர்கள். ஆதார நூல்: ஸூனன் அபீதாவூத் – 4490 – ஷஹீஹ் ஸூனன் அபீதாவூத் – 4607).

ஆப்ரிக்க அடிமை உங்களின் ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டாலும் அவரின் கட்டளைக்கு கீழ்படியுங்கள் என்பது முகமது நபியின் அறிவுரை. இதன்படி ஆட்சித் தலைவராக மோடி இருந்தாலும், ஜெயலலிதா இருந்தாலும் அந்த தலைமைக்கு கட்டுப்பட வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை. ஒரு ஆட்சியாளன் தனது கடமையிலிருந்து தவறினால்தான் அதனை எதிர்க்க இஸ்லாம் சொல்கிறது. எனவே ஒரு உண்மையான முஸ்லிம் தாய் நாட்டையும், இந்த மக்களையும், ஆட்சியாளர்களையும் மதிக்கவே செய்வான்.

No comments: