'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Thursday, May 12, 2016
தலித் குதிரையில் ஏறக் கூடாதா? சாதி வெறியின் உச்சம்!
தலித் குதிரையில் ஏறக் கூடாதா? சாதி வெறியின் உச்சம்!
பிஜேபி ஆளும் மத்திய பிரதேசத்தில் ரத்லம் ஊருக்கு அருகில் உள்ளது நெக்ரன் என்ற கிராமம். இந்த கிராமம் உயர் சாதியினர் அதிகம் வசிக்கும் பகுதியாகும். பவன் என்ற தலித் இளைஞரின் திருமணம் இந்த கிராமத்துக்கு அருகில் நடந்தது. அவர்கள் சாதி வழக்கப்படி பவனை குதிரையில் ஏற்றி ஊர்வலமாக கிராமத்தில் அழைத்துச் சென்றனர். வர்ணாசிரமத்தில் ஊறிய மேல் சாதியினருக்கு இது பொருக்குமா? உடனே இதனை எதிர்த்தனர். 'தலித் குதிரையில் ஏறி வருவதா?' என்று பல மேல் சாதி இளைஞர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது பற்றி மணமகன் பவன் கூறும் போது 'மேல் சாதி இளைஞர்கள் நான் குதிரையில் ஊர்வலம் வருவதை விரும்பவில்லை. பிரச்னையாகும் என்பதால் இது பற்றி காவல் துறையில் புகார் செய்தேன். போலீஸ் பாதுகாப்பும் கொடுத்தனர். ஊர்வலம் மேல் சாதியினர் தெருக்களில் நுழைந்த போது என் மேல் கற்களை வீச ஆரம்பித்தனர். உடன் போலீசார் எனக்கு ஹெல்மட் அணிவித்து எனது தலையை காப்பாற்றிக் கொள்ள அறிவுறுத்தினர். அதன் பிறகு ஹெல்மட் அணிந்து பாதுகாப்போடு எனது குதிரை பயணம் அந்த தெருவைக் கடந்தது' என்கிறார் பரிதாபகரமாக...
உதவி தாசில்தார் ஜெயின், தால் காவல் நிலைய கண்காணிப்பாளர் சுரேஷ் பாலாஜி போன்று பல அதிகாரிகளும் தலித் மக்களும் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளனர். மேல் சாதி இளைஞர்கள் 72 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது காவல் துறை. எதிர்த்த மேல் சாதியினரை அடித்து விரட்ட காவல்துறை முயலவில்லை. மாறாக பாதுகாப்புக்கு மணமகனுக்கு ஹெல்மட் தருகிறது. smile emoticon ஏனெனில் மத்தியிலும் மாநிலத்திலும் நடப்பது பிஜேபி ஆட்சி. எனவே காவல் துறை தனது அதிகாரத்தை பயன் படுத்தாமல் சற்று அடக்கி வாசித்துள்ளது.
இது போன்ற அடக்கு முறைகளை கண்டு வெறுத்து இஸ்லாத்தை நோக்கி செல்பவர்களை சென்னி மலை Aravindhan Neelakandan போன்றோர் கொச்சைபடுத்துகின்றனர். இவ்வாறு மதம் மாறியவர்களை வசைபாடுவதை விட்டு விட்டு இந்து மதத்தில் உள்ள இது போன்ற தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்து குரலெழுப்பினால் அதுவே அவர்கள் இந்து மதத்துக்கு செய்யும் நன்மையாக அமையும்.
அறிவியலில் மனிதன் எங்கெங்கோ சென்று விட்டான். ஆனால் நமது நாட்டில் சக மனிதன் மனிதனாக வாழ நமது சமூகம் சம்மதிப்பதில்லை. என்று ஒழியும் இந்த வர்ணாசிரம வெறி?
தகவல் உதவி
தி இந்து ஆங்கில நாளிதழ்
13-05-2015
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
According to you new converts to Islam will be terrorist like sidharth, so why?
Post a Comment