'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Saturday, May 21, 2016
கைகள் இல்லாமல் ப்ளஸ் டூ தேர்வில் பாஸ்!
உத்தர பிரதேசம் லக்னோவில் உள்ள மணிப்புரியைச் சேர்ந்தவர் அஜீத் குமார். வயது 16. இரண்டு கைகளையும் இழந்த இந்த இளைஞர் வாழ்க்கையில் துவண்டு விட வில்லை. போராடி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை தனது கால்களால் எழுதினார். பரீட்சையில் தற்போது வென்றிருக்கிறார். 71 சதவீத மதிப்பெண்களை இந்த தேர்வில் பெற்றுள்ளார்.
'நான் ஒரு பொறியியல் வல்லுனராகப் போகிறேன்' என்று சந்தோஷத்தோடு கூறுகிறார்.
கூத்தாடிகளான அஜீத் கட்அவுட்டுக்கும், விஜய் கட்அவுட்டுக்கும் பாலாபிஷேகம் செய்து வரும் தமிழக இளைஞர்களே இரு கைகளை இழந்த இந்த இளைஞனை பார்த்தாவது திருந்துங்கள்.
தகவல் உதவி
NDTV.COM
22-05-2016
http://www.ndtv.com/india-news/he-wrote-his-class-12-exams-with-his-feet-and-scored-71-per-cent-1408671?fb
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment