Followers

Wednesday, May 04, 2016

திப்பு சுல்தான் - மே 4 நினைவு தினம்!

சுல்தான் பதெஹ் அலி பாதுஷா என்ற இயற்பெயரையும் அனைவராலும் திப்பு என்றும் அழைக்கப்பட்ட திப்பு சுல்தான் நவம்பர்-21 1750-ம் ஆண்டு பெங்களூர் அருகில் இருக்கும் தேவனஹள்ளி என்ற சிற்றூரில் அன்றைய மைசூரின் மன்னன் ஹைதர் அலிக்கு மூத்த மகனாக பிறந்தார்.

மரபு வழி மன்னர் பரம்பரையில் பிறக்காமல் ஒரு தளபதியின் மகனாய் பிறந்து போர் வீரனாக , பின்னர் தளபதியாக தனது தனிப்பெரும் ஆளுமைகளால் மைசூர் தரணி போற்றும் தலை மகனாகவும், மன்னராகவும் உயர்ந்தவர் ஹைதர் அலி. தன் மகன் திப்பு சுல்தானை தனது ராஜ்யத்தை ஆள்வதற்கான ஆளுமைகளோடும் ஆற்றலோடும் வளர்பதில் தனி கவனம் செலுத்தினார். தன் மகனுக்கு தானும், மைசூரின் தலைசிறந்த ஆசிரியர்களையும் கொண்டு கற்பித்த கல்வியின் விளைவாய் உருது, பாரசீகம், அரபி போன்ற மொழிகளில் தேர்ந்தவராகவும் நிர்வாக துறைகளின் நுணுக்கங்களையும் கற்றவராகவும் திப்பு சுல்தான் உருவாக்கினார். மறுமுனையில் சிறந்த அனுபவம் வாய்ந்த போர் வீரராகிய காஜீ கான் அவர்கள் மூலம் பலகட்டமான போர்கலைகளும், போர்தந்திரங்களும் கற்றுக்கொண்டார்.

திப்புவின் வளர்ப்பின் ஒவொரு காலகட்டத்திலும் தனி கவணம் செலுத்திய ஹைதர் அலி இன்னொன்றையும் உணராமல் இல்லை அதாவது தன்னால் விஸ்திகரிக்க பட்ட மைசூர் ராஜ்ஜியம் ஒருபுறம் நிஜாம்களாலும், மறுபுறம் மராத்தியர்களாலும் இன்னொரு புறம் தம்மை விட பலமடங்கு பலம் வாய்ந்த ஆங்கிலேயர்களாலும் என மும்முனை அச்சுறுத்தலை சூழ்ந்திருக்கிறது என்பதையும் தனக்கு பின்னால் மைசூரை ஆளப்போகும் திப்பு அறிவையும் அனுபவத்தையும் ஒரு சேர பெற்று இருக்க வேண்டும் என்பதை அறிந்தே இருந்தார். எனவே படைகளின் அணிவகுப்பை பார்வையிடும் போதும் , படைகளின் நகர்வுகள் குறித்தான ஆலோசனைகளின் போதும்,முக்கிய நிர்வாக முடிவுகளின் போதும் திப்புவை எப்பொழுதும் உடன் வைத்து கொண்டார்.

இததகைய அறிவையும் அனுபவத்தையும் ஒருசேர பெற்றாதாலேயே பிற்காலத்தில் தந்தையை விஞ்சிய தனயனாய், மாசற்ற ஆட்சியயை தந்த தலைவனாய் ஏனைய மனர்களை போல் இல்லாமல் யுத்தகளத்தில் சக வீரர்களோடு போராடி மாய்ந்திடும் அளவிற்கு மரபு வழி வீரனாய் திப்பு மாறினார் என்பதை அவரலாறு நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

இவ்வாறான இளமைப்பருவம் கடந்து வாலிப வயதை அடைந்ததும் ஒருவர் பின் ஒருவர் மறித்து போய்விட மூன்று மனைவிகளை மனந்த திப்பு தனது நேசத்திற்கு உரிய மூன்றாம் மனைவி கதிஜா ஜமானி பேகம் மரித்த 1797-க்கு பின்பு தன் மரணம் வரை வேறு திருமணம் செய்துகொள்ளவில்லை. மற்ற மன்னர்கள் போல் ஒழுங்கீனங்களிலும் சல்லாபிக்கவில்லை. தன் வாழ்நாள் முழுவதும் தாய் தந்தையர் மீது நேசம் மதிப்பும் கொண்ட மகனாய் இருந்ததால் தம் பெற்றோர்கள் போதித்த உயரிய விழுமியங்கள் அவர் வாழ்நாள் முழுவதும் அவர் மீது ஆதிக்கம் செலுத்தவே செய்தது.

இளவரசர் திப்பு ஆரம்ப காலங்களில் ஹைஅலிதர் அலி அவர்கள் மராத்தியர்களுக்கு எதிராகவும் ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும் முன்னெடுத்த போர்களில் பங்கெடுக்கவில்லை என்றாலும் ஹைதர் அலியின் இறுதி காலத்தில் ஹைதர் அலி அவர்களின் வலது கரமாக நின்று போரிட்டு பல வெற்றிகளுக்கு காரணம் ஆக திகழ்ந்தார். திப்புவின் வீரத்தையும் யுத்த தந்திரங்களையும் நேரில் கண்ட ஹைதர் அலி தனது முதுமை காலத்தில் தனது அதிகாரம் முழுமையாக திப்புவிடம் கைமாறும் காலம் நெருங்குவதை உணர்ந்து கொண்டார்.

அதன் முதல்கட்டமாக ஐநூறு குதிரை வீரர்களுடன் சில மாவட்டங்களையும் திப்புவின் ஆளுகைக்கு கீழ் தந்தவர் ஜூன் 19, 1767-ம் ஆண்டு முதல் திப்புவின் முதல் வேலையை ஒப்படைத்தார் ஹைதர் அலி. தனக்கு பொறுப்பு வழங்கப்பட்ட பின் வந்த முதல் போரிலேயே ஆங்கிலேயருக்கு எதிரான யுத்தத்தில் திப்பு தன் படையுடன் தெற்கு நோக்கி முன்னேற வேண்டும் என கட்டளை பிரபிக்கப்பட அதன்படி ஆங்கிலேயரை வீழ்த்தி அவர்களை அந்த இடத்தை விட்டு விரட்டிய திப்பு வானியபாடி மற்றும் திருபட்டூர் கோட்டைகளை கைப்பற்றினார். அதை தொடர்து மலபாரை நோக்கி நகரதொடக்கியவர் மங்களூர் கோட்டையை கைப்பற்றி ஆங்கிலேயரை மலபாரில் இருந்து மெட்ராசை நோக்கி நோக்கி விரட்டியடித்தார்.

அதே நேரத்தில் ஆங்கிலேயர்களுக்கு துணை நின்ற மராத்தியர்களுக்கு எதிரான ஒரு முழுநீள யுத்தத்தை முன்னெடுத்த திப்பு மராத்தியர்களை வீழ்த்திய கையோடு எண்பதாயிரம் வீரர்களை திரட்டிக்கொண்டு மீண்டும் ஆங்கிலேயரை நோக்கி திரும்பினார் இதில் கர்நாடகாவை நோக்கி முற்றுகை இட வந்த கர்னல் பைலி படைகளை July 1780-ம் ஆண்டு முற்றிலும் வெற்றிகொண்டு கர்னல் பைலியையும் அவரோடு சுமார் நூற்றி ஐம்பது வீரர்களையும் கைது செய்தார்.

இதுபற்றி ஆங்கிலேயர்கள் கீழ்க்கண்ட வார்த்தைகளால் யுத்த இழப்புகளை விவரிக்கிறார்கள்

“Sir Thomas Munro described the disaster of Colonel Baillie’s army as “the severest blow that the English ever sustained in India”. (கர்னல் பைலி ராணுவம் சந்தித்த இழப்பு அதுவரை இந்தியாவில் அங்கிலேயர்கள் சந்திக்காத மிகப்பெரிய இழப்பாக இருந்தது)

இதன் பின்னர் திப்பு சுல்தான் தன்னுடைய படையுடன் மதராஸை நோக்கி நகரத்தவர் ஆற்காடு கோட்டைகளை கைப்பற்றினார். பின்னர் கர்நாடகா, மலபார், மதராஸ் என திப்பு முன்னேற ஆற்காடு கோட்டையும் அவரது கட்டுப்பாடிற்குள் வந்தது. இதன் பின்னர் தென் இந்தியாவின் வரலாறே முற்றிலுமாக மாறத்தொடங்கியது என்கிறார் “அய்ரே கோட்” என்னும் மேலைநாட்டு அறிஞர்

“followed up his success at that time to the gates of Madras”, writes Sir Eyre Coote, “he would have been in possession of the most important fortress ,and the history of Southern India would have taken a different turn”

மதராஸை கைப்பற்றிய பின்னர் தமிழகத்தின் தஞ்சை வரை பின்தொடர்ந்து வந்தவர் தஞ்சையில் கர்னல் பிரைட் வெயிட் படைகளை பிப்ரவரி18, 1782-ல் வீழ்த்தி பல தொடர்வெற்றிகள் மூலர் அக்காலத்திலேயே தன்னிகரில்லா தளபதியாக முனேறி கொண்டிருந்தார். மறுபுறம் ஆங்கிலேயருக்கு திப்பு என்ற பெயரை கேட்டவுடன் அச்சமும் பதற்றமும் பற்றிக்கொள்ள தொடங்கியது அடுத்த நகர்விற்காக பாசறை அமைத்து காத்திருக்க டிசம்பர்
26, 1782.-ம் ஆண்டு ஹைதர் அலி இறந்து விட்டார் என்ற செய்தி எட்ட சித்தூருக்கு திரும்பிய திப்புவுக்கு அப்பொழுது வயது 32 அகவை.

ஹைதர் அலி மரணித்து திப்பு அரியணை ஏறும் பொது மைசூர் ராஜ்ஜியம் வடக்கிலே கிருஷ்ணா நதியும் மேற்கிலே அரபி கடலும் கிழக்கிலே கிழக்கு தொடர்ச்சி மலையும் தெற்கிலே திருவிதாங்கூர் வரை பறந்து விரிந்து இருந்தது.

தனது இளமை முழுக்க யுத்தத்திலேயே செலவழித்த திப்பு முப்பத்தி இரண்டு வயதில் அரியணை ஏற இந்தியாவில் இருந்து ஆங்கிலேயரை துடைத்தெறிய சங்கல்பம் எடுத்துக்கொண்டவர் உள்நாட்டு அளவில் திடகாத்திரமான நிர்வாக கட்டமைப்புகள் இருக்க்கும் பட்சத்தில் இன்னும் வீரியத்துடன் எதிரிகளை எதிர்க்கலாம் என்று முடிவு செய்தார். இதனால் உள்ளுக்குள் பல சீர்திருத்தங்களை செய்யத் தொடங்கினார். ஆங்கிலேயரை எதிர்கொள்வதற்காக நவீன ஆயுதங்களை தயாரிப்பது உட்பட பிறப்பிக்கபட்ட நிர்வாக சீர்திருத்தங்கள் அனைத்தும் போர்கால அடிப்படையில் அமல் படுத்த பட்டது.

மற்ற மன்னர்களை போல சர்வாதிகார தன்மையுடன் இல்லாமல் நம்முடை குடிமக்களின் அதிருப்தியை நாம் பெற்றுக்கொள்வதென்பது நமக்கெதிராக நாமே போர் தொடுத்துக் கொள்வதற்குச் சமமானது, மக்கள்தான் நம் கவசம், நமக்கு அனைத்தையும் வழங்குபவர்கள் மக்கள்தான் என்று உறுதியாக நம்பினார்.

“நம்முடைய சாம்ராச்சியத்தின் வலிமையனைத்தையும், வெறுப்பனைத்தையும் சேமித்து வையுங்கள், அவை அனைத்தும் அந்நிய எதிரிகளின் மீது மட்டும் பாயட்டும்.” என்று தன் கோட்டை சுவரில் எழுதி வைக்கும் அளவிற்கு திப்பு தன் மக்கள் மீது பேரன்பையும் இந்த மண்ணை அடிமைபடுத்த என்னும் அங்கிலேயர் மீதும் அவர்களுக்கு துணை நிற்கும் மராத்திகள் மீதும் பெரும் கோபம் கொண்டிருந்தார் என்பது விளங்கும்.

தூரநோக்கு சிந்தனை கொண்டிருந்த திப்பு அந்த சிந்தனைக்கு செயல் வடிவம் தருவதற்கு தன் துணிவையே துணை என கருதியவர். தன் துணிவோ மக்கள் என ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதும் தெளிவாக புரிகிறது.

காலனி ஆதிக்கத்தை இந்தியாவில் இருந்தே விரட்ட ஆங்கிலேய அரசின் அன்றைய எதிரிகளான பிரெஞ்சு, துருக்கி போன்ற நாடுகளோடு நட்புறவை வளர்ப்பதன் மூலம் தன் ராஜ்ஜியம் வலிமைபெறும் என்பதோடு அது எதிரிகளுக்கு அட்சத்தையும் ஏற்படுத்தும் என்று புரிந்திருந்தார். இந்தியாவை அடிமைத்தளையில் இருந்து விடுவிக்கவும் அது உதவும் என நம்பிய திப்பு தமக்கு என ஒரு அயலுறவு கொள்கையே அந்த காலத்திலேயே வகுத்து வைத்திருந்தார் என எண்ணுகையில் நமக்கு அது வியப்பளிக்கிறது.

வளமும் வலிமையையும் ஒருசேர பெற்ற ராஜ்யமாக மைசூர் வளர்ச்சி கொண்டிருக்க திப்புவை வீழ்த்துவதற்காக ஆங்கிலேயர்கள் மராத்திய புரூஷ்வா மன்னர்களோடும், நிஜாம்களோடும் இணைந்து திப்புவை வீழ்த்த முயற்ச்சிகள் மேற்கொண்டனர்.

அதன் தொடர்ச்சியாக ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் வாரேன் ஹேஸ்டிங் மராதியர்களுடன் 1782-ம் ஆண்டு மே மாதம் ஒரு ஒப்பத்ததின் மூலம் ஆங்கிலேயருக்கும் மராத்தியர்களுக்கும் இடையிலான முரண்பாடுகளை களைந்து இருவரும் சேர்ந்து திப்புவை எதிர்பது என்று முடிவுக்கு வந்தனர். மராத்தியர்கள் ஆங்கிலே ஏகாதிபத்தியம் இந்தியாவில் காலூன்ற துணை நின்றார்கள் என்பது வரலாறு ஆனால் இவர்களின் வழிவந்தவர்கள் தான் இன்று மாசற்ற மாவீரன் துப்புவின் வரலாற்றை கற்பனை என கூறுவது வரலாற்று விந்தையாக இருக்கிறது.

ஆங்கிலேயர்கள் உடனடியாக மராத்திகள் மற்றும் நிசாம்களின் கூட்டு படையோடு இணைந்து ஒரு மும்முனை தாக்குதலை முன்னெடுக்க திட்டமிட்டார்கள். அதன் முதல் கட்டமாக பெரும் படையோடு ஜெனரல் மாத்தியூஸ் தலைமையில் மலபார் கோட்டையை திடீர் என தாகுதல் நடத்தினர். இந்த செய்தியை அறிந்த திப்பு சுல்த்தான் கோட்டை பாதுகாப்பிற்கு தன் தளபதி லுப்தி அலி பேய்க் தலைமையில் படையை அனுப்பி வைத்தார் ஆனால் படை வந்து சேர்வதற்குள் மலபார் கோட்டை முழுமையாக மார்ச்9, 1783-ம் ஆண்டு ஆங்கிலேயர் வசம் ஆனது.

பின்பு நடந்ததை வரலாற்றாசிரியர்கள் இவ்வாறு விவரிக்கிறார்கள்

Orders were given to shed blood of everyman who was taken under arms: and some of the officers were reprimanded for not seeing those orders rigidly executed” (Mill,History of British India). (ஆங்கிலேய படைகளை எதிர்க்கும் மண்ணின் மைந்தர்களை கொன்று மலபாரில் காணும் இடம் எல்லாம் மரண ஓலங்களையும், ரத்த ஆற்றையும் ஓட செய்தார்கள்)

யுத்த நெறிகளை கடந்து தன் படையையும் தன் மக்களையும் கொன்றொழித்த ஆங்கிலேய படையினரின் செயல் கேட்டு கொதித்து எழுந்த திப்பு தன் தலைமையில் மேங்களூரை நோக்கி விரைந்தவர் ஆங்கிலேயர்களை துவம்சம் செய்து மலபாரை மீண்டும் தன்வசம் ஆக்கி ஆங்கிலேய தளபதிகள் முதற்கொண்டு அனைவரையும் சிறை பிடித்தார். வேறு வழியில்லாமல் ஆங்கிலேயர்களே கோட்டையை திப்புவிடம் விட்டுவிட்டு சரணடைந்தனர்.
He delivered the fort to Tipu Sultan, “under articles”, says Campbell, “the most beneficial I could ask for the garrison, and which the Nawab has most honourably and strictly adhered to”. Military Consultations. Madras Records).

திப்புவிடம் கிடைத்த பெரும் தொடர் தோல்விகள், மங்களூரில் இட்ட சரனாகிதி ஒப்பந்தம் இந்தியாவை அடிமைபடுத்துவதற்கு பெருந்தடையாக இருக்கிறது என்று நினைத்த ஆங்கிலேயர்கள் திப்புவை யுத்தத்தில் வீழ்த்துவது கடினம் வஞ்சத்தால் மட்டுமே வீழ்த்த முடியும் என்று முடிவு செய்து வஞ்சக வலைகளை விரிக்க தொடங்கினர்.

அதோடு மராத்திய, நிஜாம்கள் மற்றும் கிழக்கு இந்திய கம்பெனியின் இராணுவத்தையும் ஒருகிணைத்து முறைபடுத்தி பெரும் படையை கொண்டு திப்புவை பல முனைகளில் தாக்குவது என்னவும் தாக்கி கைபற்றபட்ட திப்புவின் நிலங்களை தமக்குள் பகிர்ந்து கொள்வது எனவும் ஒப்பதம் இட்டார்கள் திப்புவின் அமைச்சர்கள் உதவியோடு கீழறுப்பு வேலைகளையும் செய்து முடித்து இருந்தார்கள்.

மிகதீர்கமான திட்டமிடலுடன் மிக நேர்த்தியான நகர்வுகளுடன் இந்த மூன்றாம் மைசூர் யுத்தம் என வரலாற்றில் முக்கிய இடம்பெற்றிருக்கிறது May 26, 1790-ல் ஜெனரல் மேதிவுஸ் தலைமையில் முதல் நகர்வாக கோயம்பதூர் நோக்கி நகர்ந்த பிரிட்டிஷ் படை கோயம்ப்புத்தூரை July 21 கைப்பற்றியது.

தொடர்ச்சியாய் மைசூரை நோக்கி படை நகர ஏகாதிபத்திய படையை தடுத்து நிறுத்தும் விதமாய் சத்திய மங்கலத்தில் திப்பு பாசறை அமைத்து அமர்த்திருந்தார் சத்தியமங்கலத்தில் நடந்த கடுமையான யுத்தத்தில் ஆங்கிலேய படை துவம்சம் செயப்பட்டு திப்புவிர்க்கு மகத்தான வெற்றி கிட்டியதது. இது ஆங்கிலேய முகாமில் பேரச்சத்தை உருவாக்க மறுமுனையில் தொடர்ச்சியாக ஆங்கிலேய முக்கிய படைகளை வீழ்த்துவதற்கு திப்பு முனேறிகொண்டிருந்தார். இந்நிலையில் திப்புவின் தலைமை நிதியாளர் கிறிஸ்னாராவின் சதியால் பெங்களூரு கோட்டை வீழ்த்தபட்டு 400 மேற்பட்டவர்கள் கொல்லப்பட திப்புவிற்கு தன்னுடைய அதிகாரிகள் விலைபோனது புரிய தொடங்கியது.

இந்நிலையில் இந்த போர்களைத்தொடர்ந்து இரு தரப்பாருக்கும் இடையில் சில அமைதி பேச்சு வார்த்தைகளும் அரங்கேறின திப்பு இந்த இடைப்பட்ட காலத்தில் சிவில் கட்டமைப்புகளில் அதிக கவனம் செலுத்த தொடங்கினார்.

தொடர் யுத்தங்களால் பொருளாதாரம் சீர்குலைந்து இருந்தபோதும் கோவில்களுக்கு மானியம், விவசாய மானியம், உழுபவனுக்கே நிலம் போன்ற புரட்சிகரமான திட்டங்களும், நவீன தொழிற்சாலைகள், நவீன ஆயுதங்கள் மற்றும் ராக்கெட் தொழில் நுட்பம் போன்ற விசயங்களில் பலத்தை பெருக்குவதில் அதிக கவனம் செலுத்தினார். திப்பு ஒரு வீரன் மட்டும் அல்ல மிக சிறந்த நிர்வாகியும் கூட பல்வேறு நெருக்கடியானசூழலில் தன் நிர்வாக திறனால் தன் மக்களுக்கு அமைதியையும் அபிவிருத்தியையும் ஊர்ஜிதபடுத்தினார் என்பதை ஆங்கிலேயர்களே கீழ் கண்டவாறு பதிவு செய்கிறாரர்கள்.

He highly developed agriculture and industry in his dominion and initiated progressive agricultural reforms beneficial to the peasantry. Mill, the celebrated English historian, considers his territories to be “the best and its population the most flourishing in India” and Tipu Sultan, a ruler who “sustains an advantageous comparison with the greatest princes of the East” (History of India, London 1848)

மேலும் கடல் வாணிபத்தை பெருக்குவதிலும் தன் கடல் வாணிபம் கொள்ளைளையர்களால் எந்த அச்சுறுத்தலுக்கும் ஆளாகாத வகையில் கடல் எல்லைகளை பாதுகாக்கும் நடவடிக்கையும் மேற்கொண்டிருக்கிறார் இந்த நடவடிக்கை சர்வதேச வர்த்தகத்திற்கு மேலும் உதவியது.

He was a well-wisher of his people and considered them as a “unique trust held for God, the real Master”. (Quoted from Records in the National Archives of India, by Muhibbul Hassan Khan in his “History of Tipu Sultan “]

லார்ட் வெள்லேஸ் ஆங்கிலேய இந்தியாவின் கவர்னராக பொருப்பேற்று January 1799 மெட்ராஸ் வந்தவர் மெட்ராஸில் நிசாம்களுடனும் மரதியர்களுடனும் இரகசிய ஆலோசைனைய மேற்கொண்டு திப்புவின் ராஜ்யத்தில் தம்மிடம் விலை போனவர்களின் வலை பின்னலை வலிமைப்படுத்தினார்.

பிப்ரவரி 1799-ம் ஆண்டு ஜெனல் ஹேம்ஸ் வேலூர் தொடங்கி கனூர் நோக்கி வரை படையெடுத்தார். அதே நேரத்தில் மராத்தியர்களும் நிசாம்களும் மைசூர் நோக்கி நகர வெலேஸ்லீ ஹைதராபாத்தில் இருந்து கட்டளை பிறப்பிக்க யுத்தம் முழுவீச்சில் பன்முக தாக்குதலோடு நடந்தேற தொடங்கியது.
மறுமுனையில் தமது பிரதம அமைச்சர்கள் மிர்குலாம், திவான் மற்றும் பூர்நைய்யா போன்றவர்கள் எல்லாம் வெள்ளையர்களிடம் சோரம்போக ஆங்கிலேயப்படை ஏப்ரல் 17, 1799-ல் ஸ்ரீரங்கபட்டினத்தை தொட்டிருந்தது.

சிரிரங்கபட்டினத்தை தாக்குவதற்கு மே 4-ம் தேதி நேரம் குறிக்கப்பட்டு மிர்சாதிக் மற்றும் பூர்னைய்யா போன்றவர்களால் திப்புவின் ராணுவ தடுப்பை சீர்குலைத்து அங்கிலேயர்கள் கோட்டைக்குள் நுழைய வழி ஏற்படுத்தினார்கள்.

கோட்டையில் உணவு அருந்தி கொண்டிருந்த திப்புவிற்க்கு இந்த செய்திகள் தரப்பட கனநேரத்தில் தன் எதிரிபடைகளை நோக்கி பாய்ந்த திப்பு சகவீரர்களோடு போராடி மாய்ந்தார்.

அறிவும், ஆற்றலும், புதுமையும், புரட்சியும்,வீரமும்,விவேகமும் ஒருங்கே பெற்ற ஒரு மாவீரன் இந்திய வரலாற்றில் திப்புவிர்க்கு முன்பும் பிறக்கவில்லை திப்புவிற்க்கு பின்பும் பிறக்கவில்லை. தன் வாழ்நாளில் பெரும்பகுதியை யுத்ததிலேயே செலவழித்த திப்பு வாசிப்பில் தீராத ஆர்வமும் பதெஹ்-அல்-முஜாஹிதீன் என்ற புத்தகத்தையும் எழுதி இருக்கிறார். இந்த புத்தகம் ராணுவ மேலானை குறித்த புத்தகமாகும். முஜாயித்-அல்-முஜாஹிதீன் என்ற தன்னுடைய ஜும்மா உரைகளின் தொகுப்பையும் எழுதி இருக்கிறார்.

ஆம் திராணி அற்றுக்கிடந்த தன் தேசத்தின் திராணிகளை திரட்டி ஆங்கிலேய ஏகாதிபத்திய தீமைக்கு எதிராய் திமிர்கொண்ட வேங்கையையாய் தீரமுடன் போரிட்டு தியாகியானார் திப்பு.

- அப்பாஸ்

mohamedguvera@gmail.com

- See more at: http://www.thoothuonline.com/archives/76214#sthash.OuHEh69x.dpuf

No comments: