

லண்டன் மேயர் சாதிக் கோவிலுக்கு வந்தார்!
--------------------------------------------
லண்டன் மேயராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் சாதிக் தனக்கு ஓட்டளித்த மக்களின் நம்பிக்கைக்குரிய இடங்களுக்கு சென்றுள்ளார். ஸ்வாமி நாராயணா கோவிலுக்கு தேர்ந்தெடுப்பதற்கு முன்பு சென்றுள்ளார். தனக்கு ஆதரவளித்த மக்களின் நம்பிக்கையை மதிப்பதில் தவறில்லை. ஆனால் அந்த நம்பிக்கைகளை தனது வாழ்வில் சுவீகரித்துக் கொண்டால் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களாகி விடுவோம்.
இஸ்லாமிய நம்பிக்கையை பொருத்த வரை ஒரு இறைவன் என்பதையும் பல கடவுள்கள் என்பதையும் ஒன்றாக்குவதை அனுமதிக்கவில்லை. கொள்கையில் முதலில் உறுதி வேண்டும். எனவே சாதிக் அவர்களின் நம்பிக்கை என்னவென்று தெரியவில்லை. அதனை இறைவனே அறிவான். எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையை இஸ்லாம் அங்கீகரிக்காது என்பதை மட்டும் சாதிக் போன்றவர்களுக்கு சொல்லிக் கொள்கிறோம்.
தலையில் தொப்பி போட்டுக் கொள்வது, நோன்பு கஞ்சி குடிப்பது, தர்ஹாவுக்கு சென்று போர்வை போர்த்துவது போன்ற நாடகங்களையும் நாம் அங்கீகரிக்கக் கூடாது. ஒரு மனிதனுக்குள் இரண்டு நேரெதிர் கருத்துக்கள் குடியேற வாய்ப்பில்லை.
தேர்தலில் நின்று வெற்றி பெற வேண்டுமென்றால் இது போன்ற சமரசங்களை எந்த நாடாக இருந்தாலும் அவசியம் செய்துதான் ஆக வேண்டும் போல் இருக்கிறது.
இறைவன்தான் நம் அனைவரையும் உலக ஆசா பாசங்களிலிருந்து காத்து ஏகத்துவ சிந்தனையில் நிலைத்திருக்கச் செய்ய வேண்டும்.
3 comments:
Suddenly mayor became kafir
எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையை இஸ்லாம் அங்கீகரிக்காது என்பதை மட்டும் சாதிக் போன்றவர்களுக்கு சொல்லிக் கொள்கிறோம்.
ர்ஆன் 2:136
மத நல்லிணக்கத்திற்கு இதை விட சிறந்த ஒரு வேத வசனம் வேண்டுமா? மேலே பதிந்த பல சம்பவங்களை உண்மைப் படுத்துகிறது இந்த குர்ஆனிய வசனம்!
தம்பி சுவனப்பிாியன் உங்கள் பித்தலாட்டத்தனத்திற்கு அளவே கிடையாதா ?
அரேபியன்தான் உலகில் உத்தமன் இஅரேபியன்தான் அறிவாளி அரபியன் வாழ்வதுபோல் உடையாலும் பழக்க வழக்கத்தாலும் வழிபாட்டாலும்பண்டிகை கொண்டாட்டம் என்றாலும் பெயா் என்றாலும் அரசியல் என்றாலும் வெட்டு குத்து கொலை குண்டு வெடிப்பு என்றாலும் அரேபியன் போலவே வாழ வேண்டும் என்ற அரேபிய வல்லாதிக்கம் போதிக்கும் குரான் ஹதீஸ முஹம்முது இருக்கும் வரை உலகில் மனித இரத்தக்களறிக்கு முடிவே இருக்காது.
அந்த வழியை பின்பற்றாத சாதிக் அவர்களை இறைவன் ஆசீா்வதிப்பான் . தன்னை ஒர ஆன்மிகவாதியாக காட்டிக் கொள்ளும் திரு.சாதிக் அவர்கள் அரேபிய வல்லாதிக்க அடிமை அல்ல என்பதை எடுத்துக் காட்டியிருக்கின்றாா்.. நமது பாரத ஜனாதிபதி திரு.அப்துல் கலாம் போல். திரு.சாதிக் அவர்கள் ஆன்மீகத்திற்கு ஒரு எடுத்துக் காட்டு.
ஆன்மீகம் வேறு அரேபிய வல்லாதிக்கம் வேறு.
இரண்டையும் குழப்பாதவா்
திரு.சாதிக் அவர்கள்.
வாழ்க. இறைவனின் அருள் என்றும் திரு.சாதிக் அவர்களுக்கு உண்டு.
சுவனப்பிாியன் போன்ற அரேபிய அடிமைகளுக்கு இது ஒரு நாளும் புாியாது.
எகிப்து ஈரான் ஈராக் போன்ற நாடுகளில் சிலை வணக்கம் இருந்த காலத்தில் பிரமாண்டமான பிரமீடுகளை அமைத்தாா்கள்.கல்விமற்றும் அனைத்துத்துறைகளில் மேன்மை பெற்று சிற்நது விளங்கினாா்கள். எப்போது மேற்படி நாடுகளை இசுலாம் கொடும் யுத்தம் நடத்தி கைப்பற்றியதோ அரேபியா்கள் கைப்றினாா்களோ அன்றே அந்த நாடுகள் தங்கள் மகிமையை இழந்து விட்டன.
சாித்திரம் இதற்கு சான்று.ரொம்பதான் குதிக்ின்றாா் சுவனப்பிாியன்.
திலகம் இட்டுக் கொண்ட அவரது நெற்றியைப் பாருங்கள்.எவ்வளவு தெய்வீகமாக உள்ளது.
அவரது முகத்தை பாா்ப்பதில் தனி மகிழ்ச்சியாக உள்ளது. படத்தை வெளியிட்டதற்கு நன்றி
Post a Comment