
மோடியின் இரண்டாண்டு கால சாதனை - அவமானப்பட்ட பிஜேபியினர்.
மோடியின் இரண்டாண்டு கால சாதனைகளை மக்களுக்கு விளக்க பிஜேயினர் 'கவுரவ் விகாஸ் யாத்ரா' என்ற நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். குஜராத்தின் கரஞ்ச் சட்டமன்ற தொகுதியில் இந்நிகழ்வு நடைபெற்றது. மேயர், சட்டமன்ற உறுப்பினர்கள், பிஜேபி தலைவர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் ஊர்வலமாக வந்தபோது மக்கள் முட்டையை இவர்கள் மேல் வீசி தங்கள் எதிர்ப்பைக் காட்டினர். அங்குள்ள பெண்கள் சாப்பாட்டு தட்டோடும் கட்டைகளோடும் வீதிக்கு வந்து சப்தம் எழுப்பி அவர்களின் ஊர்வலத்துக்கு எதிர்ப்பைக் காட்டினர்.
மோடியின் வாழ்வு குஜராத்தில் ஆரம்பமானது: அதே குஜராத்தில் மோடியின் அரசியல் வாழ்வு அஸ்தமனதம் ஆவதை இந்நிகழ்வு நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
பண முதலைகளுக்காக உழைக்க ஏற்படுத்தப் பட்டவர்தான் மோடி என்பதை அந்த மக்கள் உணர்ந்ததால் இந்த எதிர்ப்பு. இந்த எதிர்ப்பு நாடு முழுக்க பரவட்டும். மோடியின் காட்டு தர்பார் முடிவுக்கு வரட்டும்.
தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
26-05-2016
http://indianexpress.com/article/india/india-news-india/eggs-thrown-at-bjps-yatra-in-surat-patel-women-hold-protest-2819489/
No comments:
Post a Comment