

சாதி கொடுமையால் தனியாக கிணறு தோண்டிய தாஜ்னே!
மஹாராஷ்ட்ரா மாநிலம் வாஸிம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தாஜ்னே. தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.
'எனது கிராமத்தில் உயர் சாதியினர் உள்ள இடத்தில் தண்ணீர் எடுக்க எனது மனைவியும் உறவினர்களும் சென்றுள்ளனர். நாங்கள் தாழ்ந்த சாதி என்பதால் எனது மனைவியை தண்ணீர் எடுக்க அவர்கள் அனுமதிக்கவில்லை. இழிந்த வார்த்தைகளாலும் எனது மனைவியை திட்டியுள்ளனர். என் மனைவி இதனை வருத்தமோடு சொன்னபோது மனது கனத்தது. வீட்டில் தனிமையில் அமர்ந்து அழுதேன். தண்ணீருக்காக இனி எவனிடமும் கையேந்தக் கூடாது என்று முடிவெடுத்தேன்.
அருகிலுள்ள மாலேகான் நகருக்கு சென்றேன். புதிய உபகரணங்கள் வாங்கி வந்தேன். தினமும் 6 மணி நேரம் 40 நாட்கள் தொடர்ச்சியாக உழைத்தேன். நான் பள்ளம் தோண்டுவதைப் பார்த்து எனது உறவினர்களே கேலி செய்தனர். நான் தோண்டிய இடத்தில் தண்ணீர் பீறிட்டு வந்தது. இன்று எனது கிராம மக்கள் சுய மரியாதையோடு தண்ணீர் பிடித்து செல்கின்றனர். மேல் சாதிக் காரர்கள் தண்ணீர் பிடிக்க இங்கு வந்தால் அவர்களையும் நாங்கள் அனுமதிப்போம்' என்று பெருமை பொங்க கூறுகிறார்.
'இட்டார் பெரியோர்: இடாதோர் இழி குலத்தோர்' இதை உணராமல் ஆண்ட பரம்பரை பேண்ட பரம்பரை என்று சாதி வெறி பிடித்து ஏனப்பா அலைகிறீர்கள்?
தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
08-05-2016
http://timesofindia.indiatimes.com/city/nagpur/Wife-denied-water-Dalit-digs-up-a-well-for-her-in-40-days/articleshow/52168850.cms
1 comment:
இவா்தான் உண்மையான வீரன்.சுயமாியாதைக்காரன்.வாழ்த்துக்கள்.
Post a Comment