Followers

Thursday, May 05, 2016

தேவதாசி முறை மீண்டும் பல மாநிலங்களில் உருவாகிறது!



தேவதாசி முறை மீண்டும் பல மாநிலங்களில் உருவாகிறது!

முன்பு ஒழிக்கப்பட்ட தேவதாஸி முறை இந்துத்வா ஆட்சியில் மீண்டும் பக்தியின் பெயரால் புகுத்தப்படுகிறது. கர்நாடகாவில் எல்லம்மா என்ற கடவுளுக்கு பெண்களை நேர்ந்து விடும் பழக்கம் ஆரம்பமாகியுள்ளது.

மராத்வாடா உஸ்மானாபாத்தில் உள்ள கமலிபாய் நாயக் விரக்தியோடு கூறுகிறார்...

'இதோ இங்கு அமர்ந்திருக்கும் இந்த பசுக்கள் இனி கன்று போடாது. எனவே பாலும் தருவதில்லை. இந்த கிழட்டுப் பசுவை விற்று விட்டு புதிய கறவை பசு வாங்கலாம் என்றால் யாரும் வாங்க வருவதில்லை. பசுவை விற்க மாநிலத்தில் தடையிருப்பதால் எவரும் வாங்க பயப்படுகின்றனர். பசு விற்க முடியாவிட்டால் என்ன? எனது மகள் காவிரியை விற்று விட்டேன்' என்று சொல்லி அழுகிறார்.

கமலிபாயின் கணவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. ஆபரேஷன் பண்ண வேண்டும். வீட்டில் வருமானமும் இல்லை. எனவே அர்ஜூன் என்பவரிடம் பெருந் தொகையை கடனாக வாங்கியுள்ளார். இந்த கடனுக்கு பகரமாக தனது 11 வயது மகள் காவிரியை தேவதாசியாக்கி விடும்படி அர்ஜூன் கேட்டுள்ளார். கமலி பாயும் வேறு வழியின்றி ஒத்துக் கொண்டுள்ளார்.

தேவதாஸியாக மாறிய 11 வயது காவிரி கூறுகிறார் ' நான் பள்ளிப் படிப்பை தொடர விரும்பினேன். ஆனால் நான் தேவதாஸியாக மாறிய பிறகு பள்ளிப் படிப்பைத் தொடர எனது தாய் அனுமதிக்கவில்லை. தேவதாஸியாக மாறவில்லை என்றால் உனது தந்தையை இழந்து விடுவாய் என்று எனது தாய் பயமுறுத்தினார். வேறு வழியின்றி ஒத்துக் கொண்டேன்.

தேவதாஸியாக மாறிய அன்றைய தினம் ஒரு மணப் பெண்ணைப் போல் அலங்கரிக்கப்பட்டேன். புதிய புடவை தந்தார்கள்: கழுத்துக்கு நெக்லஸூம் தந்தார்கள். ஐயர் சில சடங்குகளை செய்து சில உறுதி மொழிகளை எடுக்கச் சொன்னார். அவர் சொன்னது படி செய்தேன். பிறகு பழைய உடைகளை வழக்கமாக உடுத்திக் கொண்டேன்.' என்கிறார் பரிதாபமாக.

இந்த ஒரு கிராமம் மட்டுமல்ல.... ராயல சீமா, குல்பர்கா, பெல்லார், சோலாபூர், போன்ற கிராமங்களில் கீழ் சாதி பெண்கள் மேல் சாதி ஆண்களுக்கு சுகமளிப்பதற்காக பக்தி என்ற பெயரில் பலிகடா ஆக்கப்படுகின்றனர். பெரியாரின் புண்ணியத்தால் நமது தமிழகம் இந்த கொடுஞ் செயலிலிருந்து தப்பித்தது.

மோடிக்களும், அமீத்ஷாக்களும் கொண்டு வரும் இந்த பாசிச ஆட்சியானது இஸ்லாமியருக்கு மட்டும் எதிரானது அல்ல. பெரும்பான்மை இந்து மக்களுக்கும் ஆபத்தான ஒரு ஆட்சி இது. மாட்டை இறைச்சிக்காக அறுப்பதை தடை செய்தால் இஸ்லாமியர் பாதிக்கப்படுவர் என்றுதான் அவர்கள் நினைத்தனர். ஆனால் பசுவையே நம்பி வாழ்ந்து வரும் கோடிக்கணக்கான இந்துக்களின் வருமானத்தை மோடி அரசானது தட்டிப் பறித்துள்ளதை ஏனோ பலரும் அறியவில்லை.

நேரம் கிடைக்'கும் போது மற்ற மாநிலங்களில் தேவதாஸி முறை எவ்வாறு உயிர் பெறுகிறது என்பதை பார்போம்.

தகவல் சேகரிப்பு
யோனேஸ் பவார்
01-05-2016
dnaindia.com

மொழி பெயர்ப்பு
சுவனப்பிரியன்

http://www.dnaindia.com/lifestyle/report-daughters-of-drought-the-vicious-cycle-of-poverty-in-the-parched-lands-of-karnataka-and-maharashtra-2207788















1 comment:

Dr.Anburaj said...


பணத்திற்கான பெண்கள் தங்களை உடலை விற்பது அழகிய பெண்களின் மேல் உள்ள மோகத்தால் காம ஒழுங்கீனம் காரணமாக ஆண்கள் திமிா்பிடித்து பெண்களை ஆசை காட்டி கட்டாயப்படுத்தி பாலியல் வக்கிரங்களுக்கு பயன்படுத்தும் போக்கு இருக்கும் வரை விபச்சாாிகள் இருக்கத்தான் செய்வாா்கள். இன்றைய 5 நடசத்திர ஹோட்டல்களில் இருக்கும் விபச்சாரம் செய்யும் பெண்களை கௌரவமாக call girls / sex workers அழைத்தால் வரும் பெண்கள் பாலியல் தொழிலாளிகள் என்று கண்ணியமாக அழைக்கின்றாா்கள்.

இதுதான் நாம் சாதித்தது. பணக்கார விபச்சாரம் கண்ணியமாகிக்கொண்டிருக்கின்றது.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற இராமாயான பண்பாடு மக்கள் மனதில் நிலை பெறாவிட்டால் -குறிப்பாக ஆண்கள் மனதில் தேவையான அளவில் நிலை பெறவில்லை.பெற வேண்டும்.

ஆவன செயவோம்.

அரபி கலாச்சாரத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கருத்து வலிமையாக வலியுருத்தப்படவில்லை.

குமுஸ் பெண்கள் என்ற இழி நிலையை அரேபிய அசீங்கங்கள் போற்றுகின்றன.